Headlines

அஜினமோட்டோவுக்கு இலங்கையில் தடை

உணவுப் பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் எம்.எஸ்.ஜீ எனும் சுவையூட்டியை இன்னும் இரு வாரங்களுக்குள் சந்தைகளில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் அறிவுரைக்கு அமைய இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சுகாதார அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார். குறித்த சுவையூட்டி களைநாசினியாக பயன்படுத்தப்படுவதாக தெரியவந்துள்ளது என பாலித மஹிபால இதன்போது…

Read More

பயந்து ஓடிஒழிய இந்த, அரசாங்கம் தயாராக இல்லை – ராஜித

அப்பாவிகள் என்ற வேஷம் போடுவதனால் செய்த குற்றங்களை மறைக்க முடியாது. ராஜபக்சக்கள் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள விடயங்கள் மட்டுமல்ல கடந்த ஆட்சியில் நடந்த அனைத்து மோசடிகளையும் கண்டறிவதுடன் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். நிதி மோசடி குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதியின் மகன் யோஷித ராஜபக்சவை விடுவிக்கக் கோரியும் அந்த விவகாரம் தொடர்பில் பல கருத்துக்களை மஹிந்த அதரவு அணியினர் முன்வைத்து வரும் நிலையிலும் இது தொடர்பில் அரசாங்கத்தின் கருத்தை…

Read More

டின் மீன்களுக்கு இறக்குமதி வரி அதிகரிப்பு

தகரத்தில் அடைக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ டின் மீனுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். முன்னதாக 50 ரூபாவாக இருந்த இந்த வரியை தற்போது 100 ரூபா வரை அதிகரிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Read More

அரச மருத்துவரின் வழக்குகளை எதிர்கொள்ளத் தயார் – ராஜித

தமக்கெதிராக அரச மருத்துவ சம்மேளனத்தினர் வழக்குத் தாக்கல் செய்தால் அதனை எதிர்கொள்ளத் தயார் என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். மாலபே தனியார் பல்கலைக்கழகம் தொடர்பில் அமைச்சருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்போவதாக முன்னதாக அரச மருத்துவர் சம்மேளனம் எச்சரிக்கை விடுத்திருந்தது. குறித்த பல்கலைக்கழக மாணவர்களின் உள்ளக பயிற்சிகளுக்கு அரச மருத்துவமனைகளில் அனுமதி வழங்கியமைக்கு எதிராகவே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதேவேளை, தமது தரப்பு நியாயத்தை வெளியிட்டுள்ள அமைச்சர் சேனாரட்ன, நீதிமன்றத்தின் தீர்மானத்துக்கு ஏற்பவே மாலபே…

Read More

அமைச்சர் றிஷாதோ, முஸ்லிம்களோ காட்டை அழிக்கவில்லை – ராஜித

-அஷ்ரப் ஏ சமத்- வாராந்த அமைச்சரவை முடிவுகளை ஊடகங்களுக்கு அறிவிக்கும் நிகழ்வு நேற்று (10)ஆம் திகதி மு.பகல் 11.00 மணிக்கு பாராளுமன்றத்தில் அமைச்சா் டொக்டா் ராஜித்த சேனாரத்தினாவில் தலைமையில் நடைபெற்றது. இங்கு ஊடகவியலாளா் ஒருவா் கேட்ட  கேள்வி –  அமைச்சா் றிஷாத் பதியுதீனால்  வில்பத்து காடுகள் அழிக்கப்பட்டு அங்கு மக்கள் குடியேற்றப்படுகின்றனா்    அது பற்றி அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன ? இதனை நீங்கள் அறிவீா்களா ? அமைச்சா் டொக்டா் ராஜித்த  பதில் – அவ்வாறு அந்த…

Read More

தீர்வையற்ற வாகன அனுமதி இரத்துக்கு மாற்றுத் தீர்வு

வரவுசெலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள அரச பணியாளர்களுக்கான தீர்வையற்ற வாகன அனுமதி பத்திர ரத்துவிடயத்துக்கு மாற்றுத் தீர்வு முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்படி குறித்த தீர்வையற்ற வாகன அனுமதிக்காக நிதியை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கான யோசனையை முன்வைத்துள்ளனர். இதேவேளை நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் ராஜித சேனாரத்ன, வைத்தியர்களுக்கு குறித்த அனுமதி பத்திரம் கிடைக்கும் போது பெரும்பாலானோர் அதனை சுமார் 1 மில்லியன் ரூபாய்களுக்கு விற்பனை செய்கின்றனர். எனவே அந்த ஒரு மில்லியன் நிதியை…

Read More

தம் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்குமாறு பிரபல அமைச்சர்கள் கோரிக்கை

தம் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்துமாறு சில அமைச்சர்கள் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளனர். அமைச்சர்களான ராஜித்த சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க மற்றும் அர்ஜூன ரணதுங்க ஆகியோரே இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எவன்காட் பிரதானி எனக் கூறப்படும் நிஸ்ஸங்க சேனாதிபதியிடம் அல்லது அந்த நிறுவனத்துடன் தொடர்புடைய எவரிடம் இருந்தும் தேர்தலுக்கான நிதி அல்லது இலஞ்சம் கோரவில்லை எனவும், இந்த விடயம் தொடர்பில் தமக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளை விசாரணை செய்து…

Read More

அவன்கார்ட் உடன்படிக்கை ரத்து

அவன்கார்ட் மெரிடைம் நிறுவனத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலுள்ள அனைத்து உடன்படிக்கைகளையும் ரத்து செய்து அதனை கடற்படையின் கீழ் கொண்டு வருவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று பிற்பகல் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடலில் பொலிஸ்மா அதிபர், சட்டமா அதிபர், பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி, கடற்படை தளபதி, ரக்னா லங்கா பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இந்த கலந்துரையாடலில் கலந்துக்கொண்டிருந்ததுடன், அமைச்சர்களான ராஜித்த சேனாரத்ன, விஜயதாஸ ராஸபக்க்ஷ,…

Read More

ஆதார வைத்தியசாலையின் குறைபாடுகளை நீக்கவும்: அமைச்சர் றிஷாத்

புத்தளம் ஆதார வைத்தியசாலையின் குறைபாடுகளை தீர்ப்பது தொடர்பிலும், வைத்தியசாலையின் ஏனைய தேவைகள் தொடர்பிலும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுடன் கலந்துரையாடலொன்றுக்கான ஏற்பாடுகள் இடம் பெற்றுவருகின்றது. கைத்தொழில், வணிகத் துறை அமைச்சர் றிஷாத்  பதியுதீன் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி அவர்களின் வேண்டுதலின் பேரில் சுகாதார அமைச்சருடன் கலந்துரையாட நேரம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. புத்தளம் ஆதார வைத்தியசாலையின் நீண்ட நாள் தேவையான குளிருட்டப்பட்ட பிரேத அறை தொடர்பிலும், காணப்படும் சில குறைபாடுகளை உடன் நீக்குவது தொடர்பிலும் இதன்போது கவனம்…

Read More