Headlines

இஸ்ரேலின் கைதிகள் பரிமாற்ற முயற்சியை ஹமாஸ் நிராகரிப்பு

இஸ்ரேல் கடந்த 2014 தொடக்கம் 18 பலஸ்தீனர்கள் மற்றும் 19 பலஸ்தீன சடலங்களை தடுத்து வைத்திருப்பதாக லோடன் குறிப்பிட்டார். இவர்களை இரண்டு இஸ்ரேல் வீரர்களின் சடலங்களுக்காக பரிமாற்றிக் கொள்ளும் கோரிக்கையையே ஹமாஸ் நிராகரித்தாக தெரிவித்துள்ளார். கடந்த 2014 காசா யுத்தத்தில் கொல்லப்பட்ட ஒரோன் ஷோல் மற்றும் ஹாதர் கோல்டிங் என்ற இரு இஸ்ரேலிய வீரர்களின் சடலங்களே ஹமாஸ் வசமிருப்பதாக நம்பப்படுகிறது. இந்த சடலங்களை மீட்டு வருவதாக இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு இம்மாதம் உறுதி அளித்திருந்தார். இஸ்ரேல்…

Read More

இஸ்ரேல் பிரதமருக்கு, கைகுலுக்க மறுத்த நெதர்லாந்து MP (வீடியோ)

பாலஸ்தீன் ஆக்கிரமிப்பு இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு நெதர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நெதர்லாந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் நெதன்யாஹுவுக்கு கை குலுக்கி வரவேற்றனர். அப்போது ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கை குலுக்க மறுத்துவிட்டார். மேலும் அவரது சட்டையில் பாலஸ்தீன் கொடியையும் பொறுத்திருந்தார். பெஞ்சமின் நெதன்யாஹு வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நெதர்லாந்து மக்கள் பாலஸ்தீன கொடியை ஏந்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

Read More

அல் அக்ஸாவை மூடியது இஸ்ரேல்

ரமழான் மாதம் முடியும் வரை ஆக்கிரமிப்பு கிழக்கு ஜெரூசலத்தின் அல் அக்ஸா பள்ளிவாசல் வளாகத்தை யூதர்கள் மற்றும் முஸ்லிம் அல்லாதோருக்கு மூடி வைக்க இஸ்ரேல் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. பள்ளிவாசல் வளாகத்தில் வழிபாட்டாளர்கள் மற்றும் இஸ்ரேல் பொலிஸாருக்கு இடையில் மோதல் இடம்பெற்ற நிலையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களின் புனித மாதம் முடியும் அடுத்த வாரம் வரை இந்த முடிவு அமுலில் இருக்கும் என்று இஸ்ரேலிய பொலிஸ் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். ரமழான் மாதத்தில் யூதர்கள் பள்ளிவாசல்…

Read More

பாலஸ்தீன அகதி முகாமுக்குள் அத்துமீறி தாக்குதல் – இஸ்ரேல்அட்டூழியம்

அத்துமீறி, இஸ்ரேல் இராணுவம் பலஸ்தீன அகதி முகாமுக்குள் நுழைந்தனர். இவ்வாறு அத்து மீறி நுழைந்த காட்டு மிராண்டி இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதலில் பாலஸ்தீன ஒருவர் கொல்லப்பட்டார். இந்த அத்துமீறிய தாக்குதலில் 22-வயது பாலஸ்தின இளைஞர் கொல்லப்பட்டார். மேலும் 15 பேர் காயம் அடைந்தனர். இஸ்ரேல் ராணுவம் தரப்பில் 5 பேருக்கு காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More