Headlines

நியமனம்பெற்ற புதிய அதிபர்களுக்கு உரிய பாடசாலை வழங்க அமைச்சரவை அனுமதி

அதிபர் சேவை தரம் மூன்றுக்கு புதிதாக நியமனம் பெற்ற அதிபர்களுக்கு உரிய பாடசாலைகளை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. எனவே அவர்கள் விரைவில் தமக்கான பாடசாலைகளைப் பொறுப்பேற்கவுள்ளனர். இதேவேளை குறித்த பாடசாலைகளில் தற்போது அதிபர்களாக பதில் கடமையாற்றுபவர்கள் மாகாண மற்றும் தேசியப் பாடசாலைகளில் பிரதி அதிபர்களாக கடமையாற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். கல்வியமைச்சில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கையிலுள்ள 10ஆயிரத்து நூற்று…

Read More

வைத்தியர்களின் ஓய்வு வயதை 63ஆக அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம்

வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயது தற்போது 60 ஆகும். ஆனால் இதை 63ஆக அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன இதை கூறினார். மேலும், நாட்டில் தற்போது 1164 வைத்தியர்களுக்கான வெற்றிடம் காணப்படுவதாகவும் இவற்றை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், தற்போது உள்ள அனுபவமிக்க வைத்தியர்களின் ஓய்வூதிய வயதை மூன்று வருடங்கள் அதிகரிப்பதால் வைத்தியர்களுக்கு நிலவும் வெற்றிடங்களை கட்டுப்படுத்த முடியும் எனவும் அமைச்சர் ராஜித…

Read More

வற் வரி திருத்தச்சட்டத்துக்கு அமைச்சரவை அங்கிகாரம்

வற் வரி வீதத்தை 11  வீதத்திலிருந்து 15 வீதமாக அதிகரிப்பதற்கான வற்வரி அதிகரிப்பு திருத்துக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. திருத்தச் சட்டமூலம் சற்றுமுன்னர் அமைச்சரவையில் நிதியமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த வகையில் அமைச்சரவையானது வற்வரி அதிகரிப்பு சட்டமூலத்திற்கு அங்கீகாரத்தை வழங்கியதையடுத்து, அதனை வர்த்தமானியில் வெளியிடவும் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யோசனைகளும் இந்த உத்தேச திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதாவது ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட வற்வரி திருத்தச் சட்டமூலத்தில் மாதம் 12…

Read More

ஒலுவில் கடலரிப்பு – அமைச்சரவையில் என்ன நடந்தது என்ன?

-ஒலுவில் கமால் அஹ்மட் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நேற்று புதன்கிழமை -31- ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. துறைமுக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒலுவில் கடலரிப்பு விடயம் தொடர்பாக அமைச்சரவை பத்திரத்தினை சமர்ப்பித்தார். அமைச்சரவை பத்திரத்தினை சமர்ப்பித்த  அர்ஜூன ரணதுங்க ஒலுவில் கடலரிப்பு விவகாரத்தினை தடுக்க அமைச்சர் றிசாத் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார். இதுகுறித்து என்னுடனும், எனது அதிகாரிகளுடனும் பலதடவை உரையாடினார். அந்த மக்கள் படும் அவலங்களை என்னிடம் ஆதாரங்களாக சமர்ப்பித்தார் அதன் பயனாக…

Read More

நிலக்கரி இறக்குமதி ; அமைச்சரவை இறுதி தீர்மானம்

இலங்கைக்கு நிலக்கரி இறக்குமதி  செய்வது தொடர்பிலான கேள்வி பத்திரம் வழங்குவது தொடர்பில் அமைச்சரவை இறுதி தீர்மானம் எடுக்குமென மின்சக்தி மற்றும் சக்திவலு பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

Read More

இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பிலான தேசிய கொள்கை

இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பிலான தேசிய கொள்கை உருவாக்கப்படும் என அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பிலான தேசிய கொள்கைகளை உருவாக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். யுத்த காலங்களில் பாதிக்கப்பட்டு தங்களது சொந்த காணிகளை பலர் இழந்துள்ளனர். இதுவரையில் அவர்களுக்கு உரித்தான காணிகளோ அல்லது வேறு ஒரு காணியோ வழங்கப்படவில்லை. இதனை கருத்திற்கொண்டு அவர்களுக்கான தீர்வினை பெற்றுத்தரக்கூடிய தேசிய கொள்கையொன்று உருவாக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Read More

போர் விமானங்கள் 8ஐ கொள்வனவு செய்ய அனுமதி

ஜெட் ரக போர் விமானங்கள் 08 ஐ, இலங்கை விமானப் படைக்குக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கே அங்கிகாரம் கிடைத்துள்ளது.

Read More

தபால் பணியாளர்களின் பிரச்சினை தொடர்பில் அமைச்சரவையில் விவாதம்

தபால் பணியாளர்களின் பிரச்சினைகள் அமைச்சரவை கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் ரோஹன அபேரத்ன தெரிவித்துள்ளார். அத்துடன் தற்சமயம் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டு வரும் குறித்த பணியாளர்களது பிரச்சினைகள் பற்றி அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு வருவதாகவும் தபால்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இந்தப் பணி புறக்கணிப்பினால் ஆயிரக்கணக்கான கடிதங்கள் தபால்நிலையத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை இன்று பிற்பகல் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கத்தின் ஊடக சந்திப்பு ஒன்று இடம்பெறுவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

அமைச்சரவையில் கொதித்தெழுந்த அமைச்சர் றிஷாத்

ஈராக் நாட்டுக்கான இலங்கைத் தூதரகத்தை மூடி விட வேண்டுமென வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அமைச்சரவையில் கொண்டு வந்த தீர்மானம், கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதுயுதீனின் பலத்த எதிர்ப்பு காரணமாக இன்று கைவிடப்பட்டது. போர்க்கால நெருக்கடியினால் ஈராக்கில் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதால் இந்தத் தூதரகத்தை மூடுவதற்கான தீர்மானத்தை அமைச்சர் மங்கள கொண்டுவந்த போது அமைச்சர் றிசாத் ஆவேசத்துடன் குறுக்கிட்டு, இலங்கையில் 30 வருட காலம் இடம்பெற்ற யுத்தத்தின் போது, இலங்கையிலுள்ள வெளிநாடுகளின் தூதரகங்கள் மூடப்பட்டிருந்தால், இங்கு…

Read More

தகவல் அறிந்து கொள்ளும் சட்டமூலம்! அமைச்சரவையில் இன்று சமர்ப்பிப்பு

தகவல் அறிந்து கொள்ளும் சட்டமூலம் தொடர்பிலான அமைச்சரவை பத்திரம் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தை அமுல்படுத்துவதாக வாக்குறுதி அளித்திருந்தனர். இதன் அடிப்படையில் தகவல் அறிந்து கொள்ளும் சட்டம் தொடர்பிலான அமைச்சரவை பத்திரமொன்று இன்று சமர்ப்பிக்கப்பட உள்ளது. தொடர்பாடல் அமைச்சர் கயந்த கருணாதிலக்கவினால் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்த சட்ட மூலம் தொடர்பில் சிரேஸ்ட சட்ட வல்லுனரும்…

Read More

இன்று காலை விசேட அமைச்சரவைக் கூட்டம்

இன்று காலை விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பிலான அமைச்சரவையின் அனுமதி பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தக் கூட்டத்திற்கு தலைமைதாங்கவுள்ளார். அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அனைத்து அமைச்சர்களும் இன்றைய விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளைää இன்று பிற்பகல் நல்லாட்சி அரசாங்கத்தின் முதலாம் வரவு செலவுத் திட்டம் நிதி…

Read More