Headlines

விமானநிலையத்தில் கடமையில் ஈடுபட்டுள்ள குற்றப்புலனாய்வு பிரிவினர்

விமானநிலைய வளாகத்தில் குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்துகடமைகளில் ஈடுபட குற்றப்புலனாய்வு விசாரணை அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. கொலை குற்றங்கள் மற்றும் ஏனைய குற்றங்கள் புரிந்தவர்கள் இரகசியமாகவெளிநாடுகளுக்கு தப்பிச்செல்வதை தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கைமுன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அத்துடன் விமானநிலையத்தின் பாதுகாப்பும் இதன்மூலம் பலப்படுத்தப்படும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல குற்றங்கள் புரிந்து தப்பிச்சென்று வெளிநாட்டில் வசிக்கும்சந்தேகநபர்கள் மீண்டும் நாடு திரும்பும் போது கைது செய்வது இதன் மூலம்இலகுவாகியுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது.

Read More

கட்டுநாயக்கா விமானநிலையம் செல்பவர்களுக்கு எச்சரிக்கை

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனம் தமது விமானங்களில் சாம்சுங் நோட் 7 தொலைபேசிகளின் பாவனைக்கு முற்றாகத் தடை விதித்துள்ளது. இந்த தடை இன்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விதிக்கப்பட்டுள்ளதுடன், மக்களுக்கு தெளிவூட்டும் வகையில் அறிவித்தல் பலகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மின் வலுவேற்றும் போது கைபேசிகள் வெடித்துள்ளதாக 10 இற்கும் மேற்பட்ட பாவனையாளர்கள் முறைப்பாடு செய்ததை அடுத்து, சாம்சுங் நிறுவனம் தனது தற்போதைய வெளியீடான சம்சுங் நோட் 7 தொலைபேசிகளின் விற்பனையை தடைசெய்துள்ளது. எனினும் குறித்த தொலைபேசியை பயணத்தின்…

Read More

போதைப்பொருளுடன் பொலிவியா பெண் கைது

சுமார் மூன்று கிலோகிராம் நிறையுடைய கொக்கேய்ன் போதைப்பொருளை, இலங்கைக்கு கடத்திவந்த பொலிவியா நாட்டுப் பெண்ணொருவரை, கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த நிலையிலேயே, மேற்படி பெண் கைது செய்யப்பட்டதாக, விமான நிலையப் பொலிஸார் கூறினர்.

Read More

வழமைபோன்று செயற்படும் கட்டுநாயக்க விமான நிலையம்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகள் எந்தவித இடையூறுகளும் இன்றி இடம்பெறுவதாக விமான நிலைய செயற்பாட்டு அதிகாரி கூறினார். வழமை போன்று நாளாந்த விமான போக்குவரத்து செயற்பாடுகள் இடம்பெறுவதாக அவர் கூறினார். இலங்கை விமான நிறுவனத்தின் விமானிகள் மேலதிக வேலைகளில் இருந்து தவிர்ந்து கொள்வதற்கு தீர்மானித்துள்ளார்கள். விமானிகள் தொடர்பாக மேற்கொள்ளப்படுகின்ற பொதுவான விசாரணை சாதாரண முறையில் இடம்பெறக் கூடியதல்ல என்பதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக இலங்கை விமான நிறுவனத்தின் விமானிகள் அமைப்பு கூறியுள்ளது. அவர்களின்…

Read More

கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறங்கிய தென்னாபிரிக்க விமானம்!

சீனா நோக்கி பயணித்த தென்னாபிரிக்க விமானம் ஒன்று அவசரமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜாகொப் சூமா பயணித்த விசேட விமானமே இவ்வாறு தரையிறங்கியுள்ளது. குறித்த விமானம் இன்று அதிகாலை தரையிறங்கியுள்ளதாக விமான நிலைய தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தென்னாபிரிக்க ஜனாதிபதி சீனா நோக்கி பயணித்த நிலையில், விமானத்திற்கு எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக இவ்வாறு கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விமானத்திற்கு எரிபொருள் பெற்றுக் கொள்ளும் போது விமானத்தில் இருந்து…

Read More

இந்திய பெண்கள் இருவர் கைது

சட்டவிரோமான முறையில் இலங்கையிலிருந்து தங்கத்தை கடத்திச் செல்ல முற்பட்ட இந்திய பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க பண்டாராநாயக்க விமான நிலையத்தில், விமானத்தின் உள்ளே இருந்த நிலையில் இந்த பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான 3 தங்க பிஸ்கட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 28 மற்றும் 47 வயதுடைய பெண்களே கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் வயிற்றில் வைத்து இந்த தங்கக் கட்டிகளை மறைத்துக் கொண்டுச் சென்றதாக சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Read More

மூடப்படுகிறது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் பழுதுபார்க்கும் பணிகளுக்காக அடுத்த வருட ஆரம்பத்திலிருந்து மூன்று மாதங்களுக்கு மூடப்படவுள்ளது என்று விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்பிரகாரம் 2017 ஜனவரி 6ஆம் திகதி முதல் 2017 ஏப்ரல் 6ஆம் திகதி வரை பகல் வேளைகளில் காலை 8.30 முதல் மாலை 4.30 வரை மாத்திரம் விமான நிலையம் மூடப்படும். அந்தக் காலப் பகுதியில் சகல விமானங்களினதும் வருகைகளும் புறப்படல்களும் இரத்துச் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. விமான நிலையம் இவ்வாறு மூடப்படுவது…

Read More

மூன்று மாதங்களுக்கு மூடப்படும் கட்டுநாயக்க விமான நிலையம்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் பழுதுபார்க்கும் பணிகளுக்காக அடுத்த வருட ஆரம்பத்திலிருந்து மூன்று மாதங்களுக்கு மூடப்படவுள்ளது என்று விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்பிரகாரம் 2017 ஜனவரி 6ஆம் திகதி முதல் 2017 ஏப்ரல் 6ஆம் திகதி வரை பகல் வேளைகளில் காலை 8.30 முதல் மாலை 4.30 வரை மாத்திரம் விமான நிலையம் மூடப்படும். அந்தக் காலப் பகுதியில் சகல விமானங்களினதும் வருகைகளும் புறப்படல்களும் இரத்துச் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. விமான நிலையம் இவ்வாறு மூடப்படுவது…

Read More

3 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்குவதற்கு இருந்த மூன்று விமானங்கள் மத்தல மற்றும் இந்தியாவுக்கு திருப்பிவிடப்பட்டன என்று விமான நிலையத்தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்டுநாயக்கவில் அதிகூடிய, மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

கட்டுநாயக்கா விமான நிலையத்தில், பெண்களுக்கு என தனி தொழுகையறை

– Ash-Sheikh TM Mufaris Rashadi – அல் ஹம்துலில்லாஹ் ஸ்ரீலங்கா கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கான தொழுகை அறை ஆண்களுக்கு வேறாகவும் பெண்களுக்கு வேறாகவும் அமைக்கப்பட்டுள்ளதை. சந்தோசமாக தெரிவித்துக் கொள்கின்றோம் அல்ஹம்துலில்லாஹ். இந்த நற்செய்தியை நண்பர்களுக்கும் பகிரவும்.

Read More