Headlines

வங்கியொன்றில் 2 இலட்சம் ரூபா போலி நாணயத்தாள்கள் மீட்பு : யாழில் சம்பவம்

யாழ்ப்பாணத்தில் உள்ள வங்கியொன்றில் 2 இலட்சம் ரூபா பெறுமதியான போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் அது தொடர்பான விசாரனைகளை மேற்கொண்டு வருவதாக காங்கேசன்துறைக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எம்.ஜவ்பர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இன்றைய தினம் காலை இளவாளை பகுதியைச் சேர்ந்த குடும்பம் ஒன்று திருமண செலவுக்காக மானிப்பாயில் உள்ள தனியார் வங்கியொன்றுக்கு சென்று பதினேழு பவுண் நிறையுடைய ஆபரணங்களை அடகு வைத்துள்ளனர். இவ்வாறு அடகு வைத்து அவர்கள் வங்கிகளிடமிருந்து…

Read More

சீன தூதுவர் – வடமாகாண ஆளுனருடன் சந்திப்பு

யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள சீன நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஜி ஸியாங்லியாங் அடங்கிய குழுவினர் இன்று(14) வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் கூரேவை சந்தித்து கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணத்திலுள்ள வடமாகாண ஆளுனர் செயலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் மத்திய அரசாங்கத்தினால் வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அபிவிருத்தி செயற்பாடுகள் மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகள் தொடர்பில் ஆளுனர் தூதுவரிற்கு விளக்கமளித்தார்.

Read More

யாழ்ப்பாண முஸ்லிம்கள் வாழும் பகுதிகள், மழை நீரில் மூழ்கின

-பாறுக் ஷிஹான் – யாழ்ப்பாணத்தின் முஸ்லிம் மக்கள் வாழும்  பல்வேறு பகுதிகள் மழை காரணமாக நீரில் மூழ்கியுள்ளதுடன் மக்களின் அன்றாட வாழக்கை பாதிப்படைந்துள்ளதை காண முடிந்தது. நேற்று முற்பகல் 11.30 மணி முதல் தொடர்ச்சியாக பெருமழை அப்பகுதிகளில்  பெய்துவருகின்றது. சில வீதிகள்  ஆங்காங்கே வெள்ள நீரினால்  மூடப்பட்டுள்ளன. இப்பகுதியில் கடந்த சில தினங்களில்  நிலவிய கடுமையான வெப்பத்தையடுத்து நேற்று  முற்பகல் முதல் கன மழை தொடர்ந்த  வண்ணமுள்ளது. இதனால் கிராம சேவகர் பிரிவுகளான ஜே-85இஜே-86இஜே-87 இஜே-88 பகுதிகளில்…

Read More

வாள், கத்தி உற்பத்தி செய்ய தடை

– எம்.றொசாந்த் – வாள்கள், ஆபத்தான கத்திகள் என்பவற்றை தொழிற்சாலைகள் உற்பத்தி செய்வதற்குத் தடையுத்தரவு பிறப்பித்துள்ள யாழ். மேல் நீதிமன்றம், அவற்றை வைத்திருப்பவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் உடனடியாகக் கையளிக்க வேண்டும் உத்தரவிட்டுள்ளது.

Read More

மீள்குடியேற்றப் பிரச்சினைக்கு றிஷாத்தின் நேரடிப் பங்குபற்றலுடன் தீர்வு

நீண்ட காலமாக இழுபரிக்குள்ளான நிலையில் இருந்த யாழ் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தில் ஏற்பட்டிருந்த, முட்டுக்கட்டையான பிரச்சினைகள் பலவற்றுக்கு யாழ் கச்சேரியில் இடம்பெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் தீர்வு எட்டப்பட்டுள்ளது. அமைச்சர் றிஷாத்தின் நெறிப்படுத்தலில், அவரின் நேரடிப் பங்கேற்புடன், யாழ் அரசாங்க அதிபர் வேதநாயகன் தலலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெற்றது. யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன், யாழ் மாவட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்ற  நடவடிக்கைகளுக்கான அமைச்சர் றிஷாத்தின் பிரதிநிதி மௌலவி பி.ஏ.எஸ்.சுபியான் ஆகியோரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் யாழ்ப்பாணம்,…

Read More

விக்னேஸ்வரனிடம் நலம் விசாரித்த அமைச்சர் றிஷாத்!

யாழ்ப்பாணத்திற்கு திடீர் விஜயம் செய்த கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றிஷாத் பதியுதீன் வட மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரனை அவரது இல்லத்தில் நேற்று (25) மாலை சந்தித்து நலன் விசாரித்துள்ளார். இந்த சந்திப்பின்போது யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனும் பங்கேற்றுள்ளார். இதன்போது திடீர் சுகவீனமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த வடமாகாண முதலமைச்சரின் உடல் நலன் குறித்து றிஷாத் பதியுதீன் விசாரித்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை மீள ஆரம்பிக்கப்படும் – அமைச்சர் றிஷாத்

– சுஐப் எம்.காசிம்  – காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பதற்கு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகம் தலைமையில், இன்று (25/04/2016 ) இடபெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் இன்னும் சில கலந்துரையாடல்களை மேற்கொண்டு வெகு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். யாழ் கச்சேரியில் இந்த உயர்மட்ட மாநாடு நடந்து முடிந்த பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த அமைச்சர், மாநாட்டில் பங்கேற்ற மக்கள் பிரதிநிதிகள், புத்தி ஜீவிகள், சூழலியலாளர்கள்…

Read More

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு அமைச்சர் றிஷாத் விஜயம்

– சுஐப் எம்.காசிம்  – காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீண்டும் ஆரம்பித்து இயங்கச் செய்வதற்காக அமைச்சர் றிஷாத் பதியுதீன் இன்று காலை (25/04/2016) அந்தத் தொழிற்சாலை அமைந்துள்ள பிரதேசத்துக்குச் சென்று பார்வையிட்டார். சுமார் 687 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட இந்தத் தொழிற்சாலையின் கட்டிடங்கள் மற்றும் இயந்திரங்கள், இடிபாடுகளுக்கு மத்தியில் கிடந்ததைக் கண்டு அமைச்சர் அதிர்ச்சி அடைந்தார். தொழிற்சாலையின் பெரும்பாலான பகுதிகளைச் சுற்றிப் பார்வையிட்டார். அங்குள்ள பல்வேறு உபகரணத் தொகுதிகள், இரும்புக் கேடயங்கள், இரும்பு உலைகள் ஆகியவை, அண்மைக்…

Read More

ரவுடித்தனத்தில் ஈடுபடும் மாணவர்கள் சிறைக்குள் செல்ல நேரிடும் நீதிபதி எச்சரிக்கை.!

யாழ் மாவட்டத்தில் ரவுடித்தனத்திலும் தெருச் சண்டித்தனத்திலும் ஈடுபடும் மாணவர்கள் சிறைத் தண்டனைக்கு உள்ளாக நேரிடும் என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை செய்துள்ளார். ரவுடித்தனத்தில் ஈடுபடும் மாணவர்கள் உயர் கல்விக்காகப் பல்கலைக்கழம் செல்ல முடியாத நிலை உருவாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ரவுடித்தனம், தெருச் சண்டித்தனம் என்பவற்றில் ஈடுபடும் பிள்ளைகளை கட்டுப்பாட்டில் வைப்பதற்கு சம்பந்தப்பட்ட பெற்றோர்கள் உடனடியாகச் செயற்பட வேண்டும் என்றும் நீதிபதி இளஞ்செழியன் அறிவுறுத்தியுள்ளார். போதை வஸ்து வழக்கொன்றில் மேல் நீதிமன்றத்தில் பிணை…

Read More

கிணறு வெட்டும் போது வெளிவந்த மர்மப்பொருட்கள்!

யாழ்ப்பாணம் நல்லூர்ப் பகுதியில் கிணறு வெட்டும்போது மண்ணுக்குள் புதைந்திருந்த 2 மர்மப்பொருட்களை வெளியே எடுத்துள்ளதாகவும், மேலும் ஒரு மர்மப்பொருள் மண்ணிற்குள் புதைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த சம்பவம் நேற்று மாலை வேளையில் நடந்துள்ளது. மண்ணுக்குள் புதைந்திருந்த 2 மர்மப்பொருட்கள் வெளியேற்றப்பட்டுள்ளது எனவும் மேலும் ஒரு மர்மப்பொருள் இன்னமும் மண்ணிற்குள் புதைந்திருப்பதாகவும் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் குறித்த பகுதிக்குச் சென்ற யாழ் பொலிஸார் அதனை பார்வையிட்டதுடன், விசேட அதிரடிப்படையினரிடம் குறித்த…

Read More

குற்றச்செயல்களைத் தடுக்க வடக்கில் பாதுகாப்பு தீவிரம்!

வடக்கில் இடம்பெற்றுவரும் கொலை, கொள்ளைகள், மதுபோதை பாவனை, பாலியல் துஷ்பிரயோகம் முதலான குற்றச் செயல்களைத் தடுப்பதற்காக பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதற்கமைய காலை, மாலை, இரவு பொலிஸ் ரோந்து சேவைகள், உடனடி வீதித் தடைகள், உடனடி சுற்றிவளைப்புகள் என்பன ஏற்படுத்தப்பட்டு வடக்கின் அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பு விஸ்தரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும் யாழ். மாவட்ட எம்.பியுமான டக்ளஸ்…

Read More

யாழில் பாரிய போராட்டம்

அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும் அவர்­களின் உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்­டத்­திற்கு வலுச்­சேர்க்கும் வகை­யிலும் யாழில் பாரிய கவ­ன­யீர்ப்பு போராட்டம் ஒன்று இன்­றைய தினம் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது. இந்நிலையில் நீண்­ட­கா­ல­மாக விசா­ர­ணை­க­ளின்றி மகசின் சிறைச்­சா­லையில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்கும் தமிழ் அர­சியல் கைதிகள் 14பேர் தமது விடு­த­லையை வலி­யு­றுத்தி நேற்று (01) செவ்­வாய்க்­கி­ழமை எட்­டா­வது நாளா­கவும் உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்­டத்தை முன்­னெ­டுத்­தி­ருந்­தனர். தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­த­லைக்­கான வெகு­ஜன அமைப்பின் ஏற்­பாட்டில் இன்று முற்­பகல் 10 மணி­ய­ளவில் யாழ்ப்­பாண பிர­தான பேருந்து நிலை­யத்­திற்கு முன்­பாக இக்­க­வ­ன­யீர்ப்பு…

Read More