Headlines

வடக்கிற்கு செல்லும் பரணகம ஆணைக்குழு

காணமல்போனோர் தொடர்பான முறைபாடுகளை விசாரணை செய்யும் மெக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு எதிர்வரும் 27ஆம் திகதி முதல் மார்ச் முதலாம் திகதி வரையில் நான்கு நாள் அமர்வுகளை யாழ்ப்பாணத்தில்  நடத்தவுள்ளது. நான்கு தினங்களும் முற்பகல் 8.30முதல் மாலை 5.30 வரையில் அமர்வுகள் இடம்பெறவுள்ளன. 27ஆம்திகதி வலிகாமம் கிழக்கு(கோப்பாய்) வடமராட்சி வடக்கு(பருத்தித்துறை) வடமராட்சி தென்மேற்கு(கரவெட்டி) ஆகிய பிரதேச சபைளுக்காக வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேச செயலத்திலும் 28ஆம் திகதி தீவகம் தெற்கு(வேலணை), ஊர்காவற்துறை, காரைநகர், நெடுந்தீவு ஆகிய…

Read More

கெஹெலிய ரம்புக்வெல்ல யாழ் நீதிமன்றில் ஆஜர்

யாழ்.குடாநாட்டில் அரசியல் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் காணாமல் போன லலித், குகன் வழக்கில் முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல யாழ்.நீதிமன்றில் ஆஜராகி உள்ளார். லலித், குகன் ஆகிய இருவரும் கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ம் திகதி யாழ்.புத்தூர் பகுதியில் வைத்து காணாமல் போயிருந்தனர். இந்நிலையில் லலித், குகன் ஆகியோர் உயிருடன் உள்ளனர் என முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்ம்புக்வெல்ல ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கூறியிருந்தார். இதனையடுத்து லலித், குகன் ஆகியோரின் உறவினர்களால்…

Read More

வாகன விபத்தில் சிறுமி பலி : யாழில் சம்பவம்

யாழ். – வேலணை பகுதியில் கடற்படையினர் கெப் ரக வாகனத்தில்  மோதி சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்தில் 10 வயது சிறுமி ஒருவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக  யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

கிடங்கிற்குள் இறங்கியவர்கள் மர்மமாய் உயிரிழப்பு

யாழ்ப்பாணம், உடுப்பிட்டி பகுதியிலுள்ள வீடொன்றின் குழாய்க் கிணறு அருகிலிருந்த கிடங்கிற்குள் பூட்டப்பட்டிருந்த மோட்டாரை பழுதுபார்க்க நேற்று புதன்கிழமை (02) மாலை குறித்த கிடங்கினுள் இறங்கிய இருவர் மர்மான முறையில் இறந்துள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். புலோலி பகுதியைச் சேர்ந்த எஸ்.மகாநாயகம் (வயது 56), பருத்தித்துறையைச் சேர்ந்த என்.கிருஸ்ணமூர்த்தி (வயது 61) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். மேற்படி பள்ளத்தில் பொருத்தப்பட்டிருந்த மோட்டார் பழுதடைந்ததையடுத்து, அதைத் திருத்துவதற்காக ஒருவர் கிடங்கினுள் இறங்கியுள்ளார். இறங்கியவர் எவ்வித சத்தமும் இல்லாமல் இருப்பதை அவதானித்த…

Read More

மாணவன் தற்கொலை: வட மாகாண பாடசாலைகள் மூடப்பட்டது!

வட மாகாண பாடசாலைகளுக்கு இன்று (27) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வட மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா தெரிவித்தார். யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டமைக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் இவ்வாறு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

கடிதம் தொடர்பில் இருவேறு கோணங்­களில் விசா­ரணை

யாழ்.கோண்­டாவிலில் புகை­யி­ர­தத்தின் முன் பாய்ந்து பாட­சாலை மாணவன் தற்­கொலை செய்­து­கொண்ட விவ­காரம் தொடர்பில் சிறப்பு விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவண் குண­சே­கர கேச­ரிக்கு தெரி­வித்தார். 18 வய­தான ராஜேஸ்­வரன் செந்­தூர ன்என்ற மாணவன் தற்­கொலை செய்­து­கொண்­டுள்ள நிலையில் அவ­ரது சட­லத்­துக்கு அருகே காணப்­பட்ட அர­சியல் கைதி­களின் விடு­த­லையை வலி­யு­றுத்­திய கடிதம் தொடர்பில் விஷேட அவ­தானம் செலுத்­தப்­பட்­டுள்­ள­தாக அவர் சுட்­டிக்­கட்­டினார். குறித்த அப்­பி­யாசக் கொப்­பியில் இருந்த அந்த கடி­த­மா­னது உண்­மையில் தற்­கொலை…

Read More

மீளக்குடியேறியுள்ள யாழ்.முஸ்லிம்களின் பரிதாபகரமான நிலைமை (படங்கள்)

யாழ்ப்பாணத்தில் தற்போது மீளக் குடியேறி எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி காணப்படும் முஸ்லிம் மக்களின் நிலைமையை இப்புகைப்படங்கள் சுட்டிக்காட்டுகின்றன. 1990 ஆண்டு இப்பகுதியில் வசதியாக வாழ்ந்த அம்மக்கள் விடுதலை புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டிருந்தனர். ஆனால் இவ்வெளியேற்றத்தை முன்வைத்து சில தரப்பினர் வாதப்பிரதிவாதங்களை சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ற ஏற்படுத்தி வருவதை பல்வேறு ஊடகங்கள் வாயிலாக அறிகின்றோம். ஏன் அம்மக்களை மீண்டும் மீளக்குடியேற்றம் செய்ய முடியாது.சில தரப்பினர் இதனை தங்களது இலாப நட்டங்களிற்காக இச்செயலை செய்வதை  பின்னிற்கின்றனர் என்பதே உண்மை. அம்மக்கள்…

Read More

ஒஸ்மானியா கல்லூரியில் எல்லே விளையாடிய சமந்தா பவர்

இலங்கை வந்துள்ள ஐ.நாவுக்கான அமெரிக்க பிரதிநிதி சமந்தா பவர், நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன் போது யாழ் ஒஸ்மானியா பெண்கள் கல்லூரியின் புதிய கட்டடத்தை சமந்தா பவர் திறந்து வைத்துள்ளார். இவ்விழாற்கு பிரதம அதிதிகளாக வருகை தந்திருந்த சமந்தா பவர் மற்றும் சீ.வி. விக்னேஸ்வரன் ஆகியோர் கட்டிடத்தை திறந்து வைத்துள்ளனர். இதன்போது, ஒஸ்மானிய கல்லூரி மாணவிகளுடன் சமந்தா பவர் எல்லே விளையாட்டில் ஈடுபட்டுள்ளார்.

Read More

நாகதீபத்தின் பெயரை மாற்ற முடியாது! பைஸர் முஸ்தபா மறுப்பு

யாழ்ப்பாண தீபகற்பத்திற்கு உட்பட்ட நாகதீபம் என்ற தீவின் பெயரை மாற்றுவதற்கு முடியாது என்று உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். கடந்த 5ம் திகதி வடமாகண சபை அமர்வின் போது பெயர் மாற்றம் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இது குறித்து கருத்து வெளியிடும் போது அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.

Read More

யாழ்ப்பாணத்தில் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம்  – உடுவில் பகுதியில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகத்திடமாக வீடொன்று பூட்டப்பட்டிருந்த நிலையில் இது தொடர்பில் அயலவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து பொலிஸார் குறித்த சடலத்தை மீட்டுள்ளனர். சம்பவத்தில் 65 வயதுடைய பெண்ணின் சடலமே மீட்கப்பட்டுள்ளது. பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More