Headlines

பொலிஸ் உத்தியோகத்தர்களின் சம்பளங்கள் அதிகரிப்பு!

பொலிஸ் உத்தியோகத்தர்களின் சம்பளங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களின் சம்பளங்களும் கடந்த ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் 17 வீதத்தினால் உயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சுமார் 83,000 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இவ்வாறு சம்பளம் உயர்த்தப்படவுள்ளது. எதிர்வரும் மாதம் மதல் இந்த சம்பள அதிகரிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது. சம்பள உயர்வு தொடர்பில் திறைசேரியினால் சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளது. பொலிஸ் உத்தியோகத்தர்களின் சம்பளங்களை உயர்த்துவதாக அரசாங்கம் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

லேக்ஹவுஸ் ஊழியர்கள் கூரை மீதேறி ஆர்ப்பாட்டம்

லேக்ஹவுஸ் நிறுவனத்தில் பணியாற்றும் சில ஊழியர்கள் சிலர் தமது சம்பள உயர்வை பெற்றுத்தர கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிலர் கூரை மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Read More

அடிப்படை சம்பளத்தை 40ஆயிரமாக உயர்த்த திட்டம்!

தொழிலாளர்களின் ஆகக்குறைந்த அடிப்படைச் சம்பளம் 40 ஆயிரம் ரூபாவாக உயர்த்தப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் இன்று நடைபெற்ற தேசிய தொழிலாளர் சங்கத்தின் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும், தொழிலாளர்களின் ஆரம்ப அடிப்படைச் சம்பளத்தை 40 ஆயிரம் ரூபாவாக உயர்த்துவது தொடர்பில் அரசாங்கம் தொழில் கொள்வோருடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தி வருகின்றது. இதற்கு அனைவரும் தமது ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும்…

Read More

அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தை இரு மடங்காக அதிகரிப்பதற்கு திட்டம்

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தை இரு மடங்காக அதிகரிப்பதற்கு அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு திட்டமிட்டுள்ளது. இதனடிப்படையில் அரச சேவைத் துறையினரின் அடிப்படைச் சம்பளம் 11,730 ரூபாவிலிருந்து 24,230 ரூபா வரை அதிகரிக்கும் என அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். இதேவேளை அரச ஊழியர்களுக்கான தேசிய சம்பள கொள்கையினை தயாரிக்கும் நடவடிக்கையினை துரிதமாக நிறைவு செய்யவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். #News1st

Read More

கிராமசேவை உத்தியோகத்தர்களின் கொடுப்பனவுகள் அதிகரிப்பு.!

கிராமசேவை உத்தியோகத்தர்களினது காரியாலயக் கொடுப்பனவுகள் எதிர்வரும் வாரங்களில் அதிகரிக்கபடவுள்ளதாக உள்துறை அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். ஆணையிரவு மத்திய மகா வித்தியாலயத்தில் நேற்று (7) நடைபெற்ற கிராமசேவை உத்தியோகத்தர்களின் வருடாந்த கூட்டத்தில் கலந்துகொண்டபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Read More

தனியார் துறையினருக்கு இரு கட்டங்களில் சம்பள அதிகரிப்பு

– அழகன் கனகராஜ் – சேவையாளர்களின் வரவு – செலவுத்திட்ட நிவாரணக் கொடுப்பனவு தொடர்பிலான சட்ட மூலத்தின் ஊடாக தனியார் துறையினருக்கான சம்பள அதிகரிப்பு இரண்டு கட்டங்களில் அதிகரிக்கப்படும் என்று தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் டப்ளியு.டி.ஜே. செனவிரத்ன தெரிவித்தார். வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் சட்ட மூலத்தை நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (11) சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Read More

மஹிந்தவின் மாதாந்த வருமானம் 4,54,000 ரூபா

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பாராளுமன்ற உறுப்பினருக்குரிய சம்பளத்தையும், முன்னாள் ஜனாதிபதிக்குரிய ஓய்வூதியத்தையும் பெற்று வருகிறாரென நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். கடந்த மார்ச் மாதம் முதல் இதனைப் பெற்று வருவதாகக் குறிப்பிட்ட அவர், இதன் படி மாதாந்தம் 4 லட்சத்து 54,000 ரூபாவை வருவாயாக பெற்று வருவதாகவும் சுட்டிக்காட்டினார். மஹிந்த ராஜபக்ச, ஓய்வூதியமாக மாதாந்தம் 3 லட்சத்து 49 ஆயிரமும் பாராளுமன்ற உறுப்பினர் சம்பளமாக ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாவும் பெற்று வருவதாகவும் சம்பளப்…

Read More

தனி­யா­ருக்கு 2500 ரூபா சம்­பள அதி­க­ரிப்பு?

தனியார் துறை­யி­ன­ருக்­கான ரூபா 2500 சம்­பள உயர்வு வழங்கல் மற்றும் அடிப்­படைச் சம்­பளம் ரூபா 10000 ஆக இருக்க வேண்டும் என்ற விட­யங்கள் சட்­ட­மாக்­கப்­படும் எனத் தெரி­வித்த தொழில் மற்றும் தொழி­லாளர் உற­வுகள் அமைச்சர் ஜோன் சென­வி­ரட்ண. ஊழியர் சேமா­லாப நிதி, நம்­பிக்கை நிதி இரண்­டையும் இணைத்து ஓய்­வூ­தியத் திட்­ட­மொன்று அறி­மு­கப்­ப­டுத்­த­வுள்­ள­தா­கவும் தெரி­வித்தார். கொழும்பில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் உரை­யாற்றும்போதே அமைச்சர் ஜோன் சென­வி­ரட்ண இதனை தெரி­வித்தார். கடந்த 100 நாள் ஆட்­சியில் நிதி­ய­மைச்சர் அரச…

Read More