Headlines

யாகூவின் முடிவு இப்படியாகும் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை!

இணையத்தில் தேடுதல், செய்தி, வீடியோ போன்ற தேவைகளுக்கு முன்பெல்லாம் கூகுளை விட யாகூவைத்தான் அதிகமான மக்கள் பயன்படுத்தினார்கள். ஆனால், 2000-ம் ஆண்டுக்குப் பின்னர் யாகூவின் செல்வாக்கு சரிய தொடங்கியது. கூகுள், யூ-டியூப், பேஸ்புக் போன்ற புது வரவுகளால் யாகூவின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. எனவே கடந்த சில மாதங்களுக்கு முன் யாகூ நிறுவனத்தை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. யாகூவை வாங்க கடந்த சில மாதங்களாக பல நிறுவனங்கள் முயற்சித்து வந்த நிலையில் வெரைஸான் தொலைத்தொடர்பு…

Read More

இலங்கை வரும் மார்க் ஜுகர்பேர்க்

பேஸ்புக் நிறுவுனர் மார்க் சக்கர்பெக் மற்றும் கூகுள் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி சுந்தர் பிச்சையும் இந்த வருடத்தின இறுதியில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் தொழிநுட்ப அமைச்சர் ஹரின் பெர்னான்டோ மற்றும் அதிவேக அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க ஆகியோரின் ஏற்பாட்டினால் இவர்கள் இலங்கை வரவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நாட்டின் தொழில்நுட்பத்துறைக்கு தேவையான அறிவை வளர்க்க நாட்டில் புதியதொழில்நுட்பங்களை கொண்டு அரசாங்கத்தின் கொள்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்குடனேயே இவர்கள் இங்கு வரவுள்ளதாக அமைச்சு வட்டாரங்கள் தகவல்…

Read More

சிகிரியாவுக்கு கூகுள் பலூன்

சிகிரியாவில் நாளை 31ஆம் திகதியன்று, 5 ஆயிரம் இளைஞர்களின் பங்குபற்றலுடன் கூகுள் பலூன் ஒன்று காட்சிப்படுத்த எதிர்ப்பார்ப்பதாக தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார். கடந்தமுறை உடைந்து விழுந்ததாகக் கூறப்படும் கூகுள் பலூன், உண்மையில் உடைந்து விழுந்ததா அல்லது தரையிறக்கப்பட்டதா என்பது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்ற போதிலும், இது தொடர்பில் எதிர்வரும் நாட்களில் விளக்கமளிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

Read More

கூகுள் வீதி வரைபடம் நன்மையா தீமையா?

– அஸீம் கிலாப்தீன் – முதல் உலகிலுள்ள சுமார் 65க்கும் மேற்பட்ட நாடுகளிலுள்ள Street View Map இனை கூகுள் ஏர்த் (Google Earth) மென்பொருளின் மூலமாக மிகத்துல்லியமான முறையில் பார்வையிடலாம் என்று கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த 65க்கும் அதிகமான நாடுகளின் பட்டியலில் இலங்கையும் அடங்குகிறது. பொதுவாகவே சமகால உலகில் தொழிநுட்பவளர்ச்சியின் அவசியமானது சகலருக்குமே மிகவும் இன்றியமையாததாக காணப்படுவதை நாம் ஒவ்வொருவரும் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். http://www.google.com/maps/streetview/#sri-lanka-highlights அதேபோன்று சர்வதேச மயப்படுத்தப்பட்ட ஒரு பாரிய தொழிநுட்ப பரப்பினுள்ளே நமது…

Read More

பஸ்ஸுடன் மோதியது சாரதியற்ற கூகுள் கார்

கூகுள் நிறுவனத்தின் சாரதியற்ற காரொன்று பஸ் ஒன்றுடன் மோதிய சம்பவம் கடந்த மாதம் இடம்பெற்றதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ளள வீதியொன்றில் பெப்ரவரி 14 ஆம் திகதி இக் கார் சென்றுகொண்டிருந்தபோது பயணிகள் பஸ் ஒன்றுடன் மோதியதாகவும் இவ் விபத்து தொடர்பான சில பொறுப்புட மைகளை தான் ஏற்றுக்கொள்வதாகவும் நேற்று முன்தினம் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. சென்ஸர்கள், கெமராக்கள் பொருத்தப்பட்டுளள்ள Lexus SUV ரகத்தைச் சேர்ந்த இக் கார், கலிபோர்னியாவின் மவுட் வியூ நகரிலுள்ள…

Read More

குழந்தைகளுக்கான புதிய தேடல் பகுதியை உருவாக்கியுள்ள கூகுள்

அவ்வப்போது ஏதேனும் புதுமையான வசதிகளைத் தன் வாடிக்கையாளர்களுக்குத் தந்து வருகிறது கூகுள் நிறுவனம். அதன் தொடர்ச்சியாக மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட குழந்தைகளுக்கான கிடில் எனப்படும் புதிய இணையதள சேவையை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. www.kiddle.co என்ற இணைய தளம் தான் அது. மிகவும் வண்ணமயமாக வேற்றுகிரகத்தின் பகுதியை போல், குழந்தைகள் ரசிக்குபடி அதன் முகப்பு பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மற்றும் சிறுவர்களை இலக்காகக் கொண்டு இந்த சேவை வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது. இதன் மூலம், சிறுவர்கள், தாங்கள் தேடி…

Read More

இலங்கையில் மேலும் சில கூகுள் பலூன்கள்

மற்றுமொரு கூகுள் பலூனை விண்ணில் செலுத்தவுள்ளதாக, இலங்கை தகவல் தொழில்நுட்ப மற்றும் தொடர்பாடல் பிரதிநிதிகள் நிறுவனத்தின் வேலைத்திட்ட முகாமையாளர் கவாஸ்கர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இதுபோன்று மேலும் சில கூகுள் பலூன்களை அந்த நிறுவனம் இலங்கைக்கு வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ´புரோஜெக்ட் லூன்´ எனப்படும் கூகுளின் அதிவேக இணைய சேவைக்கான பரிசோதனை கடந்த திங்கட்கிழமை இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

கூகுள் பலூன் விழுந்து நொறுங்கியது

“project loon” என அழைக்­கப்­படும் அதி­வேக இண்­டர்நெட் சேவை வழங்கும் கூகுள் பலூனின் முதல் சோத­னை இலங்­கையில் ஆரம்­பிக்கப்பட்­டது. இப்­ப­ரி­சோ­த­னையில் பயன்­ப­டுத்­தப்­பட இருக்கும் மூன்று பலூன்­களில் ஒன்று இலங்­கையின் தெற்குப் பகு­தி­யி­னூ­டாக திங்கட்கிழமை காலை இலங்கை வான்­வெ­ளியில் பிர­வே­சித்­தது அனை­வரும் அறிந்­ததே. விமா­னங்கள் பறப்­பதை விட இரண்டு மடங்கு உய­ர­மான வெற்­றுக்­கண்­ணுக்கு புலப்­ப­டாத ஆகா­யத்­தி­லேயே நிலை கொண்­டி­ருக்கும் இந்த பலூன் நேற்று வான் வெளியில் பழு­த­டைந்து மலை­ய­கத்தின் புஸல்­லாவ பகு­தியில் விழுந்­துள்­ள­தா­கவும், ஏரா­ள­மான மக்கள் அதனை காண…

Read More

இலங்கையில் பலூன் வழி கூகுள் இணையம்!

இன்று (16) முதல் பலூன் வழி கூகுள் இணைய வசதியை பயன்படுத்தும் நாடாக இலங்கை மாற்றம் பெற்றுள்ளது. பலூன் வழி இணைய சேவை தொடர்பாக கூகுள் நிறுவனத்துக்கும் இலங்கை அரசாங்கத்துக்குமிடையில் கடந்த வருடம் ஒப்பந்தமொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது. பலூன் வழி இணைய சேவையொன்றை அறிமுகப்படுத்தும் கூகுள் நிறுவனத்தின் பரீட்சார்த்த முயற்சி நேற்று முதல் இலங்கையில் ஆரம்பமாகியுள்ளது.இதற்காக தென் அமெரிக்காவில் இருந்து பறக்கவிடப்பட்ட ஆளில்லா கூகுள் பலூன் நேற்று இலங்கையின் தென் பகுதி ஊடாக இலங்கை வான்பரப்பிற்குள் பிரவேசித்து நிலை கொண்டுள்ளது. இதனையடுத்து…

Read More

கூகுள் பலூன் செயல்திட்டம் வெகுவிரைவில் இலங்கையில்

அதிவேக இணைய சேவைகளை வழங்குவதற்காக கூகுள் பலூன் செயல்திட்டம், இலங்கையில் வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக,தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சரும், பதுளை மாவட்ட எம்.பி.யுமான ஹரின் பெர்ணன்டோ குறிப்பிட்டார். அதிவேக இணைய சேவைகள் தொடர்பாக, அமைச்சரிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேற்படி, இணையசேவைகள் குறித்து, கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தமொன்றையும் செய்துள்ளோம். இத்திட்டத்தின் பிரகாரம், நாட்டின் பலபாகங்களிலும் பாரிய ஹிலியம் பலூன்கள் பறக்கவிடப்பட்டு,சோதனைகள் நடாத்தப்படவுள்ளன. இதன் முதலாவது சோதனை, இம்மாத இறுதியில் இரத்மலானையில் நடைபெறும் எனவும் அவர்…

Read More

உலகம் முழுவதுமுள்ள முஸ்லிம்களுக்கு, நாம் ஆதரவு தர வேண்டும் – கூகுள்

முஸ்லிம்கள், சிறுபான்மையினருக்குத் தனது ஆதரவைத் தெரிவித்து கருத்து வெளியிட்டிருக்கிறார் கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை. சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது: அச்ச உணர்வு நமது மதிப்பீடுகளைத் தோற்கடிக்க அனுமதிக்கக் கூடாது. அமெரிக்கா மட்டுமல்லாமல், உலகம் முழுவதுமுள்ள முஸ்லிம்கள், பிற சிறுபான்மையினருக்கு நாம் ஆதரவு தர வேண்டும். பல்வேறு பின்னணி, கருத்துகள், அனுபவங்களால்தான் அனைவருக்கும் பயன்படும் சிறந்த செயல்கள், முடிவுகள் கிடைக்கும். அனைவருக்கும் தங்களின் கருத்துகளை வெளியிடும் உரிமை உண்டு. ஆனால், சிலர்…

Read More

கூகுள் தேடுபொறியில் போக்குவரத்து தகவல்

கூகுள் தேடுபொறி போக்குவரத்து விபரங்களை வழங்கும் சேவையைத் தற்பொழுது இலங்கையிலும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பயணிகள் போக்குவரத்து நெரிசல் குறைந்த வீதிகளை இலகுவாக அறிந்து கொள்ள முடியும். கூகுள் தேடுபொறியில் traffic  என குறிப்பிட்டு தேடுவதன் மூலம் இந்த வரைபடத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளில் உள்ள கூகுள் வரைபடத்தின் மூலம் இதனை பார்வையிட முடியும். இந்த வரைபடத்தில்அதிக வாகன நெரிசல் கொண்ட பாதைகள் சிவப்பு நிறத்தாலும், வாகன நெரிசல் குறைந்த…

Read More