பொய் சொல்லிய விளாமிடிர் புட்டின், அம்பலப்படுத்தும் துருக்கி..!
சிரியா எல்லையில் ரஷிய போர் விமானத்தை சுட்டு வீழ்த்துவதற்கு முன்பு அந்த விமானத்துக்கு 10 முறை எச்சரிக்கை விடுத்ததாகக் கூறிவரும் துருக்கி, அதற்கான ஒலிப்பதிவு ஆதாரங்களை புதன்கிழமை வெளியிட்டது. அந்த ஒலிப்பதிவில், “துருக்கி விமானப் படையிலிருந்து பேசுகிறோம். நீங்கள் துருக்கி வான் எல்லையை நோக்கி வருகிறீர்கள். உங்கள் விமானத்தை உடனடியாக தெற்கு திசை நோக்கித் திருப்புங்கள்’ என ஆங்கிலத்தில் எச்சரிக்கை விடுக்கும் குரல் திரும்பத் திரும்ப ஒலிக்கிறது. முன்னதாக, சுட்டு வீழ்த்தப்பட்ட போர் விமானத்திலிருந்து பாராசூட் மூலம்…
