Headlines

மைத்திரியுடன் மே தின சமரில், மஹிந்த படுதோல்வி

– நஜீப் பின் கபூர் – நேற்று (01) நடைபெற்ற மே தினம் ஜனாதிபதி மைத்திரிக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்குமிடையிலான ஒரு நேரடி யுத்தமாகவும் ஒரு கௌரவப் பிரச்சினையாகவும் இருந்தது. இலங்கை வரலாற்றில் மிகப் பெரிய மே தினத்தை நாம் கிருலபனையியே நடாத்துவேம் என்று அவர்கள் நேற்றுவரை மார் தட்டிக் கொண்டிருந்தார்கள். அதே போன்று தங்கள் அணியிலுள்ள 52 பேரில் மூன்று பேரைத்தவிர ஏனைய அனைத்துப் பாரளுமன்ற உறுப்பினர்களும் கட்டாயம் கிருலபனைக்கு சமூகம் தருவார்கள் என்றும் அவர்கள்…

Read More

உனகலா வெஹர புனர்நிர்மாண நடவடிக்கை ஜனாதிபதி தலைமையில்!

பொலன்னறுவை வரலாற்று முக்கியத்துவமிக்க உனகலா வெஹர ரஜமஹா விகாரையை உலகெங்கிலுமுள்ள பௌத்த மக்கள் தரிசிப்பதற்குப் பொருத்தமான வகையில் புனர்நிர்மாணம் செய்யும் நடவடிக்கைகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று (28) பிற்பகல் ஆரம்பமானது. இப்புனர்நிர்மாணப் பணி எழுச்சி பெறும் பொலன்னறுவை மாவட்ட அபிவிருத்திக் கருத்திட்டத்துடன் இணைந்ததாக பொலன்னறுவை மாவட்டத்திலுள்ள புன்னிய ஸ்தானங்களை மேம்படுத்தும் நிகழ்ச்சித்திட்டங்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகிறது. நேற்று பிற்பகல் வரலாற்று முக்கியத்துவமிக்க உனகலா ரஜமகாவிகாரைக்குச் சென்ற ஜனாதிபதி சமய நிகழ்வுகளில் பங்குபற்றி ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து…

Read More

ஜே.ஆர். ஜெயவர்தனவின் பேரன் அமைப்பாளராக நியமனம்

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவின் பேரனான பிரதீப் ஜயவர்தன கம்பஹா மாவட்டத்தின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று வியாழக்கிழமை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்கள் 11 பேர் நியமிக்கப்பட்டனர். அவர்களுள் ஒருவராகவே ஜே.ஆரின் பேரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More

பல்வேறு அரசியல் கட்சிகள் ஜனாதிபதியுடன் இணைவு!

சுதந்திரக் கூட்டணியின் மே தின கூட்டத்தை வெற்றிபெறச் செய்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியுடன் பல்வேறு அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. ஈழ மக்கள் ஜனநாயக கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி டக்ளஸ் தேவானந்தா, இலங்கை தொழிலாளர் காங்கிரசை பிரதிநிதித்துவப்படுத்தி ஆறுமுகம் தொண்டமான், ஜனநாயக மக்கள் காங்கிரசைப் பிரதிநிதித்துவப்படுத்தி பிரபா கணேசன் ஆகியோர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி அக்கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் நேற்று(27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச்…

Read More

கீதா, சாலிய பதவி நீக்கம் – 11 பேருக்கு புதிய பதவிகள்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க மற்றும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாலிந்த திஸாநாயக்க ஆகியோர், அக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் பதவிகளிலிருந்து, நீக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 11 ஆசன மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டுள்ளனர். இதன்படி, புதிதாக நியமனம்பெற்றவர்களின் விபரம் வருமாறு, கம்பஹா மாவட்ட அமைப்பாளர் –…

Read More

அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது: ஜனாதிபதி

– ஏ.பி.மதன் – நல்லாட்சிக்கான தேசிய அரசாங்கத்தினைக் கவிழ்க்கும் மாற்றுச் சக்திகளின் கனவு, ஒருபோதும் நனவாகாது’ என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஊடக நிறுவனங்களின் தலைவர்களையும் ஊடகங்களின் பிரதானிகளையும் ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுப் (27) புதன்கிழமை சந்தித்து  நல்லாட்சி அரசாங்கத்தின் போக்குப் பற்றி விளக்கமளித்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Read More

பேஸ்புக்கில் ஜனாதிபதியை அச்சுறுத்தியவர் கைது

பேஸ்புக் சமூக வலைத்தளத்தினூடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அச்சுறுத்திய சந்தேக நபர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் வீசா இல்லாமல்  மலேசியாவிற்குச் சென்று அங்கிருந்து நாடுகடத்தப்பட்ட நிலையில் நேற்று இலங்கை வந்த போது  கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த சந்தேக நபர் யக்கலை பிரதேசத்தைச் சேர்ந்தவராவர். சந்தேக நபர் இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

படையினருக்கும் 10000 ரூபா சம்பள உயர்வு!

கடந்த இடைக்கால வரவு செலவுத்திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு 10000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட்டது.இந்த பத்தாயிரம் ரூபா சம்பள உயர்வு முப்படையினருக்கும் வழங்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பரிந்துரை செய்துள்ளார். நேற்றைய தினம் (26) அமைச்சரவையில் ஜனாதிபதி அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பித்து இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.

Read More

தொல்பொருள் ஆய்வு நிலையங்கள் பாதுகாக்கப்படும் – ஜனாதிபதி

– ஊடகப் பிரிவு – பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள தொல்பொருள் ஆய்வு நிலையங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கை ஜனாதிபதி மைத்திரிபால தலைமையில் ஆரம்பமாகியுள்ளது. இது சம்பந்தமான விசேட கலந்துரையாடல் நேற்றைய தினம் (26) ஜனாதிபதியின் செயலகத்தில் இடம்பெற்றதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த சந்திப்பில் அஸ்கிரிய பீ்டத்தின் வெடருவே உபாலி தேரர் உள்ளிட்ட குழுவினரும், தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் செனரத் திசாநாயக்க, மத்திய கலாச்சார நிதியத்தின் பணிப்பாளர் பிரியசாந்த குணவர்த்தன உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், கல்…

Read More

அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்ய வேண்டாம் : ஜனாதிபதி

இம்முறை நடைப்பெறவிருக்கும் மே தின ஊர்வலங்களுக்காக அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்ய வேண்டாம் என  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். இது தொடர்பில் தமக்கும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருக்கும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார். மேலும், காலி சமனல விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ள மே தினப் பேரணியில் கலந்து கொள்பவர்களை…

Read More

மாகாண அமைச்சுப் பதவிகளில் மாற்றம்

எதிர்வரும் மே தினத்தின் பின்னர் மாகாண அமைச்சுப் பதவிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை அறிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிக்கு விசுவாசமாக செயற்படும் தரப்பினர் மாகாண அமைச்சர்களாக நியமிக்கப்பட உள்ளனர். இதேவேளை, கட்சியை மறுசீரமைக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.(smr)

Read More

“ஈழக்” கொள்கைக்கு இடமில்லை : ஜனாதிபதி

நாட்டில் “ஈழக்” கொள்கைக்கு இடமில்லை. அது முழுமையாக தோல்வியடையச் செய்யப்படும். ஸ்திரமான நாடு கட்டியெழுப்பப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

Read More