நாட்டில் 50,000 ஹெரொயின் பாவனையாளர்கள்
இலங்கையில் ஹெரொயின் போதைப்பொருள் பாவனையாளர்களின் எண்ணிக்கை சுமார் 50,000 வரை உயர்ந்துள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.
இலங்கையில் ஹெரொயின் போதைப்பொருள் பாவனையாளர்களின் எண்ணிக்கை சுமார் 50,000 வரை உயர்ந்துள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.
போதை பொருளுக்கு உள்ளாக்கப்பட்டவர்களுக்கு புனருத்தாபன வேலைகளை முன்னெடுக்க வேண்டும் என்பது மாத்திரம் அல்லாமல் அவர்களுக்கு விழிப்புணர்வான கருத்தரங்குகள், விழிப்பூட்டக்கூடிய நிகழ்வுகள் போன்றவற்றையும் நடைமுறையில் உள்ள அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எம் .பி.மொயிதீன் தெரிவித்தார். சர்வதேச போதை பொருள் ஒழிப்பு மாதத்தினை முன்னிட்டு திங்கட்கிழமை (13) மாலை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற சமுதாயங்கள் சீர்திருத்த பிராந்திய காரியாலயத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம். கணேசராஜா தலைமையில் நடைபெற்ற போதைப்பொருள்…
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வருடாந்தம் மே மாதம் 31 ஆம் திகதி சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. புகைத்தல் பாவனையை கட்டுப்படுத்துவதற்காக வருடாந்தம் காலத்திற்கேற்ப ஒவ்வொரு தொனிப் பொருளை முன்வைத்து மக்களை விழிப்புணர்வூட்டி வருவது குறிப்பிடத்தக்கது. அவ்வகையில் இம்முறைக்கான தொனிப்பொருளாக ‘ உருவமற்ற சிகரெட் பெட்டிகளை அமுல்படுத்தல் அமைந்துள்ளது.’ ( எந்தவிதமான விளம்பரங்களுமில்லாத மங்கலான நிறத்தில் அமைக்கப்பட்ட சிகரெட் பெட்டி.) அவுஸ்திரேலியா, அயர்லாந்து போன்ற நாடுகள் ஏற்கனவே இதனை நடைமுறைப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
‘போதைப்பொருள் அற்ற நாடு’ போதைப்பொருள் ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் ஐந்தாவது கட்டம் குருநாகலை மாவட்டத்தை மையப்படுத்தியதாக நடைமுறைப்படுத்தப்படுவதுடன், அதன் பிரதான நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (05) பிற்பகல் 2.00 மணிக்கு குருநாகல் மாளிகாப்பிட்டிய விளையாட்டரங்கில் நடைபெறும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ‘மைத்ரீ ஆட்சி – நிலையான நாடு’ கொள்கைப் பிரகடனத்திற்கேற்ப போதைப்பொருள் அற்ற ஒரு இலங்கையை உருவாக்குவதனூடாக சமூக, பொருளாதார, கலாசார அபிவிருத்திக்கான பின்புலத்தை அமைப்பதே ‘போதைப்பொருள் அற்ற நாடு’ தேசிய…
2020ஆம் ஆண்டில் புகைப்பிடித்தலை முற்று முழுதாகத் தடை செய்ய சுகாதார சுதேச வைத்திய மற்றும் போசாக்கு அமைச்சு தீர்மானித்துள்ளது. கொழும்பு சுகாதார கல்விக் காரியாலயத்தில் நேற்று (15) நடைபெற்ற உடகவியலாளர் சந்திப்பின் போது,சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித மஹிபால இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். தொற்றா நோய்கள் இலங்கையில் துரித கதியில் அதிகரித்துள்ளது.இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புகைப்பிடித்தலுக்கு தடை விதிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இருதய நோய்கள், உயர் இரத்த அழுத்தம், புற்று நோய் உள்ளிட்ட பல்வேறு தொற்றாத நோய்கள்…
நேற்று(12\11\15) துபாயிலிருந்து சவூதி அரேபியா வந்த லாரியில் 48,000 பெப்சி கேன்கள் வந்தது, முதலில் பெப்சி என்று நினைத்த சுங்க துறை அதிகாரிகள் அதை உற்று பார்க்கும்போது தான் தெரிந்தது போலியான பெப்சி கவர்கள் என்று. பிரித்து பார்த்தபோது அனைத்தும் மது கேன்கள். மேலும் விரிவான செய்திக்கு saudigazette.com.sa