Headlines

ஹிலாரி கிளிண்டனுக்கு ஒபாமா வாழ்த்து

அமெரிக்க அதிபர் பதவி வேட்பாளராக ஜனநாயக கட்சியின் சார்பில் அமோக ஆதரவை பெற்றுள்ள ஹிலாரி கிளிண்டனுக்கு அதிபர் பராக் ஒபாமா வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் களம்காண உள்ள குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான பிரைமரி தேர்தல்கள் பல்வேறு மாகாணங்களில் நடந்து வந்தன. இதில் ஜனநாயக…

Read More

முஸ்லிம்களுக்கு எதிரான கொள்கை: டொனால்டு டிரம்ப் மீது ஒபாமா தாக்கு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் உத்தேச வேட்பாளராக அறிவிக்கப்பட்ட டொனால்டு டிரம்ப் கடந்த டிசம்பர் மாதம் பேசும்போது, தான் ஜனாதிபதியானால் அமெரிக்காவில் முஸ்லிம்கள் நுழைவது தடை செய்யப்படும் எனவும் அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பப்படும் எனவும் கூறியிருந்தார். டிரம்பின் இந்த கருத்து அப்போதே சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில் அமெரிக்காவின் ரட்கர் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஜனாதிபதி ஒபாமா கலந்து கொண்டு பேசினார். அப்போது டிரம்பின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் ஒபாமா பேசுகையில்,…

Read More

ஹிரோ­ஷிமா நக­ருக்­குச் செல்லும் ஒபா­மா

அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஒபாமா  ஜப்­பானின் ஹிரோ­ஷிமா நக­ருக்கு இம்­ மாதம் இறு­தியில் சுற்­றுப்­ப­யணம் மேற்­கொள்­ள­வுள்ளார். அமெரிக்காவின் அணு­குண்டால் பாதிக்­கப்­பட்ட ஹிரோ­ஷிமா நகருக்கு இதுவரை அமெ­ரிக்க ஜனா­தி­பதிகள் யாரும் செல்லவில்லை. இந்­நி­லையில் இம்­மாதம்  27ஆம் திகதி ஜி-7 உச்சி மாநாட்­டுக்­காக ஜப்பான் செல்­ல­வுள்ள அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஒபாமா, ஹிரோ­ஷிமா நக­ரத்­துக்கும் செல்லவுள்ளார். பத­வியில் இருக்கும் அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஒருவர் அந் ­ந­க­ரத்­துக்கு செல்­வது இதுவே முதல்முறை என்­பதால், அவ­ரது இந்த சுற்­றுப் ப­யணம் வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தாக அமையும்…

Read More

சிரியாவுக்கு தரைப்படையை அனுப்ப முடியாது: ஒபாமா கைவிரிப்பு

சிரியாவில் ஐ.எஸ். கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அங்கு அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் சிரியா அரசு திணறி வருகிறது. இந்த நிலையில் இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்ட அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, அங்கு சிரியா விவகாரம் பற்றி கூறுகையில், “சிரியாவில் பஷார் அல் ஆசாத் ஆட்சியை அப்புறப்படுத்துவதற்கு அமெரிக்கா தரைப்படையை அனுப்பாது. அப்படி அமெரிக்காவோ, இங்கிலாந்தோ தரைப்படைகளை அனுப்பினால், அது தவறு ஆகும். இன்னும் 9 மாதங்களே நான் பதவியில் உள்ள நிலையில், ஐ.எஸ். தீவிரவாதிகளை வீழ்த்தி விட…

Read More

இளவரசர் ஜோர்ஜை சந்தித்த ஒபாமா

பிரித்தானியாவின் மூன்றாவது முடிக்குரிய இளவரசர், வில்லியம் கேத் தம்பதிகளில் மூத்த மகன் இளவரசர் ஜோர்ஜ் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுடன் உரையாடும் புகைப்படம் நேற்று (22) வௌியாகியுள்ளது. லண்டனிலுள்ள கெனிங்ஸ்டன் மாளிகையில் இரவு உறங்க செல்ல முன்னர் அமெரிக்க ஜனாதிபதியும் அவரது பாரியாரும் இளவரசர் ஜோர்ஜ் சந்தித்துள்ளனர். இரவுடையில் உறங்க தயாராக இளவரசர் இருக்கும் சந்தர்ப்பத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது அவருடைய தந்தை இளவரசர் வில்லியமும் உள்ளார். ஜேர்மனி செல்லும் வழியில் லண்டனுக்கு சென்ற அமெரிக்க ஜனாதிபதி…

Read More

ஜனாதிபதியின் அமெரிக்க விஜயம் இரத்து

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் அமெ­ரிக்க விஜயம் இரத்துச் செய்­யப்­பட்­டுள்­ள­தாக ஜனா­தி­பதி ஊடக பிரிவு தெரி­வித்­துள்­ளது. சூழல் பாது­காப்பு தொடர்பில் இடம்­பெ­ற­வுள்ள மாநாட்டில் கலந்து கொள்ளும் நோக்கில் நான்கு நாள் உத்­தி­யோ­க­பூர்­வ­மான விஜயம் மேற்­கொண்டு 21 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை ஜனா­தி­பதி அமெ­ரிக்­கா­வுக்கு பய­­ண­மா­க­வி­ருந்தார். இந்­நி­லையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் அமெ­ரிக்க விஜயம் இரத்து செய்­யப்­பட்­டுள்­ளது. ஜனா­தி­ப­தியின் செல­வீ­னங்­களை குறைப்­ப­தற்­காக சர்­வ­தேச நாடு­க­ளுக்­கான விஜ­யங்­களை குறைக்­க­வுள்­ள­தாக ஜனா­தி­பதி ஏற்­க­னவே அறி­வித்­திருந்தமை குறிப்­பி­டத்­தக்­கது. எவ்­வா­றா­யினும் அமெ­ரிக்க விஜ­யத்தின் போது ஜனா­தி­பதி…

Read More

ஒபாமாவை சந்திப்பார் மைத்திரி

ஜீ 7 மாநாட்டில் கலந்துகொள்ளும் நோக்கில் ஜப்பான் செல்லவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கும் இடையில்  சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ௪ப்பானின் ஷிமா நகரில், மே மாதம் 26, 27 ஆம் திகதிகளில், ஜி 7 நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், பிரித்தானியா, கனடா, இத்தாலி, ஜேர்மனி ஆகிய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்நிலையில் இந்த மாநாட்டுக்கு சிறப்பு விருந்தினர்களாக, பங்கேற்குமாறு ஜனாதிபதி…

Read More

ஒபாமா மீது பிடல் காஸ்ட்ரோ பாய்ச்சல்

தேன் தடவிய பேச்சால் கியூபா மக்களை திசைதிருப்ப முயலும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் கருத்துக்கு புரட்சியாளரும், கியூபா முன்னாள் அதிபருமான பிடல் காஸ்ட்ரோ கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவும், அதன் அண்டை நாடான கியூபாவும் அரை நூற்றாண்டுக்கும் மேலாக பரம எதிரிகளாக இருந்தன. 1959-ம் ஆண்டு அமெரிக்காவின் ஆதரவுடன் அங்கு நடைபெற்றுவந்த ஆட்சியை பிடெல் காஸ்ட்ரோ தலைமையிலான கம்யூனிஸ்ட் புரட்சிப்படை தூக்கியெறிந்த பின்னர் இருநாடுகளுக்கும் இடையில் தீராப்பகை நிலவிவந்தது. இந்நிலையில், கியூபாவுடன் நட்பு பாராட்டுவது என்று அமெரிக்க…

Read More

ஹிலாரி கிளின்டன் பெரு வெற்றி!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் ஜனநாயக கட்சிக்கான தென் கரொலினா வேட்பாளர் போட்டியில் பெர்னி சான்டர்ஸை வீழ்த்தி ஹிலாரி கிளின்டன் பெரும் வெற்றி பெற்றுள்ளார். கடந்த சனிக்கிழமை நடந்த உட்கட்சி தேர்தலில் ஹிலாரி கிளின்டனின் வெற்றி பெரிதும் எதிர்பார்க்கப்பட்டபோதும், இந்த வெற்றி 11 மாநிலங்களுக்காக செவ்வாய்க்கிழமை நடைபெறவிருக்கும் வாக்கெடுப்பிற்கு அவருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாளை இந்த பிரசாரம் தேசிய அளவில் முன்னெடுக்கப்படும் என்று வெற்றிக்கு பின்னர் ஹிலாரி ஆதரவாளர்கள் முன் குறிப்பிட்டார். மறுபுறும், அவருக்கு தனது வாழ்த்தை தெரிவித்த…

Read More

குவான்டனாமோ சிறையை மூட ஒபாமா திட்டம்

அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஒபாமா, குவான்­ட­னாமோ தடுப்பு சிறையை மூடு­வ­தற்­கான நீண்ட கால திட்­டத்தை வெளி­யிட்­டுள்ளார். குவான்­ட­னாமோ சிறை, அமெ­ரிக்­காவின் நற்­பெ­ய­ருக்கு இழுக்கு ஏற்­ப­டுத்­து­வ­தாக ஒபாமா கூறி­யுள்ளார். இது  கிளர்ச்­சி­யா­ளர்கள் உரு­வா­வ­தற்­கான இட­மா­கவும் அது அமைந்­து­விட்­ட­தென சுட்­டிக்­காட்­டிய அவர், அந்தப் பிரச்­சி­னை­களை அடுத்த ஜனா­தி­ப­தி­யிடம் ஒப்­ப­டைக்க விரும்­ப­வில்லை என்றும்  தெரி­வித்­துள்ளார். குவான்­ட­னாமோ தடுப்புச் சிறையில் உள்ள கைதி­களை மற்ற இடங்­க­ளுக்கு மாற்­றி­வி­டு­வ­தற்­கான திட்­டத்தை ஒபாமா வெள்ளை மாளி­கையில் வெளி­யிட்­டுள்ளார். அந்த குவான்­ட­னாமோ தடுப்பு சிறையை மூட கடந்த 8…

Read More

டொனால்ட் டிரம்ப் கிறிஸ்துவரே அல்ல: போப் பிரான்சிஸ்

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட ஆதரவு திரட்டிவரும் டொனால்ட் டிரம்ப் ஒரு கிறிஸ்துவரே அல்ல என உலகம் முழுவதும் வாழும் 120 கோடி கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை குருவான போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். அண்மையில் இஸ்லாமியர்களை அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதிக்க கூடாது என கூறி சர்ச்சையில் சிக்கினார் டொனால்ட் டிரம்ப், அமெரிக்கா-மெக்சிகோ இடையில் மதில் சுவர் கட்டவேண்டும் எனவும் யோசனை தெரிவித்தார். அந்த கருத்திற்காக அமெரிக்காவில் மட்டும் அல்ல உலக முழுவதும் அவருக்கு எதிர்ப்பு அதிகரித்துவரும் நிலையில்…

Read More

வெள்ளை மாளிகையிலும் வை-பை என்றால் பிரச்சினை தான்

உலகின் நாட்டாமையாக வலம் வரும் அமெரிக்காவின் அதிகாரத்தை பறைசாற்றும் இடங்களில் ஒன்று வெள்ளை மாளிகை. ஆனால்  அமெரிக்க அதிபரின் அதிகாரபூர்வ இல்லமான வெள்ளை மாளிகையிலும் வை-பை சரியாக இல்லை என்று அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஒபாமா அளித்த தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் “வெள்ளை மாளிகையிலேயே பல இடங்களில் வை-பை இணைப்பு கிடைப்பது இல்லை. பழமையான கட்டிடமான வெள்ளை மாளிகையில் ஏராளமான பகுதிகளில் சுத்தமாக வை-பை வேலை செய்வதில்லை.”  என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் இணையத்…

Read More