Headlines

ஆள்மாறாட்டம் செய்து பரீட்சை எழுதியவர் கைது

கண்டியில் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் ஆள்மாறாட்டம் செய்து பரீட்சை எழுதிய ஒருவரை கண்டி பொலிஸார் கைது செய்துள்ளனர். 20 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். போலி ஆவணங்களை சமர்ப்பித்தல், போலிப் பெயரில் பரீட்சை எழுதியமை, மோசடியில் ஈடுபட்டமை போன்ற குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட குறித்த நபரை,  கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது இரண்டு இலட்ச ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். உண்மையான பெயரைக் கொண்ட பரீட்சாத்தியையும் விசாரணைக்குட்படுத்த…

Read More

சாதாரணதரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாளை தொடக்கம் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை பரீட்சை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எம்.என்ஜே.புஸ்பகுமார குறிப்பிட்டள்ளார். 46 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பரீட்சை கண்கானிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை பரீட்சை வரலாற்றில் அதிகமான பரீட்சார்த்திகள் இம்முறை பரீட்சையில் தோற்றவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Read More

2ம் திகதி முதல் கா.பொ.த சாதாரண தர வகுப்புகளுக்கு தடை!

இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகளுக்கு தோற்றும் மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள், செமினார், மாதிரி வினாப் பத்திரங்களை அச்சிடல் மற்றும் வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் எதிர்வரும் 2ம் திகதி முதல் தடைசெய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி 2ம் திகதி நள்ளிரவு முதல் டிசம்பர் 17ம் திகதி வரை இந்தத் தடை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் வருடத்திற்கான சாதாரண தரப் பரீட்சைகள் டிசம்பர் 8ம் திகதி ஆரம்பமாகவுள்ளதோடு டிசம்பர் 17ம் திகதி நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

உயர் தர பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாதம் வெளியீடு

கடந்த ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர் தர பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாதம் 27ம் திகதி வெளியிடப்படும் இலங்கை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. 2,180 பரீட்சை நிலையங்களில் நடைபெற்ற மேற்படி பரீட்சையில் 309,069 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தனர். பரீட்சார்த்திகள் தமது பெறுபேறுகளை www.doenets.lk (link is external) மற்றும் www.exams.gov.lk (link is external)ஆகிய இணையதளங்கள் மூலம் அறிந்துகொள்ள முடியும்.

Read More