Headlines

ஈரானியர்கள் முஸ்லிம்கள் இல்லை – சவூதி அரேபியாவின் தலைமை முப்தி பத்வா

ஈரானியர் ‘முஸ்லிம்கள் இல்லை’ என்று சவூதி அரேபியாவின் தலைமை முப்தி அப்துல் அஸீஸ் அல் ஷெய்க் குறிப்பிட்டுள்ளார். ஹஜ் கடமையை சவூதி அரேபியா நிர்வகிப்பது குறித்து ஈரான் உயர்மட்ட தலைவர் கண்டனம் வெளியிட்ட அடுத்த தினமே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். ஆயதுல்லாஹ் அலி கமெனியின் குற்றச்சாட்டுகள் குறித்து அதிர்ச்சி அடையவில்லை என்று அல் ஷெய்க் குறிப்பிட்டுள்ளார். “அவர்கள் மாஹியின் புதல்வர்கள்” என்றும் அவர் குறிப்பிட்டார். இஸ்லாத்திற்கு முன்னர் ஈரானில் ஆதிக்கம் செலுத்திய சொரொஸ்ட்ரியனிஸம் மதத்தையே இதன்போது…

Read More

ஈரான் அணு விஞ்ஞானி தூக்கில் போட ஹிலாரி கிளிண்டன்தான் காரணம்: டிரம்ப்

வருகிற நவம்பர் 8-ந்தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். பெரும் கோடீசுவரரான இவர் தன்னை எதிர்த்து போட்டியிடும் ஹிலாரி கிளிண்டனை கடுமையாக தாக்கி வருகிறார். அவரை சாத்தான் என்று வசைபாடினார். ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் நிறுவனர் என்று பட்டம் சூட்டினார். தற்போது ஈரான் அணு விஞ்ஞானி ஷாக்ரம் அமீர் தூக்கிலிடப்பட்டதற்கு ஹிலாரி கிளிண்டனே காரணம் என கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். ஈரான் அணு விஞ்ஞானி ஷாக்ரம் அமீர்…

Read More

ஈரான் – இலங்கை பேச்சுவார்த்தை வெற்றி

ஈரானுடன் மீண்டும் வர்த்தகத் தொடர்பை ஆரம்பிக்க இணக்கம் காணப்பட்டுள்ளதாக, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இதன்படி, விரைவில் மிகவும் குறைந்த செலவில் ஈரானிடம் இருந்து மசகு எண்ணெயை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் ஈரானின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் நேற்று மாலை ரவி கருணாநாயக்கவுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார். இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்ட போதே நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க இவ்வாறு கூறியுள்ளார்.

Read More

சவூதிக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

சிரியாவுக்கு தரைப் படையினரை அனுப்புவதன் மூலம் அந்த நாட்டு விவகாரத்தில் சவூதி தலையிடுவதை அனுமதிக்க மாட்டோம் என ஈரான் ராணுவ துணைத் தளபதி மசூத் ஜஸாயெரி தெரிவித்துள்ளார்.  தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கேள்வியொன்றுக்கு பதில் அளிக்கையில்,  “”சிரியாவில் கிளர்ச்சியைத் தூண்டும் நாடுகளின் எண்ணம் ஈடேற நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அந்தப் படைகள் சிரியாவுக்குள் நுழைந்தால் அதற்குத் தகுந்த பதில் நடவடிககைகளை மேற்கொள்வோம்” என்றார் அவர்.

Read More