Headlines

ரஷிய மக்கள் துருக்கிக்கு சுற்றுலா செல்ல தடை

சிரியாவில் ஐ.எஸ். கள் மீது தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த ரஷிய விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்தியது. ரஷிய விமானம் தங்கள் நாட்டு எல்லைக்குள் ஊடுருவியதால் சுட்டு வீழ்த்தியதாக துருக்கி கூறியது. ஆனால், ரஷியா இதை மறுத்து வருகிறது. இந்த சம்பவத்தால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு உருவாகி உள்ளது. துருக்கிக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்போவதாக ரஷிய அதிபர் புதின் கூறினார். இதன் முதல் கட்டமாக துருக்கி மீது பொருளாதார தடை விதிக்க ரஷியா முடிவு செய்துள்ளது….

Read More

துருக்கி மீது பொருளாதார தடை விதிக்க ரஷியா முடிவு

ரஷியாவின் போர் விமானம் ஒன்று தங்கள் வான்வெளியில் அத்துமீறி பறந்ததாகக்கூறி, அதை துருக்கியின் எப்16 ரக போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தின.  இதன்காரணமாக துருக்கிக்கும், ரஷியாவுக்கும் இடையேயான பனிப்போர் முற்றி உள்ளது. ரஷிய விமானம் தங்கள் வான்எல்லையில் அத்துமீறி நுழைந்தபோது, எச்சரிக்கை விடுத்தும் கேட்காததால்தான் சுட்டு வீழ்த்தியதாக துருக்கி கூறுகிறது. ரஷியா, விமானிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்று துருக்கியின் கூற்றை மறுத்தது. சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் இருந்த விமானி முராக்தின் பேசுகையில், துருக்கி வான் எல்லையை விமானம்…

Read More

பொய் சொல்லிய விளாமிடிர் புட்டின், அம்பலப்படுத்தும் துருக்கி..!

சிரியா எல்லையில் ரஷிய போர் விமானத்தை சுட்டு வீழ்த்துவதற்கு முன்பு அந்த விமானத்துக்கு 10 முறை எச்சரிக்கை விடுத்ததாகக் கூறிவரும் துருக்கி, அதற்கான ஒலிப்பதிவு ஆதாரங்களை புதன்கிழமை வெளியிட்டது.  அந்த ஒலிப்பதிவில், “துருக்கி விமானப் படையிலிருந்து பேசுகிறோம். நீங்கள் துருக்கி வான் எல்லையை நோக்கி வருகிறீர்கள். உங்கள் விமானத்தை உடனடியாக தெற்கு திசை நோக்கித் திருப்புங்கள்’ என ஆங்கிலத்தில் எச்சரிக்கை விடுக்கும் குரல் திரும்பத் திரும்ப ஒலிக்கிறது. முன்னதாக, சுட்டு வீழ்த்தப்பட்ட போர் விமானத்திலிருந்து பாராசூட் மூலம்…

Read More

அரபி பேசியதால் விமானத்தை விட்டு தடுக்கப்பட்ட முஸ்லிம்கள்!

இரண்டு ஃபலஸ்தீன வம்சாவழி நபர்கள் விடுமுறைக்காக தங்கள் நாடு திரும்பும் பொழுது அரபியில் பேசிக்கொண்டதால் விமானத்தில் பயணம் செய்வதை விட்டு தடுத்து வைக்கப்பட்டனர். சக பயணிகள் சிலர் இவர்கள் அரபியில் பேசியதை கண்டு அச்சம் கொண்டதாக கூறப்படுகிறது. பாரிஸ் தாக்குதலுக்கு பிறகு இஸ்லாமோபோபியாவின் வளர்ச்சியாகத்தான் இதனை பார்க்க முடியும். 29 வயது நிரம்பிய மஹர் கலீல் என்பவரிடம் அவர் வைத்திருந்த வெள்ளை பெட்டியில் என்ன இருக்கிறது என்று அவரது சக பயணிகள் சிலர் சந்தேகத்துடன் கேட்டிருக்கிறனர். அதில்…

Read More

தென் வான்பகுதி பறப்பற்ற பகுதியாக பிரகடனம்

விண்ணில் இருந்து ‘WT1190F’ என்று பெயரிடப்பட்ட மர்மப்பொருள் ஒன்று நாளை வீழ்வதை அடுத்து, இலங்கையின் தென்பகுதி கடற்பிரதேசம் பறப்பற்ற பிரதேசமாக பிரகனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மர்மப் பொருள், கரைக்கு அண்மித்த கடற்பகுதியிலேயே வீழும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. காலிக்கும் ஹம்பாந்தோட்டைக்கும் இடைப்பட்ட கடல்பகுதியிலேயே இந்த மர்மப்பொருள் வீழும் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் குறித்த வான்பரப்புக்கு ஊடாக செல்லும் மாலைத்தீவு, அவுஸ்திரேலியா உட்பட்ட நாடுகளுக்கான விமான பறப்பு பாதைகள் மாற்றப்பட்டுள்ளன.

Read More

இலங்கை – சேர்பியா இடையே புதிய விமான சேவை

இலங்கை மற்றும் சேர்பியா  ஆகிய நாடுகளுக்கு இடையில் புதிய விமான சேவை ஒன்றை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இரு நாடுகளுக்கு இடையில் விமான சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் இரு நாடுகளின் உயர் அதிகாரிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தையில் இணக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் குறித்த தீர்மானம் தொடர்பில் அமைச்சரவையில் அங்கீகாரத்தை பெறுவதற்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை மேற்படி அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Read More