Headlines

மஹிந்தானந்த அளுத்கமகே பிணையில் விடுதலை

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை பிணையில் செல்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இவர் விளையாட்டுத்துறை அமைச்சராக செயற்பட்ட காலப்பகுதிகளில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக கடந்த வாரம் குற்றப்புலனாய்வுப்பிரிவில் ஆஜராகிய நிலையில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு விளக்கமறியல்

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை எதிர்வரும் 22 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த உத்தரவினை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (15) பிறப்பித்துள்ளது. வாக்குமூலமொன்றை வழங்குவதற்காகவே முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் குற்றப்புலனாய்வுப்பிரிவில் ஆஜராகிய போது கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே கைது

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைதுசெய்துள்ளனர். வாக்குமூலமொன்றை வழங்குவதற்காகவே முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் குற்றப்புலனாய்வுப்பிரிவில் ஆஜராகிய போது இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Read More

தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து விலகும் மஹிந்தாநந்த அளுத்கம

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாவலப்பிட்டி தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து விலகுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தாநந்த அளுத்கம தீர்மானித்துள்ளார். குறித்த பதவி விலகல் கடிதத்தை மிக விரைவில் கையளிக்கவுள்ளதாகவும், இதுவரை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகாத 12 உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தாநந்த அளுத்கம தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Read More

மீன் ஏற்றுமதியில் இலங்கை முன்னேற்றம்

மீன் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 11 ஆம் இடத்திலிருந்து ஏழு இடங்கள் முன்னேறி 4 ஆவது இடத்தை பிடித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார். ஐரோப்பிய நாடுகளுக்கான மீன் ஏற்றுமதி தடை நீக்கப்பட்ட இரண்டு மாதங்களில் குறித்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இந்நிலையில் அலங்கார மீன் ஏற்றுமதியின் மூலம் கடந்த வருடத்தில் மாத்திரம் 2400 மில்லியன் ரூபா அரசுக்கு  வருமானம்…

Read More

முகமது அலியின் குருதியில் நச்சுத் தன்மை – இஸ்லாமிய முறைப்பாடி ஜனாஸா நல்லடக்கம்

-BBC- அமெரிக்காவின் கென்டகி மாநிலத்திலுள்ள, மறைந்த குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலியின் சொந்த ஊரான லூயிஸ்வில்லில் அவரது இறுதி சடங்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. வெள்ளிக்கிழமை நடக்கவுள்ள முகமது அலியின் இறுதி சடங்கு இந்த உலகின் ஒரு குடிமகனான வாழ்ந்த முகமது அலி, வரும் வெள்ளிக்கிழமையன்று நடைபெறும் தனது இறுதி சடங்கில் சமூகத்தின் அனைத்து மட்டங்களில் இருந்து பலதரபட்ட மக்களும் கலந்து கொள்ள விரும்புவார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். குறிப்பிடப்படாத இயற்கை காரணங்களால் குருதியில் நச்சுத்…

Read More

 குத்துச்சண்டை ஜாம்பவானான முஹம்மட் அலி காலமானார்

குத்துச்சண்டை ஜாம்பவானான முஹம்மட் அலி, தனது 74ஆவது வயதில் காலமானதாக அவரின் குடும்பப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். உலகின் முன்னாள் அதிபாரக் குத்துச்சண்டை சம்பியனும், உலகின் நன்கு அறியப்பட்டுள்ள விளையாட்டு வீரரான அலி, ஐக்கிய அமெரிக்காவின் அரிஸோனா மாநிலத்திலுள்ள ஃபோனிக்ஸ் நகரத்திலுள்ள வைத்தியசாலையில், இவ்வார ஆரம்பத்தில், அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே மரணமடைந்துள்ளார்.

Read More

பள்ளிவாசல் மீதான தாக்குதல் சம்பந்தமான வழக்கு ஒத்திவைப்பு

2015ம் ஆண்டு பொரள்ளை பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சு தாக்குதல் சம்வம் தொடர்பான வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 15ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குற்றச் சந்தேகநபர்கள் இருவர் நீதிமன்றில் ஆஜராகாததன் காரணமாகவே வழக்கு 15ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டதாக சட்டத்தரணி ரமீஸ் பஷீர் கூறினார். குறித்த வழக்கை இணக்கப்பாட்டுடன் முடிவுக்கு கொண்டு வருவதற்கு இருதரப்பும் இணங்கியுள்ள போதிலும், குற்றச் சந்தேகநபர்கள் இருவர் இன்று நீதிமன்றில் ஆஜராகி இருக்கவில்லை…

Read More