Headlines

அரபுக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான றிசாத் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தார். இந்நிகழ்வில், புத்தளம் மாவட்ட பா. உ நவவி, திருகோணமலை மாவட்ட பா.உ அப்துல்லா மஹ்ரூப், ஜம்மியதுல் உலமாத் தலைவர் ரிஸ்வி முப்தி, வட மேல் மாகாண சபை உறுப்பினர் தாஹிர், வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எஹியா, ஜாமிய்யா நளீமிய்யா பணிப்பாளர் சபை உறுப்பினரும், விரிவுரையாளருமான Dr. ஏ.சி.அகார் முஹம்மது, மற்றும் காஸிமிய்யா அரபுக்கல்லூரியின்…

Read More

கழிவுகளை புத்தளத்தில் கொட்டும் முயற்சிகள் கைவிடப்பட வேண்டும்- அமைச்சர் றிஷாத்

கொழும்பு நகர்ப் பிரதேசத்தில் சேகரிக்கப்படும் திண்மக்கழிவுகளை புத்தளத்திற்கு கொண்டு சென்று அங்கு கொட்டப்படுவது தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளை நிறுத்துமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சம்பந்தப்பட்டவர்களிடம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, காலாகாலமாக இந்தக் குப்பைகள் கொழும்பின் மீத்தொட்டமுல்ல பிரதேசத்தில் கொட்டப்பட்டு வருவதனால் ஏற்பட்டுள்ள விளைவுகளை நாம் கண் கூடாக காண்கின்றோம். மீத்தோட்டமுல்ல பிரதேசத்தில் இந்தக் குப்பைகள் கொட்டப்படுவதால் அந்தப்பிரதேச மக்கள் படுகின்ற அசௌகரியங்களும் அவஸ்தைகளும் சொல்ல முடியாதவை. அதற்கு மாற்றுத்தீர்வு ஒன்று…

Read More

கொரியா செல்லும் புத்தளம் சாஹிராவின் பைகர்

– வசீம் அக்ரம் – புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் எச்.ஏ.பைகர் இலங்கை பாடசாலை உதைபந்தாட்ட சங்கத்தினால் கொரியா நாட்டிற்கு செல்ல தெரிவு செய்யப்பட்டுள்ளார். சாஹிரா தேசிய கல்லூரியில் க.பொ.த. உயர்தர பிரிவு முதலாம் ஆண்டில் கல்வி பயின்று வரும் இவர் பாடசாலை மட்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் தனது அதீத திறமையை வெளிகாட்டியமையினால் கொரியா ஜான்க்ஜியில் நடைபெறும் 44 வது ஆசிய பாடசாலைகள் உதைபந்தாட்ட சாம்பியன்சிப் சுற்றுப்போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றுக்கொண்டார். வரும் மே மாதம்…

Read More

புத்தளம் முழுவதும் போதைப் பொருள் எதிர்ப்புப் பிரச்சாரம் – SLTJ

ஜூலை 20 முதல் 30 வரை புத்தளம் மாவட்டம் முழுவதும் போதைப் பொருள் எதிர்ப்புப் பிரச்சாரம் – தவ்ஹீத் ஜமாஅத் மாநாட்டில் தீர்மானம். ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) புத்தளம் மாவட்ட ஷிர்க் ஒழிப்பு மாநாடு நேற்று முன் தினம் (01.05.2016) புத்தளம், கல்பிட்டி நகரில் தவ்ஹீத் ஜமாஅத்தின் புத்தளம் மாவட்ட தலைவர் சகோ. பவ்சாத் தலைமையில் நடைபெற்றது. இணைவைப்பில் மூழ்கியிருக்கும் மக்களை தூய இஸ்லாத்தின் பக்கம் அழைக்கும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் முயற்சியின்…

Read More

“குப்பைகளை புத்தளத்தில் கொட்ட அனுமதிக்கமாட்டோம்”

கொழும்பை அழ­கு­ப­டுத்தும் நோக்கில் அங்குள்ள குப்­பை­களை ரயில் மூலம் எடுத்து வந்­து­ புத்­த­ளத்­தில் ­கொட்­டு­வ­தற்கு நாம் ஒரு­போதும் அனு­ம­திக்க மாட்டோம் என வடமேல் மாகாண சபை உறுப்­பினர் எஸ்.எச்.எம். நியாஸ் தெரி­வித்தார். வடமேல் மாகாண சபையின் மாதாந்த அமர்வு அண்மையில் இடம்­பெற்ற போது தனி­நபர் பிரே­ர­ணை­யொன்றை சமர்ப்­பித்து உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், மஹிந்த ராஜ­பக் ஷ ஜனா­தி­ப­தி­யாக இருந்த போது 2014ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியில் கொழும்­பி­லுள்ள குப்­பை­களை பிரத்­தி­யே­க­மாக ரயில் மூலம்…

Read More

தட்டிக்கேட்கும் திராணி இருக்கவேண்டும் – அமைச்சர் றிஷாத்

கட்சிகளும் சின்னங்களும் அவற்றின் நிறங்களும் மார்க்கமென நம்மவர்களில் சிலர் கருதும் போக்கு இல்லாமல் போனால்தான் நமது சமூகம் விமோசனம் பெறும். கட்சிகள் விடும் தவறுகளை தட்டிக் கேட்கும் திராணியும் நமக்கு இருக்க வேண்டும் இவ்வாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். புத்தளம் அக்கரவெளியில் இடம்பெயர்ந்து வாழும் அடம்பன் பள்ளிவாசல்பிட்டி அகதிகளை சந்தித்து கலந்துரையாடிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். மக்களின் தேவைகளை நிறைவேற்றவே நாம் அரசியல் செய்கின்றோம். எமது கட்சியில்…

Read More

தடாகம் கலை இலக்கிய வட்டம் நடாத்தும் கௌரவிப்பு விழா

– அஸ்ரப் ஏ சமத் – தடாகம் கலை இலக்கிய வட்டம் நடாத்தும் கௌரவிப்பு விழாவும் கவிதைத் தொகுதி  மற்றும் குறுந்திரைப்படம் வெளியீட்டு விழாவும் எதிர்வரும் சனிக்கிழமை (21) நவம்பா் 2015 காலை 10.00 மணிக்கு கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடைபெறவுள்ளது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாத் பதியுதீனும் கௌரவ அதிதியாக  கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பிணா் முஜிபு ரஹ்மானும் கலந்து கொள்வாா்கள். முதல் பிரதி பெறுபவர்  கவிஞா் ஜங்கரன் கதிா்காமநாதன் என்பதும் குறிப்பிடத்தக்கது . புத்தளம் …

Read More

ஆதார வைத்தியசாலையின் குறைபாடுகளை நீக்கவும்: அமைச்சர் றிஷாத்

புத்தளம் ஆதார வைத்தியசாலையின் குறைபாடுகளை தீர்ப்பது தொடர்பிலும், வைத்தியசாலையின் ஏனைய தேவைகள் தொடர்பிலும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுடன் கலந்துரையாடலொன்றுக்கான ஏற்பாடுகள் இடம் பெற்றுவருகின்றது. கைத்தொழில், வணிகத் துறை அமைச்சர் றிஷாத்  பதியுதீன் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி அவர்களின் வேண்டுதலின் பேரில் சுகாதார அமைச்சருடன் கலந்துரையாட நேரம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. புத்தளம் ஆதார வைத்தியசாலையின் நீண்ட நாள் தேவையான குளிருட்டப்பட்ட பிரேத அறை தொடர்பிலும், காணப்படும் சில குறைபாடுகளை உடன் நீக்குவது தொடர்பிலும் இதன்போது கவனம்…

Read More