Headlines

கரைகிறது வாழ்க்கை (Poem)

– நிஷவ்ஸ் – கட்டம் கட்டமாய் கரைகிறது வாழ்க்கை சற்று சிந்தித்தால் சத்தியம் புரியும். கருவாகி உருவாகி கர்ப்பத்தில் சிசுவாகி வெளியாகி வரும்போது விடைபெறும் முதற்கட்டம் புரண்டு முரண்டு உருண்டு தவழ்ந்து தாய்ப்பால் முடியும் வாய்ப்போடு முடியும் மழலையாய் வாழ்ந்த குழந்தைப் பருவம். செல்லப் பிள்ளையாய் தொல்லைகள் கொடுத்து கள்ளமாய் சீனியை அள்ளித் தின்று துள்ளித் திரியும் பிள்ளைப் பருவம் ஐந்து வயதோடு அடங்கத் தொடங்கும். வேலிக்கு வெளியேயும் வேறுலகம் உள்ளதனை காலம் காண்பிக்கும் கால்களில் துடிப்பெடுக்கும் ஏலான்னு…

Read More

80 களில் ஒரு சஹர் (Poem)

-நிஷவ்ஸ் – பைவ் ட்ரம்ஸ் அலாம் பதற்றமாய் அடிக்கும். உம்மாதான் எழும்பனும் உள்ளுக்குள் ஆறுதல். படுத்த பாய் எடுத்து பக்குவமாய்ச் சுற்றி விட்டு வெளியே தொங்கும் வெள்ளை டியூப் லைட்டை மெல்லப் போட்டு விட்டு மெதுவாகக் கிணற்றில் அள்ளும் நீர் சத்தம் அடுத்துக் கேட்கும். திலாந்தின் ஓசைகள் திரும்பத் திரும்ப கலந்து காற்றில் காதுகளில் விழும். ராத்தா அடுத்தெழுந்து ராவு ஆக்கிய கறி எடுத்து அடுப்பில் வைத்து அடியில் கொள்ளி போட்டு கொளுத்தும் ஓசை கூதலில் கலந்து…

Read More

அபாயா (Poem)

– நிஷவ்ஸ் – எங்கட ராத்தாமார் உடுக்கிற அபாயா என்னென்று சொல்வதடி கண்ணாடி சீகுயின்ஸ் கன்றாவி டிசைனகள் கண்ணுக்குள் குத்துதடி அஞ்சாறு அபாயாக்கள் பெருநாளைக்கு அள்ளுறார் நியாயமாடி பிஞ்சுக்கு கவுண் வாங்கக் காசில்லா பெற்றோரும் உள்ளாரடி நெஞ்சையும் உடம்பையும் நெருக்கி இறுக்கி உடுக்கின்ற அபாயாக்கள் இது ஹிஜாபா இல்லை நடிப்பா அடி மார்க்கத்தை மலிவாக்கிறார். (அடி..) போட்டிக்கு விலை கொடுத்து வாங்குகிறார் காட்டிக் கலர்ஸ் போட மாட்டிட்டு முழிக்கின்றார் சில கணவர் மாட்டுக்கு புரியலைன்னு கார்ட்டுக்கும் கடனுக்கும் கனக்க…

Read More

பத்ர் யுத்தமும் பதுறுக் காக்காவும்

பதுறுக் காக்கா பாயில் சாய்ந்து பத்ர் யுத்தத்தின் பயானைக் கேட்பார். படைகளைப் பற்றி பயானில் சொல்ல கடைகளின் விளம்பரம் இடையில் குறுக்கிடும். சீலை விளம்பரம் சென்று முடிய ஏழை சஹாபிகளின் இன்னல் தொடரும். அல்லாஹ்வுக் ‘கஞ்சி’ அவர்களின் யுத்தம்… அப் பயான் தொடர- பள்ளிக் ‘கஞ்சி’ பச்ச இஞ்சி கூட பதுறுக் காக்கா மெதுவாய்க் கூறுவார். பதுறு மெளலூதின் பாடல் வரிகள் புதிய மெட்டில் போகும் பயானில். பதுறுக் காக்கா பக்குவமாய் எழுந்து அடக்கத்துடனே ஆமீன் சொல்வார்….

Read More

மெகா சீரியல் (Poem)

கிழவியும் குமரியும் கிறுக்குத் தனமாய் பல பல நாடகம் பார்த்து ரசிக்கிறார். சேரியில் வாழும் சின்ன வீட்டிலும் சீரியல் பார்க்க LCD உண்டு. நாடகம் சொல்லும் நாறிய கருத்தால் கோடு ஏறிய குடும்பங்கள் எத்தனை? அடுத்தவன் மனைவிக்கு ஆட்டையை போடல் உடுத்த உடுப்புடன் ஓடிப் போதல் கொடுத்து உதவி குழியைத் தோண்டல் மருமகள் வாழ்வை மாமியார் கெடுத்தல் அருமையாய் பேசி ஆம்பிளையை கவிழ்த்தல் உரிமையைப் பேசி உம்மாவைப் பிரித்தல் தரித்திர நாடகத் தாக்கங்கள் ஆயிரம் இரண்டு வரிகளில்…

Read More