Headlines

“வாய் வீச்சு அரசியல் மக்களுக்கு பயனளிக்காது” – இல்ஹாம் மரைக்கார்

முஸ்லிம் கட்சியொன்றின் தலைவர் சகோதர முஸ்லிம் கட்சியொன்றின் தலைவரை மேடைகளில் தூஷித்தும் நடித்துக் காட்டியும் நையாண்டி பண்ணியும் கேவலப்படுத்தியமையுமே, தான் முஸ்லிம் காங்கிரஸில் இருந்து விலகி அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டமைக்கு பிரதான காரணமென்று முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர் இல்ஹாம் மரைக்கார் அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார். காழ்ப்புணர்வுடன் இஸ்லாமிய சகோதரர் ஒருவரை வேண்டுமென்றே மு.கா தலைமை தூற்றியதனாலேயே அக்கட்சியிலிருந்து அவசரமாக தான் வெளியேறிதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முஸ்லிம் காங்கிரஸ்…

Read More

“புத்தளமே விழித்தெழு” அ.இ.ம.கா.வின் மாபெரும் நிகழ்வுகள்

வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான அல்ஹாஜ் ரிசாத் பதியுதீனின்வழிகாட்டலில் எதிர்வரும் 27.11.2016 அன்று புத்தளத்தில் மாபெரும் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன . இதற்கான நெறிப்படுத்தலை புத்தளம் மாவட்ட பாரளுமன்ற உறுப்பினரும் , அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதி தலைவருமான அல்ஹாஜ் M.H.M. நவவி  ,  A.R.M.அலி சப்ரி  , முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினருமான S. ஆப்தீன் எஹியா ஆகியோர் ஒழுங்கு படுத்தி உள்ளனர் . ”புத்தளமே விழித்தெழு” எனும் தாரக மந்திரத்தோடு இடம்பெறும் இந்த நிகழ்வு காலை…

Read More

அல்-அக்ஸா பாடசாலையின் ஆரம்ப பிரிவை ஆரம்பிப்பதற்கான நிகழ்வு

புத்தளம், கல்பிட்டி பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற அல்-அக்ஸா பாடசாலையின் ஆரம்ப பிரிவை மீண்டும் ஆரம்பிப்பதற்கான நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தளம்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி அவர்களின் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

Read More

கல்விக்காக இந்த அரசாங்கம் பாரிய உதவிகளை செய்கிறது – நவவி

புத்தளம் தொகுதியில் காணப்பட்ட 2200 ஆசிரியர் வெற்றிடங்களில் 1200 வெற்றிடங்கள் நல்லாட்சி அரசாங்கத்தினால் உடனடியாக நிரப்பட்டுள்ளன. கல்விக்காக இந்த அரசாங்கம் பாரிய உதவிகளை நல்கி வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எச்.எம். நவவி தெரிவித்தார். புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரியில் புதன்கிழமை (19) காலை நடைபெற்ற 2015 ம் ஆண்டு க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் அதிக ஏ (A) சித்திகளை பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக…

Read More

புத்தளத்திலுள்ள 08 பாடசாலைகளுக்கு 120 மில்லியன் ரூபா ஒதுக்கீடு – நவவி

புத்தளத்தில் உள்ள 08 பாடசாலைகளுக்கு புதிய கட்டிடங்களை அமைப்பதற்கு 120 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்துள்ளதாக புத்தளம் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதி தலைவருமான M.H.M.நவவி அவர்கள் தெரிவித்துள்ளார். “புத்தளம் தொகுதிக்குள் 39 பாடசாலைகளுக்கு போதிய கட்டட வசதிகள் இல்லை . இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் முதல்கட்டமாக எட்டு கட்டட்டங்களுக்கே மேற்கூறப்பட்ட நிதியான 120 மில்லியன் ஒதுக்கீடு செய்துள்ளோம். மாணவர்களின் கணினி அறிவை வளர்க்கும் வகையில் அதற்கான எட்டு நிலையங்களை ஆரம்பிக்கவும்…

Read More

பாடசாலை வகுப்பறை நிர்மாணப்பணிக்காக நிதி ஒதுக்கீடு

புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலையில் பெற்றோர்களின் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடத்தின் இரண்டாம் மாடிக் கட்டடத்திற்கான வேலைகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.எம்.ஹில்மியின் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு குறித்த இரண்டாம் மாடி வகுப்பறைக் கட்டடத்திற்கான ஆரம்ப வேலைகளை ஆரம்பித்து வைத்தார். குறித்த வகுப்பறைக் கட்டட நிர்மாணப்பணிகளுக்காக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து முதற்கட்டமாக ஏழு இலட்சம் ரூபாவை…

Read More

தும்புத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்

புத்தளம் மாவட்டத்தின் தும்புத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில், இன்று (20) கொழும்பில் உயர்மட்டக் கலந்துரையாடல் ஒன்றுக்கு, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஏற்பாடு செய்துள்ளார். இந்தக் கலந்துரையாடலில் ஏற்றுமதி அபிவிருத்திச் சபை உயரதிகாரிகள், தும்புத் தொழிலாளர்கள் மற்றும் அந்தப் பிரதேசத்தில் தும்புத் தொழிலில் ஈடுபட்டு வரும் சீன நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் பங்குபற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Read More

இலவச சீருடை வழங்கும் வைபவம்

விவசாய வாரம் முன்னிட்டு கடந்த சனிக்கிழமை (15.10.2016) புத்தளம் கமநல சேவை நிலையத்தில் நடைபெற்ற சமய நிகழ்வினை தொடர்ந்து நடை பெற்ற  பாடசாலை வறிய மாணவர்களுக்கு இலவச அப்பியாச புத்தகங்கள் மற்றும் சீருடை வழங்கும் வைபவத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட சிறுவர்களுக்கு பரிசில்களையும் வழங்கி வைத்தார்கள்.

Read More

மனற்குன்று பிரதேசத்தில் நிரந்தர வீட்டினை வழங்க நடவடிக்கை

நேற்று முன்தினம் (11.10.2016) இரவு மனற்குன்று பிரதேசத்தில் வீடோன்று எரிந்து முற்றாக சேதமடைந்துள்ளது. இதனை பார்வையிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தள மாவட்ட பிரதான அமைப்பாளரும் பிரபல சமூக சேவையாளருமான தொழிலதிபர் அலி சப்ரி, கோவில் நிர்வாகம் மற்றும் ஊர் மக்களுடன் இணைந்து நிரந்தர வீட்டினை வழங்குவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டார்.

Read More

புனர்நிர்மாணம் செய்யப்படும் மினன் ஜும்ஆ மஸ்ஜித் மையவாடி பாதை

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் ஆண்டங்கனி ஏதாளை பிரதேசத்தில் உள்ள மினன் ஜும்ஆ மஸ்ஜித் மையவாடி இல் உள்ள 300m பாதை புனர்நிர்மாணம் செய்வதற்கான வேளை திட்டம் நடத்தபட்டுள்ளது அவ்வேளை திட்டத்தை பார்வையிடும் போது..

Read More

புத்தளத்திலுள்ள பாடசாலைகளில் கல்வித்துறை தொடர்பாக ஆய்வு

புத்தளம் மாவட்டத்தில் இயங்கி வரும் Navavi Foundation For Puttalam Development (NFPD),  புத்தளம் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் கல்வித்துறை தொடர்பாக ஆய்வு செய்து மாணவர்கள் நிலை அறிந்து புதிய திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது. 1000 மாணவர்களுக்கு 100 நாள் திட்டம்  என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்படவுள்ள இத்திட்டம் மாணவர்களுக்கு பெரிதும் உதவக்கூடியதாகும். கணிதத்துறை அதிமுக்கிய பாடப்பகுதியாகும். இத்துறையில் மாணவர்கள் பெரும்பாலானோர் பின்தங்கிய நிலையில் உள்ளனர். அது தொடர்பாக, நவவி பௌண்டேசன் புதிய திட்டம் வரைபு ஒன்றை நடத்திக்கொண்டு இருக்கின்றது….

Read More