Headlines

சவூதியில் இலங்கை பெண்ணுக்கு இன்று மரண தண்டனை – சுமந்திரன் எம்.பி.

முறையற்ற உறவு தொடர்பில் சவூதியில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள இலங்கை பெண்ணுக்கு இன்று தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சவூதி சட்டத்தின்படி அவருக்கு கல்லால் எறிந்து இந்த தண்டனை நிறைவேற்றப்படும் என்று இன்று (04) நாடாளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்று சவூதியில் 50பேருக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ள போதும் இலங்கைப் பெண்ணின் பெயர் அதில் இருக்கவில்லை என்று நேற்று வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் துறை…

Read More

சவூதி அரேபிய தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம்

சவூதி அரேபிய தூதரகம் முன்பாக தேசிய சங்க சம்மேளனம் இன்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தது. சவூதி அரேபியாவில் இலங்கை பிரஜையொருவருக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார். இந்த ஆர்ப்பாட்டம் சவூதி அரேபியா உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக நடைபெற்றது. சவூதி அரேபிய உயர்ஸ்தானிகர் இல்லாத காரணத்தினால் கோரிக்கை அடங்கிய மனுவொன்றை அங்கிருந்த பொறுப்பதிகாரியிடம் தேசிய சங்க சம்மேளனம் கையளித்துள்ளது. அத்துடன், இந்த விடயம் குறித்து இரண்டு நாட்களுக்குள் தீர்வு…

Read More

சவூதி பெண்களுக்கு முதன்முறையாக அனுமதி

சவூதி அரேபியாவில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகளில் அந்நாட்டு பெண்கள் முதன் முறையாக ஈடுப்பட்டுள்ளதுடன் வாக்களிக்கவுமுள்ளனர். எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள இந்த தேர்தலில், சுமார் 900 பெண்கள் போட்டியிடுகின்றனர். பொது இடங்களில் இருபாலாரும் ஒன்றாக இணைந்து இருப்பதை சவூதி சட்டங்கள் கடுமையாக எதிர்க்கும் நிலையில், ஆண் மற்றும் பெண் வேட்பாளர்கள் அங்கு ஒரே நேரத்தில் தேர்தல் மேடையை பகிர்ந்துக்கொள்ள முடியாது. பெண்கள் பொது இடங்களில் தமது முகத்தை காட்ட முடியாது என்பதும், ஆண் வேட்பாளர்கள் தமது…

Read More

சவூதி வாகன ஓட்டுநர் கவனத்திற்கு

சவூதியில் இன்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் போக்குவரத்து உயர் அதிகாரி செய்தியாளர்களிடம் கூறுகையில் ” சவூதியில் சாலை விதிகளை மீறி வாகனம் ஓட்டும் ஓட்டுனர்களின் (licence) ஓட்டுனர் உரிமம் பறிமுதல் செய்யப்பட்டு திரும்பவும் அந்த நபர்கள் அனைவருமே ஓட்டுனர் பயிற்சி பள்ளிக்கு அனுப்பி வைக்கபடுவார்கள். வாகனம் ஓட்ட கத்துகிட்டு திரும்பவும் ஓட்டுநர் உரிமமத்திற்கு விண்ணபிக்க வேண்டும்” – என்று கூறியுள்ளார். கடந்த சில வருடங்களில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் அதிகம் இளையதலைமுறை. எனவே, இந்த புதிய முடிவு எடுக்கப்பட்டது என்று அவர் மேலும்தெரிவித்தார்.

Read More

இலங்கை பெண்ணை கல்லெறிந்து கொல்ல நீதிமன்றம் உத்தரவு!

விபச்சாரக் குற்றம் சாட்டப்பட்ட இலங்கை பணிப்பெண் ஒருவரை கல்லெறிந்து கொலை செய்ய சவூதி  அரேபிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கொழும்பு, மருதானைப் பிரதேசத்தைச் சேர்ந்த திருமணம் முடித்த பெண் ஒருவருக்கே இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. சவூதியில் பணி புரியும் மற்றுமொரு இலங்கை ஆணுடன் இவர் தகாத உறவு வைத்திருந்துள்ளார். இந்த இளைஞருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 100 கசை அடிகள் வழங்க தீர்ப்பளித்துள்ளது. தனக்கு எதிரான குற்றச்சாட்டை குறித்த பெண் நீதிமன்றத்தில் ஏற்றுக் கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. இதேவேளை, குறித்த…

Read More

பெப்சி வடிவில் மது: சவூதியில் சம்பவம்

நேற்று(12\11\15)  துபாயிலிருந்து சவூதி அரேபியா வந்த லாரியில் 48,000 பெப்சி கேன்கள் வந்தது, முதலில் பெப்சி என்று நினைத்த சுங்க துறை அதிகாரிகள் அதை உற்று பார்க்கும்போது தான் தெரிந்தது போலியான பெப்சி கவர்கள் என்று. பிரித்து பார்த்தபோது அனைத்தும் மது கேன்கள். மேலும் விரிவான செய்திக்கு saudigazette.com.sa

Read More

சவூதியில் வருகிறது தடை!

துபாயை தொடர்ந்து சவூதியிலும் இலவச சேவைகளான whatsapp , imo, Line , Messenger , Tango உள்ளிடவற்றை ஒரு சில வாரங்களில் தடை செய்ய போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற இலவச சேவைகளால் சவூதியில் உள்ள மொபைல் கம்பெனிகள் நஷ்டத்தை சந்திப்பதாலும் அவற்றின் லாபத்தை அதிகரிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சேவை ஒரு சில வாரங்களில் அமலுக்கு வரும் என சவூதி அரேபிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

மத்திய கிழக்கில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள 9 இலங்கை பெண்கள்

மத்திய கிழக்கு நாடுகளில் பணிப்பெண்களாக வேலை செய்யும் இலங்கையைச் சேர்ந்த 09 பெண்களுக்கு எதிராக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சவூதி அரேபியா மற்றும் லெபனானில் பணிபுரியும் பெண்களுக்கே அந்நாட்டு நீதிமன்றங்களால் இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சவூதி அரேபிய நீதிமன்றங்களின் தீர்ப்புக்களின் பிரகாரம், இலங்கையின் பெண்கள் சிலர் கல்லெறிந்து கொல்லப்படும் நிலைக்கு உள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள மேலும் தெரிவித்துள்ளார்.

Read More