“தம்புள்ளை பள்ளிவாசலுக்கு, மீண்டும் பாதிப்பு ஏற்படலாம்” – ரஞ்சித் அலுவிகார
-ARA.Fareel- தம்புள்ளை ஹைரியா ஜும் ஆ பள்ளிவாசல் விவகாரம் நகர அபிவிருத்தி அதிகார சபையின் அசமந்தப் போக்கினால் பல வருடகாலம் கடந்தும் தீர்க்கப்படாதுள்ளது. இப்பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் தம்புள்ளை பள்ளிவாசலுக்கு மீண்டும் பாதிப்பு ஏற்படலாம் என மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் அலுவிகார பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் முறையிட்டுள்ளார். தம்புள்ளை ஹைரியா பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் அலுவிகார விடிவெள்ளிக்கு கருத்துத் தெரிவிக்கையில், தம்புள்ளை பள்ளிவாசல் தாக்கப்பட்டு பலவருடங்கள் கடந்துவிட்டன. பள்ளிவாசல்…
