Headlines

வெல்லம்பிட்டி பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி

வெல்லம்பிட்டி பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்றில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். நேற்றிரவு (10) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். முச்சக்கர வண்டியில் வந்த நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Read More

சேயா சந்தவமி விவகார விசாரணை: ஐவருக்கு எதிராக விசாரணை

வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கொட்டதெனியாவயைச் சேர்ந்த 5 வயது சிறுமியான சேயா சந்தவமியின் படுகொலைச் சம்பவம் தொடர்பான விசாரணையின் போது, பாடசாலை மாணவன் மற்றும் பிள்ளையொன்றின் தந்தை ஆகிய அப்பாவிகளைக் கைதுசெய்தமைக்காக, பொலிஸார் ஐவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த ஐவருக்கு எதிராகவும், பாடசாலை மாணவனிடமிருந்த பெற்றுக்கொண்ட பொருளை மீளவும் கையளிக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கொட்டதெனியாவ பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி, குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட ஐவருக்கு எதிராகவே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது….

Read More

வாஸ் குணவர்தனவிற்கு மரண தண்டனை! BREAKING NEWS

கொழும்பு, பம்பலப்பிட்டி பிரபல வர்த்தகர் மொஹம்மட் சியாம் கொலை வழக்கின் தீர்ப்பு இன்று கொழும்பு விசேட மேல் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டுள்ளர்த்து. இதன் படி முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவிற்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன, அவருடைய மகன் மற்றும் ஏனைய நால்வரையும் குற்றவாளி என கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்து இருந்த அதேவேளை சற்று முன்னர் அவர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளதாக…

Read More

வர்த்தகர் ஷியாம் வழக்கின் தீர்ப்பு இன்று

கொழும்பு, பம்பலப்பிட்டி பிரபல வர்த்தகர் மொஹம்மட் சியாம் கொலை வழக்கின் தீர்ப்பு இன்று கொழும்பு விசேட மேல் நீதிமன்றினால் பிறப்பிக்கப்படவுள்ளது. முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன, அவரது மகன் ரவிந்து குணவர்தன மற்றும் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக சட்ட மா அதிபர் திணைக்களம் வழக்குத் தாக்கல் செய்திருந்தது. 2013 ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் 2013 மே மாதம் 23ம் திகதி வரையிலான காலப்பகுதியில் மொஹமட் பவுஸ்டீன் முத்தலீப். கம்மத…

Read More

அநுராதபுரம் கராத்தே வீரர் கொலை! 35 பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு

அநுராதபுரம் நகரில் உள்ள இரவு நேர களியாட்ட விடுதியின் உரிமையாளரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 35 பேர் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. வசந்த சொய்சா என்ற என்ற களியாட்ட விடுதியின் உரிமையாளரை கொலை செய்ததாக கூறப்படும் இராணுவத்தின் விசேட படைப்பிரிவின் முன்னாள் சிப்பாய் உட்பட 35 பேருக்கு எதிராக காவற்துறையினர் குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்துள்ளனர். அநுராதபுரம் பிரதான நீதவான் உமேஷ் ஷானக்க கலங்சூரிய முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே காவற்துறையினர்…

Read More

வித்தியா கொலைச் சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

புங்குடுத்தீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் சந்தேக நபர்கள் ஒன்பது பேரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த வழக்கு மனு ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் எஸ். லெனின்குமார் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அத்துடன் இன்றைய தினமும் மரபணு சோதனை அறிக்கை நீதி மன்றத்தில் சமர்ப்பிக்கபடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மே மாதம் 14 ஆம் திகதி புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்….

Read More

கண்ணீர் வரவழைத்த புகைப்படம்..!

யூத பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு ஷஹீதான, தன் குழந்தையின் உடலை புதைக்கும் தருவாயில் பிரிய மனம் இல்லாமல் குழிக்குள் இறங்கி கட்டிபிடித்து கதறியழும் பாலஸ்தீன தந்தை, யா அல்லாஹ் இவர்களுக்கு இம்மையிழும் மறுமையிலும் நன்மை செய்வாயாக, குழந்தை செல்வங்களில் பரகத் செய்வாயாக, நியாய தீர்ப்பு நாளில் இவர்களுக்கு இதற்க்கு பகரமாக சுவனத்தை தருவாயாக.

Read More

கொலை செய்யப்பட்ட சிறுவனின் சடலம் கிணற்றிலிருந்து மீட்பு

எம்பிலிப்பிட்டிய – பனாமுர பகுதியில் சிறுவன் ஒருவன் கொலை செய்யப்பட்டு கிணறு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த சிறுவன் பாடசாலைக்கு சென்று வீடு திருப்பாமையினால் பெற்றோர் அவரை தேடிய போது பாடசாலைக்கு அருகில் இருந்த கிணற்றிலிருந்து சிறுவன்  சடலமாக மீட்கப்பட்டுள்ளான். மேலும் குறித்த சிறுவன் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக வைத்திய பரிசோதனையில் இருந்து தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சம்பவத்தில் 13 வயதுடைய சிறுவன் ஒருவனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளான். பொலிஸார் சம்பவம்…

Read More

மகாத்மாவை படுகொலை செய்தவனுக்கு இந்தியாவில் வீரவணக்கம்!

இந்தியாவின் தேச தந்தை மகாத்மா காந்தியை சுட்டுப் படுகொலை செய்த கோட்சே தூக்கிலிடப்பட்ட நாளான நேற்று இந்து மகாசபை வீரவணக்கம் செலுத்தியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாத்மா காந்தியை 1948ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதியன்று துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்தவன் கோட்சே. அவன் 1949ஆம் ஆண்டு நவம்பர் 15-ந் தேதி தூக்கிலிடப்பட்டான். கோட்சே தூக்கிலிடப்பட்ட நாளான நேற்று நாடு முழுவதும் இந்துமகாசபை ‘வீரவணக்க’ நாளாக கடைபிடித்தது. தமிழகத்திலும் இந்து மகாசபை பெயரில் சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டிருந்தன. இது…

Read More

சேயா செதவ்மி படுகொலை: சமன் ஜயலத்துக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

கொட்டதெனியாவ சிறுமி சேயா செதவ்மி படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சமன் ஜயலத்தை   எதிர்வரும் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி வரை  தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு  மினுவாங்கொடை  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read More