Headlines

ஜனாதிபதியின் இணையத்தை முடக்கியவர்கள் பிணையில் விடுதலை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இணையத்தளத்தை ஹேக் செய்த இரு இளைஞர்களையும் பிணையில் விடுதலை செய்து கொழும்பு பிரதான நீதிமன்ற நீதவான் கிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டார். ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இணையத்தை ஹேக் செய்த குற்றச்சாட்டிற்காக கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களில் 17 வயது மாணவரை 10 இலட்சம் ரூபா சரீரப் பிணை இரண்டிலும், 27 வயதான இளைஞரை 10 இலட்சம் ரூபா சரீரப் பிணை நான்கும், 25 000 ரூபா ரொக்கப் பிணையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரையும்…

Read More

ஜனாதிபதியின் இணையத்தை ஹேக் செய்த இளைஞனுக்கு கிடைத்த வாய்ப்பு

ஜனாதிபதியின் இணையத்தை முடக்கிய இளைஞனுக்கு வேலைவாய்ப்பு வழங்கவுள்ளதாக BOUNTY LAB INTERNATIONAL PVT LTD அறிவித்துள்ளது. ஐக்கிய இராச்சியத்தில் தலைமையகத்தை கொண்டுள்ள குறித்த நிறுவனம் தற்பொழுது இலங்கையிலும் செயற்பட்டு வருகின்றது. இந்நிறுவனம் ஜனாதிபதியின் இணையத்ததை ஹேக் செய்த இளைஞனுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்காக முன்வந்துள்ளது. “இப்படியான இளைஞர்கள் உலக அளவில் குறைவாகவே இருக்கின்றனர், இவர்களை நம் நாட்டிற்கு சாதகமாக பயன்படுத்த வேண்டும், இவர்களை பண்படுத்தவும் வேண்டும். நெறிமுறைகளை சொல்லிக் கொடுத்து வளப்படுத்த வேண்டும். ஜனாதிபதியின் வெற்றிப்பாதைக்கு வழி செய்த…

Read More

கைதுசெய்யப்பட்ட சிறுவன் 37 இணையத்தளங்களை ஊடுறுவியுள்ளார்

ஜனாதிபதியின் இணையத்தளத்தை ஊடுறுவி தரவுகளை மாற்றிய குற்றம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 17 வயது பாடசாலை மாணவன் இதற்கு முன்னர் இரண்டு அரச இணையத்தங்கள் உட்பட 37 இணையத்தளங்களை ஊடுறுவியுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். நேற்று (30) மேல் நீதிமன்ற பிரதம நீதவான் கிஹான் பிலபிட்டியவிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் இதனை தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் தொடர்ச்­சி­யாக முன்­னெ­டுத்த சிறப்பு விசா­ர­ணை­களின் போது Arrow.lk எனும் பேஸ் புக் கணக்கொன்றின் ஊ­டாக இலங்­கையின் 37 இணை­யத்­த­ளங்கள் ஊடு­ருவல் செய்­யப்­பட்­டுள்­ளமை கண்­ட­றி­யப்­பட்­டள்ளது. இந்த…

Read More

ஜனாதிபதியின் இணையத்தளத்தை ஊடுறுவிய இரண்டாவது சந்தேக நபர் கைது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோப்பூர்வ இணையத்தளத்தை ஊடுறுவியதாக கூறப்படும் இரண்டாவது சந்தேக நபரை குற்றப்புலனாய்வு பிரிவின் கணிணிக் குற்றங்கள் தொடர்பான விசாரணைப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் 27 வயதான மொரட்டுவை பகுதியினைச் சேர்ந்தவரென குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். நேற்று கடுகண்ணாவை பகுதியைச் சேர்ந்த 17 வயதான பாடசாலை மாணவன் ஒருவரை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைதுசெய்திருந்தனர். குறித்த கைதுசெய்யப்பட்ட இருவரையும் இன்று (30) புதுக்கடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர்  தெரிவித்தனர்.

Read More

போலி இணையத்தளங்கள் வாயிலாக அமைச்சர் றிஷாத்தை கேவலப்படுத்தியவர்கள் மாட்டிக்கொண்டனர்

IPL சூதாட்டத்தில் ஆயிரம் கோடி ரூபாய்களை அமைச்சர் றிசாத் இழந்தார் எனவும், பலகோடி கறுப்புப் பணத்தை, வெளிநாட்டவர் ஒருவர் மூலம், வெள்ளைப் பணமாக மாற்றி வருகின்றார் எனவும் போலி இணையத்தளங்கள் வாயிலாக செய்திகளை வெளியிட்ட சபான் சிராஜ், அபாம் சபீக் ஆகியோர் குற்றப்புலனாய்வில் வகையாக மாட்டிக்கொண்டனர். சவூதி அரேபியா, ரியாதில் பணிபுரியும் அக்கரைப்பற்று சபான் சிராஜ் என்பவரும், முஸ்லிம் காங்கிரசின் ஊடகப்பிரிவில் பணியாற்றும், பேருவளையைச் சேர்ந்த அபாம் சபீக் என்பவரும் அமைச்சர் றிசாத்தை வீழ்த்தும் நோக்கில் இவ்வாறான…

Read More

இணையக்குற்ற முறைப்பாடுகள்; நடவடிக்கை ஆரம்பம்

இந்த வருடத்தின் முதல் காலாண்டு பகுதியில் 750 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை கணனி அவசர பதிலளிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இவற்றில் பெரும்பாலானவை பேஸ்புக் சமூக வலைத்தளம் குறித்தே கிடைக்கப்பெற்றுள்ளதாக, இலங்கை கணனி அவசர நடவடிக்கை அணியின், பாதுகாப்பு பொறியியலாளர் ரோஷான் சந்திரகுப்த குறிப்பிட்டுள்ளார். போலி பேஸ்புக் கணக்குகள் மற்றும் தேவையற்ற முறையில் பேஸ்புக் கணக்குகளுக்குள் ஊடுருவுதல் குறித்தே பெரும்பாலும் முறையிடப்பட்டுள்ளன. இதேவேளை, போலி மின்னஞ்சல் தொடர்பிலும் சில முறைப்பாடுகள் குறித்த காலப் பகுதியில் கிடைக்கப் பெற்றுள்ளதாக, ரோஷான்…

Read More

அனானிமஸ் – ISIS இடையிலான சைபர் யுத்தம் உச்சகட்டம்

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் தாக்குதலில் ஈடுபட்ட ஐ.எஸ். அமைப்பின் இணைய தொடர்புகளையும், கணக்குகளையும் தகர்த்தெறிவதே தங்களது முதல் நடவடிக்கை என சில தினங்களுக்கு முன் ‘அனானிமஸ்’ அமைப்பினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர். முதல்கட்ட நடவடிக்கையாக கடந்த செவ்வாய்கிழமை ஐ.எஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த 900 பயனாளர்களை டுவிட்டரிலிருந்து துரத்தியடித்தனர். அனானிமஸ் அமைப்பினரின் இந்தத் தாக்குதல்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம் என்றும், இணைய உலகை எங்கள் வசமாக்குவோம் என்றும் ஐ.எஸ். அமைப்பினர் சவால் விட்டனர். இதைத்தொடர்ந்து ‘அனானிமஸ்’…

Read More

ஐ.எஸ். களுக்கு எதிராக மாபெரும் சைபர் தாக்குதல்: இணையப் போராளிகள் எச்சரிக்கை

பாரிஸ் தாக்குதலில் பலியான 129 பேருக்கு ஆதரவாகவும், ஐ.எஸ். அமைப்பின் செயலைக் கண்டித்தும் உலகின் பல மூலைகளில் வசிப்போரும் கருத்து வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், ஐ.எஸ்.களை எதிர்த்து போரிடப் போவதாக ‘அனானிமஸ்’ என்ற பெயரில் பெயரை வெளியிடாமல் செயல்பட்டுவரும் இணையப் போராளிகள் மற்றும் ஹேக்கர்களின் குழு யூடியூப் வீடியோவின் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகின் பல மூலைகளிலும் செயல்பட்டுவரும் இந்த ‘அனானிமஸ்’ அமைப்பினர் முகத்தில் ‘கய் ஃபாக்ஸ்’ முகமூடியுடன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ‘உங்களுக்கு எதிரான மாபெரும்…

Read More