Headlines

இன்று முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

அரச மற்றும் அரசுடன் இணைந்து செயற்படும் தனியார் பாடசாலைகளின் இந்த ஆண்டுக்காக இரண்டாம் தவணைக் காலம் இன்றுடன் நிறைவடைகிறது. அதன்படி மீண்டும் ஆகஸ்ட் மாதம் 31ம் திகதி அனைத்து பாடசாலைகளினதும் மூன்றாம் தவணைக் காலம் ஆரம்பமாகவுள்ளன. கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 02ம் திகதி முதல் 27ம் திகதி வரையில் இடம்பெற உள்ளது. தொடர்ந்து விடைத்தாள்களை திருத்தும் பணிகள் இடம்பெற இருப்பதால் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் தினம் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Read More

நாளை விடுமுறை இல்லை

அரசாங்க ஊழியர்களுக்கு நாளை திங்கட்கிழமை விடுமுறை இல்லை என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவிக்கின்றது. இதேவேளை, பாடசாலைகள் நாளை திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன், இயற்றை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் மாத்திரம் அந்தந்த கல்வி வலய பணிப்பாளரிடம் அனுமதி பெற்று விடுமுறை வழங்குவதற்கு பாடசாலை அதிபர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Read More

பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு, சுற்றலா போகாதீர்கள்..!

அனர்த்தம் இடம்பெற்ற பகுதிகளுக்கு ஒரு சிலர் சுற்றுலாக்களை மேற்கொள்வதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வெள்ளம் மற்றும் மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட செல்லும் நபர்களினால் மீட்புப் பணிகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறிப்பாக அரநாயக்க பகுதிக்கு பலர் வெறுமனே ஒர் சுற்றலா செல்வதனைப் போன்று சென்று வருவதாகவும் இவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதனையும் எடுத்துச் செல்வதில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவ்வாறான நபர்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மெய்யாகவே நிவாரணங்களை வழங்குவோருக்கு இடையூறு ஏற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது….

Read More