அமைச்சர் றிஷாத் விடுத்துள்ள இஸ்லாமிய புத்தாண்டு வாழ்த்துச் செய்தி
முஹர்ரம் – இஸ்லாமிய புதுவருடத்தைக் கொண்டாடும் முஸ்லிம்களுக்கு தனது இதயபூர்வமான வாழ்த்துக்களை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். அமைச்சர் வெளியிட்டுள்ள முஹர்ரம் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது; முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் முஹர்ரம் மாதம் ஆரம்ப மாதமாகவும், சிறப்பான மாதமாகவும் கருதப்பட்டு, கொண்டாடப்படுகின்றது. பெருமானார் நபி (ஸல்) அவர்கள், மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்ற ஹிஜ்ரி ஆண்டை அடிப்படையாகக் கொண்டு, இஸ்லாமிய ஆண்டின் முதலாவது மாதமாக இது…
