பேராதனைப் பல்கலை மாணவர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலையில்
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இரு மாணவக் குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த ஐவர் பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். நேற்று முன்தினம் (22) இரவு இடம்பெற்ற இந்த மோதல் குறித்து மத்திய மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.ஏ.டி.எஸ். குணவர்தனவின் உத்தரவுக்கு அமைய பேராதனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கீழ் விஷேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காயமடைந்து வைத்தியசாலையில் உள்ள மாணவர்களிடமும் பேராதனை பல்கலையின் இணைந்த சுகாதார விஞ்ஞான பீடத்தின் முதலாம் தர மாணவர்கள்…
