Headlines

விளாடிமிர் புடினே சிறந்த தலைவர் – டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை விட விளாடிமிர் புடினே சிறந்த தலைவர் என குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்டு டிரம்ப் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா ஜனாதிபதி ஒபாமாவின் பதவிக்காலம் முடிவடையப் போவதைத் தொடர்ந்து வருகிற நவம்பர் மாதம் 8ம் திகதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர். சமீபத்தில் வெளியான கருத்துக் கணிப்பின்படி, ஹிலாரியை விட டொனால்ட் டிரம்புக்கு அதிகமான வாக்குகள் கிடைக்கும்…

Read More

வடகொரியா உடன் அதிகப்படியான பதற்றத்தை உலக நாடுகள் தவிர்க்க வேண்டும்

கிழக்காசிய கண்டத்தின் கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கிய நாடான வடகொரியா, கடந்த 2006-ம் ஆண்டு முதல் உலக நாடுகளின் எதிர்ப்பினை பொருட்படுத்தாமலும், சர்வதேச ஒப்பந்தங்களை புறக்கணித்தும் அணு ஆயுத சோதனைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. சக்திவாய்ந்த அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு மற்றும் அணுஆயுதங்களை நீண்டதூரம் சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணைகள் ஆகியவற்றை வடகொரியா அவ்வப்போது பரிசோதித்து வருகிறது. வடகொரியாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும், ஐ.நா.வும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலும் பல்வேறு…

Read More

துருக்கியில் தேசிய துக்க தினம் – கோபத்தை மறந்து பேசிய புடின்

முக்கிய விமானநிலையத்தில் மூன்று தற்கொலை குண்டுதாரிகள் தாக்குதல் நடத்தி, நாற்பதுக்கும் அதிகமானோரை கொன்றதை அடுத்து இன்று துருக்கி தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கின்றது. இந்த தாக்குதலில் இருநூற்றுக்கும் அதிகமானோர் காயமும் அடைந்துள்ளனர். இறந்தவர்களில் பதின்மூன்று பேர் வெளிநாட்டவராவர். இந்த தாக்குதலின் பின்னணியில் இஸ்லாமிய அரசு என்று தம்மை அழைத்துக்கொள்ளும் அமைப்பே இருப்பதாக தாம் நம்புவதாக துருக்கிய அதிகாரிகள் கூறுகிறார்கள். 2 இஸ்தான்புல் சர்வதேச விமான நிலையம் மீது நடந்த தாக்குதலுக்கு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உள்ளிட்ட…

Read More

பாரிசில் ஒபாமா – புதின் சந்திப்பு

பருவகால மாற்றம் மற்றும் புவிவெப்பமயமாதல் தொடர்பான ஐக்கியநாடு சபை சார்பில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்பதற்காக பாரிஸ் வந்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேசினார். கடந்த வாரம் சிரியாவில் ஐ.எஸ். கள் மீது தாக்குதல் நடத்தி வந்த ரஷ்ய போர் விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்திய பிறகு ஒபாமாவும் புதினும் முதல் முறையாக சந்தித்து பேசியுள்ளனர். இந்த சந்திப்பின்போது புதினிடம் கொல்லப்பட்ட ரஷ்ய விமானிக்காக தனது இரங்கலை ஒபாமா தெரிவித்தார். துருக்கி ரஷ்யா…

Read More

துருக்கி மீது பொருளாதார தடை விதிக்க ரஷியா முடிவு

ரஷியாவின் போர் விமானம் ஒன்று தங்கள் வான்வெளியில் அத்துமீறி பறந்ததாகக்கூறி, அதை துருக்கியின் எப்16 ரக போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தின.  இதன்காரணமாக துருக்கிக்கும், ரஷியாவுக்கும் இடையேயான பனிப்போர் முற்றி உள்ளது. ரஷிய விமானம் தங்கள் வான்எல்லையில் அத்துமீறி நுழைந்தபோது, எச்சரிக்கை விடுத்தும் கேட்காததால்தான் சுட்டு வீழ்த்தியதாக துருக்கி கூறுகிறது. ரஷியா, விமானிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்று துருக்கியின் கூற்றை மறுத்தது. சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் இருந்த விமானி முராக்தின் பேசுகையில், துருக்கி வான் எல்லையை விமானம்…

Read More

பொய் சொல்லிய விளாமிடிர் புட்டின், அம்பலப்படுத்தும் துருக்கி..!

சிரியா எல்லையில் ரஷிய போர் விமானத்தை சுட்டு வீழ்த்துவதற்கு முன்பு அந்த விமானத்துக்கு 10 முறை எச்சரிக்கை விடுத்ததாகக் கூறிவரும் துருக்கி, அதற்கான ஒலிப்பதிவு ஆதாரங்களை புதன்கிழமை வெளியிட்டது.  அந்த ஒலிப்பதிவில், “துருக்கி விமானப் படையிலிருந்து பேசுகிறோம். நீங்கள் துருக்கி வான் எல்லையை நோக்கி வருகிறீர்கள். உங்கள் விமானத்தை உடனடியாக தெற்கு திசை நோக்கித் திருப்புங்கள்’ என ஆங்கிலத்தில் எச்சரிக்கை விடுக்கும் குரல் திரும்பத் திரும்ப ஒலிக்கிறது. முன்னதாக, சுட்டு வீழ்த்தப்பட்ட போர் விமானத்திலிருந்து பாராசூட் மூலம்…

Read More

ரஷியாவிடம் மன்னிப்பு கேட்க முடியாது, துருக்கி திட்டவட்டம்

ரஷியாவின் போர் விமானம் ஒன்று தங்கள் வான்வெளியில் அத்துமீறி பறந்ததாகக்கூறி, அதை துருக்கியின் எப்16 ரக போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தின.  அதன் விமானிகள் 2 பேர், பாராசூட் மூலம் தரை இறக்கப்பட்டனர். அவர்களில் ஒருவரை சிரியா படைகள் சுட்டுக்கொன்றன. மற்றொருவரை சிரியா படைகள்  பிடித்துச்சென்றன. ஆனால் அவரை ரஷியா மீட்டு விட்டது. இதன்காரணமாக துருக்கிக்கும், ரஷியாவுக்கும் இடையேயான பனிப்போர் முற்றி உள்ளது. ரஷிய விமானம் தங்கள் வான்எல்லையில் அத்துமீறி நுழைந்தபோது, எச்சரிக்கை விடுத்தும் கேட்காததால்தான் சுட்டு…

Read More

ஐ.எஸ் எவ்வாறு உருவானது.. ? விளாடிமிர் புடின் விவரிக்கிறார் (வீடியோ)

‘ஒபாமா அடிக்கடி ஐ.எஸ் பற்றி பேசுகிறார். ஓகே… இந்த உலகில் ஐ.எஸ் அமைப்புக்கு ஆயுத சப்ளை செய்வது யார்? சிரியாவில் ஆசாத் அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்கியிருப்பவர்கள் யார்? இது போன்ற ஒரு குழப்பமான நிலையை அந்த நாட்டில் உருவாக்கியவர்கள் யார்? போரிடுபவர்களுக்கு ஆயுத சப்ளை செய்பவர்கள் யார்? ஆசாத் அரசுக்கு எதிராக போரிடுபவர்கள் உண்மையில் யார் தெரியுமா? அவர்கள் அனைவரும் கூலிப்படையினர். அவர்கள் அனைவருக்கும் மாத சம்பளம் வழங்கப்படுகிறது. சம்பளம் தருபவர்கள் பக்கம் சார்ந்து போரிடும்…

Read More

பரபரப்பான சூழ்நிலையில் ஒபாமா – புதின் திடீர் சந்திப்பு

ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக துருக்கி நாட்டுக்கு வந்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமாவும் ரஷ்ய அதிபர் புதினும் திடீரென சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்கள். கடந்த மாதம் சிரியாவில் ஐ.எஸ். களுக்கு எதிராக ரஷ்யா தாக்குதல் நடத்த தொடங்கியது முதல் அமெரிக்கவிற்கும் ரஷ்யாவிற்குமான உறவில் விரிசல் ஏற்பட தொடங்கியது. உலகின் இரண்டு வல்லரசுகளுக்கும் இடையில் மீண்டும் பனிப்போர் அச்சம் நிலவிவந்தது. இந்நிலையில் நேற்று நடந்த ஜி-20 நாடுகளின் மாநாட்டின் போது ஒபாமாவும் புதினும் திடிரென சந்தித்து சுமார் 20 நிமிடங்கள்…

Read More

ஐ.எஸ் மீது, அணுகுண்டு தாக்குதல் நடத்த ரஷ்யா தீர்மானம்

ரஷ்ய விமானத்தை ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்கியிருக்கலாம் என்ற தகவல் வெளியானதை தொடர்ந்து ஐ.எஸ் தீவிரவாதிகளின் முகாம்கள் மீது அணுகுண்டு தாக்குதல் நடத்த ரஷ்யா முடிவு செய்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. எகிப்து நாட்டிலிருந்து கடந்த சனிக்கிழமை புறப்பட்ட ரஷ்ய பயணிகள் விமானம் நடுவானில் வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 224 பேரும் பலியானார்கள். இந்த சம்பவம் நிகழ்ந்து சில மணி நேரங்களில், ‘ரஷ்ய விமானத்தை நாங்கள் தான் சுட்டு வீழ்த்தினோம்’ என ஐ.எஸ் தீவிரவாதிகள்…

Read More