Headlines

ஜெயலலிதாவின் சிறுநீரகம் செயலிழப்பு: தமிழக அரசியலில் பரபரப்பு!

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிறுநீரகம் செயலிழந்துள்ளதால் உடனடி அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா கொண்டு செல்லப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலமைச்சர் ஜெயலலிதா திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல் நிலையில் சிறு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் இட்லி போன்ற உணவு வகைகளை எடுத்துக்கொள்வதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. இந்த நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதா உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருப்பதாக அதிமுக வட்டாரத்தில் இருந்து தகவல்கள்…

Read More

திருக்குர்ஆன் போதனைகளின்படி வாழ்ந்தால் உலகத்தில் அன்பும், மனிதநேயமும் தழைத்தோங்கும் – ஜெயலலிதா

திருக்குர்ஆன் போதனைகளின்படி வாழ்ந்தால் உலகத்தில் அன்பும், அறமும், மனிதநேயமும் தழைத்தோங்கும் – முதல்வர் ஜெயலயலிதா…..!! திருக்குர்ஆன் போதனைகளின்படி வாழ்ந்தால் உலகத்தில் அன்பும், அறமும், மனிதநேயமும் தழைத்தோங்கும் என்று முதல்வர் ஜெயலயலிதா பக்ரீத் பெருநாள் வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டு ஹஜ் பெருநாள் வாழ்த்து செய்தியில்… இறைவனுக்காக எதையும் தியாகம் செய்யும் உயரிய எண்ணத்தை பறைசாற்றும் திருநாளாம் பக்ரீத் திருநாளைக் கொண்டாடி மகிழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த பக்ரீத் திருநாள்…

Read More

மதுவிலக்கை அமல்படுத்துவதில் உறுதியாக உள்ளேன்: ஜெயலலிதா

தமிழக சட்டமன்றத்தில் மதுவிலக்கு தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:- தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதில் உறுதியாக உள்ளேன். இதற்காக முதல்கட்டமாக 500 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. கடைகளின் நேரமும் குறைக்கப்பட்டுள்ளது. மதுவிலக்கை உண்மையாக அமல்படுத்துவதில் அ.தி.மு.க. தான் அதிக அக்கறை கொண்டுள்ளது. 1971-ல் பூரண மதுவிலக்கு அமலில் இருந்தபோது அப்போதைய முதல்வர் கருணாநிதி மதுவிலக்கை தளர்த்தினார். 2007-ல் அவர் முதல்வராக இருந்தபோது, கள்ளச்சாராயத்தை அறவே ஒழிக்க முடியாது என்றார். இவ்வாறு அவர் பேசினார். முதல்வரின் பேச்சுக்கு பதில் தர…

Read More

ஜெயா ஆட்டம் ஆரம்பம் – 500 மதுபான சாலைகளுக்கு பூட்டு

தமிழக முதல்வராக 6 ஆவது முறையாக பதியேற்றுள்ள முதல்வர் ஜெயலலிதா தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் தனது பதவி பிரமாணத்தின் பின்னர் புதிய கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார். விவசாய கடன் தள்ளுபடி, மதுபான சாலைகள் குறைப்பு உள்ளிட்ட உத்தரவுகள் அடங்கிய 5 கோப்புகளில் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டார். இது தொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழக முதல்வராக ஆறாவது முறையாக இன்று (23.5.2016) ( நேற்று) பதவியேற்றுக்கொண்ட ஜெயலலிதா, சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில்…

Read More

ஜெயலலிதா! பதவியேற்பு விழாவில் முக்கிய தலைவர்கள்

தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக ஆறாவது முறை இன்று ஆட்சியில் அமரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலிதாவின் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடியின் சார்பில் மத்திய மந்திரிகள் வெங்கையா நாயுடு, நிர்மலா சீதாராமன், ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்துகின்றனர். ஆறாவது முறையாக முதல்வராகிறார்: ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் மத்திய மந்திரிகள், ஒடிசா முதல்வர் பங்கேற்பு

Read More

மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய ஜெயலலிதா

பரபரப்புடன் 232 தொகுதிகளில் நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலின் முடிவுகள் வெளியாகிறது. இதுவரை 220 தொகுதிகளின் நிலவரம் அறிவிக்கப் பட்ட நிலையில் ஆளும் அதிமுகா 139 தொகுதிகளை வென்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கிறது.

Read More

தமிழ்நாடு தேர்தலில் ஆளும் அதிமுக முன்னிலை!

கடந்த 16ம் திகதி நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஆளும் அதிமுக தற்போதைய நிலைவரப்படி 115 இடங்களைப் பெற்று முன்னிலை வகிப்பதாக செய்திகள் தெரிவித்துள்ளன. மேலும், திமுக 81 இடங்களைப் பெற்றுள்ளதாக செய்திகள் தெரிவித்துள்ளன.

Read More

ஜெயாவின் பிரசாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி இருவர் பலி

இந்தியா-விருத்தாசலத்தில் ஜெயலலிதா பங்கேற்ற அ.தி.மு.க.வின் தமிழக சட்டமன்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த இருவர் பலியாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்ட சிதம்பரம் நகரப்பகுதியை சேர்ந்த கருணாகரன் மற்றும் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் ஆகியோர்கள்தான் பலியானவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. நேற்று (11) விருத்தாச்சலத்தில் நடைபெற்ற அ.தி.மு.க.வின் வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பங்கேற்று உரையாற்றினார். மிகப்பெரிய மைதானத்தில் நடத்தப்பட்ட இந்த…

Read More