Headlines

உடல் வெப்பத்தை மின்சாரமாக மாற்றும் T-Shirt

உடல் வெப்பத்தை மின்சாரமாக மாற்றும் நவீன டி-சர்ட்டை விஞ்ஞானிகள் உருவாக்கினர். அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாண பல்கலைக்கழக நிபுணர்கள் அதி நவீன டி-சர்ட்டுகளை தயாரித்துள்ளனர். இவை மின்சாரத்தை எடுத்துக் செல்லும் வகையில் மிக குறைந்த எடையுடன் கூடிய மூலப்பொருட்களால் தயாரிக்கபட்டுள்ளது. இந்த டி.சர்ட் அணியும் போது உடலில் இருக்கும் வெப்பம் அதில் உள்ள மூலப்பொருட்களால் மின்சாரமாக மாறும், அதன் மூலம் மிக சிறிய அளவிலான எலெக்ட்ரானிக்ஸ் கருவிகளை இயக்க முடியும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ‘டி சர்ட்டில்’…

Read More

பூமியை நோக்கி வரும் ராட்சத விண்கல்

பூமிக்கு மிக நெருக்கமாக ராட்சத விண்கல் ஒன்று நெருங்கி வந்து கொண்டிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.இந்த விண்கல் இதுவரை  விஞ்ஞானிகளின் ஆய்வு எல்லைக்குள் தென்படவில்லை எனவும், தற்போது திடீரென்று பூமிக்கு மிக அருகில் வந்து கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். வழக்கத்துக்கு மாறாக பூமியை நெருங்கி செல்லவுள்ள இந்த விண்கல் ஆனது 35 மீட்டர் நீளமுடையதாக காணப்படுகின்றது. இந்த விண்கல்லினால் பூமியிலிருப்பவர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றாலும், பூமிக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரத்தின் கால் மடங்கு தூரத்தில் பூமியிலிருந்து விலகிச் செல்லும்…

Read More

இலங்கையர்களுக்கு வாய்ப்பு!

வான்வெளியை உன்னிப்பாக அவதானிப்பதற்கு ஏதுவாக இரவு நேர முகாம் ஒன்றை இலங்கை கோள் மண்டலம் ஒழுங்கு செய்துள்ளது. இதன்மூலம் நாட்டு மக்களின் வானியல் விஞ்ஞான அறிவை விருத்தி செய்வது பிரதான நோக்கமாகும். இதன்படி ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமைகளில் இத்தகைய முகாமொன்றை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் முதலாவது நிகழ்வு எதிர்வரும் 26ம் திகதி இடம்பெறும். இதன்போது வானியல் விஞ்ஞான அறிவை விருத்தி செய்வதும் வானியல் தொடர்பான தகவல்களை பொதுமக்களுக்கு வழங்குவதும் நோக்கமாகும். இந்த முகாம் இரவு 7.00…

Read More

3 சூரியன்களுடன் புதிய கிரகம் கண்டுபிடிப்பு

340 ஒளி ஆண்டு தூரத்தில் 3 சூரியன்களுடன் கூடிய புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஐரோப்பியன் சதர்ன் அப்சர்வேட்டரி (இ.எஸ்.ஓ.) எனப்படும் விண்வெளி அறிவியல் அமைப்பு சிலி நாட்டில் உள்ள நிலையத்தில் ஸ்பியர் எனப்படும் அதி நவீன புதிய கருவி நிறுவியுள்ளது. அதில் மிகப்பெரிய டெலஸ்கோப் பொருத்தப்பட்டுள்ளது. அதன் உதவியுடன் விஞ்ஞானிகள் சமீபத்தில் ஒரு புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர். அதற்கு எச்.டி. 131399 ஏபி என பெயரிட்டுள்ளனர். இக்கிரகம் 3 சூரியன்களை கொண்டது. இங்கு தினமும் 3…

Read More

ஆய்வாளர்களை திகைக்க வைத்த துட்டன்காமன் கத்தி: விண்கல்லால் செய்யப்பட்டது கண்டுபிடிப்பு

பண்டைய எகிப்தின் பதினெட்டாவது வம்ச மன்னன் துட்டன்காமன். 9-வது வயதில் பட்டத்திற்கு வந்த இவன் கி.மு. 1333 முதல் கி.மு. 1324 வரை புதிய இராஜ்ஜியம் என்ற பெயரில் அமைந்த எகிப்தை ஆண்டான். பதவியேற்று சுமார் 9 ஆண்டுகள் மட்டுமே உயிரோடு இருந்தான். இந்நிலையில், 1922-ம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி ஹவார்ட் கார்ட்டர் என்னும் தொல்லியலாளர், பொக்கிஷங்கள் அடங்கிய துட்டன்காமன் மம்மியுடன் கூடிய கல்லறையை கண்டுபிடித்தார். இது உலகம் முழுவதும் ஊடகங்களில் பெரிதும் பேசப்பட்டது….

Read More

சூரியன் – புதன் – பூமி ஒரே நேர்கோட்டில்

 ஒரு நூற்றாண்டுக்கு 8 முறை புதன் கிரகம் சூரியனை கடந்து செல்லும். 2006ஆம் ஆண்டு நடந்த இந்நிகழ்வு 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நடக்கிறது. இந்நிகழ்வை வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, அவுஸ்திரேலியா, இந்தியா,இலங்கை  போன்ற நாடுகளில் காணலாம். இந்த அறிய நிகழ்வு வரும் 9ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. இலங்கை நேரப்படி மாலை 4.15 மணிமுதல் 6.20 மணிவரை நடக்கும் இந்நிகழ்வை வெறும் கண்ணில் பார்க்ககூடாது என விஞ்ஞானிகள் அறிவுறுத்தி உள்ளனர். அடுத்து 2019ஆம்…

Read More