உயர்ஸ்தானிகர் மீது தாக்குதல்: பாதாள உலகக்குழு உதவி
பாதாள உலகக்குழுவின் உதவியுடன் இலங்கை உயர்ஸ்தானிகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் மீது அண்மையில் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் தமிழர்கள் வழிநடத்தியதாகவும் அந்நாட்டு பாதாள உலகக்குழுவின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட்டதாகவும் புலனாய்வு பிரிவினர் நடத்திய விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. பினாங் மாநிலத்தின் முதலமைச்சர் பீ.ராமசாமியின் ஆதரவாளர்களான ஸீரோ தெர்டீன்ஸ் என்னும் பாதாள உலகக்குழுவினரின்…
