Headlines

க.பொ.த.சாதாரணதர பரீட்சைக்கு 715,000 விண்ணப்பங்கள்

இந்த ஆண்டிற்கான கல்வி பொதுத்தரா தர சாதாரணதர பரீட்சைக்கு 7 இலட்சத்து 15 ஆயிரம் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பரீட்சைகள் அணையாளர் நாயகம் டபுள்யு.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

Read More

மாணவர்களுக்கு மடிக்கணனி அன்பளிப்பு!

கடந்த வருடம் க.பொ.த. சாதாரணதர  பரீட்சையில்  சிறப்பாகச் சித்தியெய்திய 12 மாணவர்களுக்கு மடிக்கணனி வழங்குவதென சிங்கர் நிறுவனம் தெரிவித்தி ருந்தது. அதற்கமைய தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு   ஜனாதிபதி மைத்திரிபால சேனநாயக்க, ஜனாதிபதி செயலகத்தில்  ஏற்பாடு செய்யப்பட்ட   நிகழ்வில்   கணனிகளை வழங்கிவைத்தார். இலங்கை மாணவர்களின் கல்வித் திறனை வளர்ப்பதே தமது நோக்கம் என்று கூறிய சிங்கர் நிறுவன அதிகாரிகள், போட்டிகள் நிறைந்த இன்றைய நிலையில் இந்தக் கணனிகள் மாணவா்களுக்கு பெரும்  உதவியாக இருக்கும் என்று…

Read More

சாதாரண தரப் பரீட்சையில் ஆக்ககூடிய புள்ளிகளைப் பெற்ற 12 மாணவர்களுக்கு ஜனாதிபதி விருது

2015ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் நடைபெற்ற ஜீ.சீ.ஈ.சாதாரண தரப் பரீட்சையில் நாடளாவிய ரீதியில் முதலிடம் பெற்ற 12 மாணவர்கள் இன்று ஜனாதிபதியிடம் இருந்து பரிசில்களையும் விருதுகளையும் பெறவுள்ளனர். இது தொடர்பான வைபவம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும் என கல்வியமைச்சின் பாடசாலை அலுவல்களுக்குப் பொறுப்பான பணிப்பாளர் டபிள்யு.கே.எம்.விஜயதுங்க தெரிவித்துள்ளார். இந்த வேலைத்திட்டத்தை வருடந்தோறும் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் திரு.விஜயதுங்க கூறினார். இன்றைய பரிசளிப்பு விழாவில் கல்வியமைச்சர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் பங்கேற்பார்கள். இதற்கு மக்கள் வங்கியும் தனியார் நிறுவனங்களும் அனுசரணை…

Read More

மாணவர்கள் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க கோரிக்கை

இந்த வருடம் டிசம்பர் மாதம் சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ள அதிகமான மாணவர்கள் இதுவரை தமது தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பிக்கவில்லை என்று ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. வருடமொன்றிட்கு 4 இலட்சம் மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுவதாகவும், இதுவரை இந்த வருடத்திற்கு இரண்டு இலட்சம் மாணவர்களுக்கான அடையாள அட்டை விண்ணப்பங்களே கிடைத்துள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் சரத் குமார தெரிவித்துள்ளார். மேலதிகமாக இரண்டு இலட்சம் மாணவர்கள் விண்ணப்பங்களை அனுப்பாமல்இருப்பதாகவும்,எனவே துரிதமாக தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களை ஆட்பதிவு திணைக்களத்துக்கு அனுப்புமாறும்…

Read More

மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படாது!

தபால் ஊழியர்களின் தொழிற்சங்கப் போராட்டம் காரணமாக கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் தாமதமாகினாலும் மாணவர்களுக்க அநீதி இழைக்கப்படாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

Read More

மாதிரி வினாத்தாள்கள் அடங்கிய நூல்களை பாடசாலைகளுக்கு வழங்க நடவடிக்கை

கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் வினாத் தாள்களின் மாதிரி வினாக்கள் அடங்கிய நூலொன்றை நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் வெளியிடுவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. குறித்த நூலினை வலயக் கல்வி பணிமனைகளினூடாகா எதிர்வரும் வாரத்திற்குள் பாடசாலைகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக உதவிப் பரீட்சைகள் ஆணையாளர் எஸ் பிரணவதாசன் தெரிவித்துள்ளார். இதன்மூலம் மாணவர்கள் தங்களின் பரீட்சைகளில் முகங்கொடுக்க மிகவும் இலகுவாக இருக்கும் எனவும் சிறந்த பயிற்சியாக இருக்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Read More

சா/த பரீட்சைக்கான விண்ணப்பத் திகதி நீடிப்பு

வ்வாண்டுக்கான க.பொ.த சா/த பரீட்சைப் பரீட்சை விண்ணப்பத் திகதி, எதிர்வரும் ஜூன் மாதம் 10ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

Read More

க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களும் உயர் கல்வி

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களும் உயர் கல்வியைத் தொடர சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு முஸ்லிம் மகளிர் பாடசாலை பரிசளிப்பு விழாவில் நேற்று பங்கேற்ற போது பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், சாதாரண தரப் பரீட்சையில் சித்தியெய்தாத காரணத்தினால் மட்டும் உயர் கல்வியைத் தொடரக்கூடிய சந்தர்ப்பத்தை முடக்கிவிடக் கூடாது. சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் பின்னரும் அனைத்து மாணவ மாணவியரும் பாடசாலையில் தொடர்ந்தும்…

Read More

உயர்தரப் பரீட்சையை ஏப்ரலுக்கு மாற்றுவது குறித்து பேச்சு!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் காலங்களில் ஏப்ரல் மாதம் நடாத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் மொஹான் லால் கிரேரு தெரிவித்துள்ளார். ஏப்ரல் மாதம் பரீட்சை நடாத்தி ஜனவரி மாதத்தில் புதிய மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்குவதே இதன் நோக்கமாகும். தற்பொழுது நடைமுறையில் உள்ளவாறு ஆகஸ்ட் மாதம் பரீட்சை நடைபெற்றால், பல்கலைக்கழக அனுமதிக்காக புதிய மாணவர்கள் சுமார் ஒரு வருடமும் 8 மாதங்களும் காத்திருக்கவேண்டும். ஏப்ரல் மாதத்தில் குறித்த பரீட்சையை நடாத்தினால்…

Read More

கா.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப் திகதி முடிவு மே 31

இவ் வருடத்திற்கான கா.பொ.த. சாதாரண தர பரீட்சை டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2016 ஆம் ஆண்டுக்கான கா.பொ.த. சாதாரண தர  பரீட்சை டிசம்பர் மாதம்   6 ஆம் திகதி முதல் டிசம்பர் 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை, இம்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ள அனைத்து பாடசாலை மற்றும் தனியார் பரீட்சாத்திகளினதும் விண்ணப்பங்களை ஏற்கும் இறுதித் திகதி இம் மாதம் 28…

Read More

க.பொ.த. சா.த பரீட்சை பெறுபேறுகள் மார்ச் மாதம்

கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சையின் பெறுபேறுகள் இந்த மாத இறுதியில் வெளிவரும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் டிசம்பர் மாதம் இடம்பெற்ற இந்த பரீட்சையில் 6 இலட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரீட்சாத்திகள் தோற்றியதாக பரீட்சைகள் ஆணையாளர் எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார். மேலும் அதிகமான பரீட்சாத்திகள் தோற்றிய ஒரு பரீட்சையாக இந்த க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை அமைந்ததாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் குறித்த பரீட்சையின் செயன்முறைப் பரீட்சைகள் அனைத்தும் இந்த மாதம்…

Read More