Headlines

பலத்த பாதுகாப்பையும் தாண்டி தென் கொரியாவுக்குள் நுழைந்த வடகொரிய வீரர்

வடகொரியாவும், தென்கொரியாவும் தீராப்பகை நாடுகளாக உள்ளன. இந்த நிலையில் வெகு அபூர்வ சம்பவமாக, பலத்த பாதுகாப்பு கொண்ட எல்லையை தாண்டி, வடகொரியா வீரர் ஒருவர் தென் கொரியாவுக்குள் நேற்று காலை உள்ளூர் நேரப்படி 10 மணிக்கு நுழைந்தார். அவரிடம் ஆயுதம் ஏதும் இல்லை. அவர் மீது தென் கொரியா வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தவும் இல்லை. அவர் எப்படி நுழைந்தார், எதற்காக நுழைந்தார் என்பது குறித்து தென் கொரியாவின் அதிகாரிகள் துருவித்துருவி விசாரணை நடத்துகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் தென்…

Read More

ஜீன்ஸ் ஆடை அணிவதற்கு தடை.!

வட கொரிய தலைவர் கிம் யொங் உன் மேற்குலக கலாசாரம் நாட்டில் பரவுவதை தடுக்க ஜீன்ஸ் ஆடைகளை அணிவதற்கும் முகத்தில் அலங்காரமாக துளையிடுவதற்கும் தடை விதித்துள்ளார். மேற்படி நாடளாவிய தடைகளானது சீனாவுக்கு அண்மையிலுள்ள யங்காங் மாகாணம் மற்றும் வட ஹம்கையொங் மாகாணம் என்பவற்றை இலக்கு வைத்து விதிக்கப்பட்டுள்ளது. மேற்படி வட கொரிய தொழிலாளர்கள் கட்சியின் 7 ஆவது கூட்டத்தையொட்டியே விதிக்கப்பட்டுள்ளதாக ஜப்பானிய ஆசிய பிரஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Read More

வடகொரியா பிரஜைகளை விடுவிக்குமாறு இலங்கையிடம் கோரிக்கை

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது நாட்டுப் பிரஜைகளை விடுவிக்குமாறு வடகொரியா கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் அமைந்துள்ள வடகொரிய தூதரகம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது. 150,000 அமெரிக்க டொலர்களை வைத்திருந்த போது வடகொரியப் பிரஜைகளை விமான நிலைய அதிகாரிகள் கைது செய்திருந்தனர். இந்த வடகொரியர்கள் ஓமானிலிருந்து சீனா நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையின் சட்டத்தின் பிரகாரம் 10,000 அமெரிக்க டாலர்களுக்கு அதிகமாக எடுத்துச் செல்ல வேண்டுமாயின் அதற்கான உரிய ஆவணங்கள் சமர்பிக்கப்பட வேண்டும்…

Read More

தென் கொரியாவை கைப்பற்றுவோம்: வட கொரியா மிரட்டல்

வடகொரியா நாடு தனது பக்கத்து நாடான தென் கொரியாவை தொடர்ந்து மிரட்டி வருகிறது. இதற்காக சமீபத்தில் அணுகுண்டு சோதனை, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை போன்றவற்றை நடத்தியது. தென் கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவாக இருந்து வருகிறது. வடகொரியாவை எச்சரிக்கும் வகையில் தென்கொரியாவும், அமெரிக்காவும் கூட்டு போர் ஒத்திகையில் ஈடுபடுகின்றன. இதற்காக இரு நாட்டு படைகளும் கொரிய கடற்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளன. நாளை போர் ஒத்திகை முழு வீச்சில் தொடங்குகிறது. இந்த நிலையில் வட கொரியா ராணுவம்…

Read More

வடகொரியாவுக்கு ஆதரவு இல்லை – சீனா திட்டவட்டம்

வட­கொ­ரி­யாவின் அணு ஆயுத மற்றும் ஏவு­கணைத் திட்­டங்­க­ளுக்கு ஆத­ரவு தெரி­விக்கப் போவ­தில்­லை­யென சீனா தெரி­வித்­துள்­ளது. இது­கு­றித்து சீன வெளி­யு­றவுத் துறை அமைச்சர் வாங் யி  நேற்று முன்­தினம் (8) தெரி­வித்­துள்­ள­தா­வது, நாட்டு வளர்ச்­சி­யையும், பாது­காப்­பையும் மேம்­ப­டுத்த வட­கொ­ரியா விரும்­பினால் அவர்­க­ளுக்கு உத­வி­ய­ளிக்க நாங்கள் தயா­ராக இருக்­கிறோம். இருந்தும், கொரிய தீப­கற்பம் அணு ஆயுத ஆபத்­தில்­லாத பகு­தி­யாக விளங்க வேண்டும் என்­ப­தற்கு நாங்கள் மிகுந்த முக்­கி­யத்­துவம் அளித்து வரு­கிறோம். எனவே, வட­கொ­ரி­யாவின் அணு ஆயுதத் திட்­டங்­க­ளுக்கோ, அந்த ஆயு­தங்­களை…

Read More

வடகொரியாவிற்கு இலங்கை கண்டனம்

நீண்டதூரம் சென்று தாக்கவல்ல ஏவுகணையை பரிசோதித்தமை தொடர்பில் வடகொரியாவிற்கு இலங்கை அரசாங்கம் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இந்த கண்டனம் குறித்து வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரியதீபகற்பத்தின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் பங்கம் ஏற்படும் வகையில் சர்வதேச கட்டுப்பாடுகளை மீறி எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என வடகொரியாவை கேட்டுக்கொள்வதாக அதில் குறிப்பிட்டுள்ளது. பெப்ரவரி 7 ஆம் திகதி வடகொரியா மேற்கொண்ட ஏவுகணை பரிசோதனையை அடுத்து, பல உலக நாடுகள் அதனை கண்டித்ததுடன் ஐக்கிய நாடுகள் சபை,…

Read More