(Full Story) காத்தான்குடி சிறுமி சூடு விவகாரம்; வளர்ப்புத் தாய்க்கு நீதிமன்றில் நடந்த சோகம்
– விஷேட நிருபர் – காத்தான்குடியில் சிறுமியொருவருக்கு சூடு வைத்த சம்பவம் தொடர்பில் விளக்க மறியலில் இருந்து வந்த சிறுமியின் வளர்ப்புத்தாய் மற்றும் சிறுமியின் தந்தை ஆகிய இருவருக்கும் நேற்று (24) செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்ட போதிலும், சிறுமிக்கு சூடு வைத்ததாக கூறப்படும் சிறுமியின் வளர்ப்புத்தாய்க்கு எவரும் சரீரப்பிணை நிற்பதற்கு முன் வராததால் சிறுமியின் வளர்ப்புத்தாய் மீண்டும் மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்க மறியிலில் வைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காத்தான்குடியில் சிறுமியொருவருக்கு சூடு…
