Headlines

மஹிந்தவுக்கு எதிராக மலேசியாவில் 400 முறைப்பாடுகள்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜக்சவிற்கு எதிராக மலேசியாவில் சுமார் 400 முறைப்பாடுகள் செய்தவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மலேசிய பொலிஸார் நேற்று இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக போலியான முறையில் இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மலேசியாவிற்கு விஜயம் செய்வதற்கு ஒரு நாளுக்கு முன்னதாக நான்கு பொலிஸ் நிலையங்களில் இந்த முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக அந்த முறைப்பாடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. மஹிந்தவை கைது செய்யுமாறு…

Read More

மலேசியா அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்

மலேசியாவில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கெதிராக மலேசியா அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ விதாரன தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் மலேசியாவிற்கு விஜயம் செய்திருந்த போது, மலேசிய தமிழர்களால் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு முன்னாள் எதிர்ப்பு ஆர்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அதுமாத்திரமின்றி மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் தாக்கப்பட்டமை தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும்…

Read More

அன்சார் மீது தாக்குதல் நடத்தியோருக்கு உரிய தண்டனை வழங்குங்கள்

-அமைச்சரின் ஊடகப்பிரிவு – மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹீம் அன்சார் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கி, இவ்வாறான சம்பவங்கள் இனிமேலும் மலேசியாவில் இடம்பெறாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென அமைச்சர் றிசாத் பதியுதீன், மலேசிய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை இன்று மாலை(06/09/2016) மலேசிய துணைப் பிரதமர் தத்தோ சாஹிர் ஹமீத் அவர்களை, அமைச்சர் றிசாத் சந்தித்து தனது கடுமையான கண்டனத்தையும், விசனத்தையும் வெளிப்படுத்துவார். மலேசியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு  அங்கு…

Read More

மலேசிய மாநாட்டில் அமைச்சர் றிஷாத் உரை

அமைச்சின் ஊடகப்பிரிவு – மலேசியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருக்கும்  கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் மலேசியாவில் இன்று (05/09/2016) ஆரம்பமான பன்கோர் டயலொக் (Pangkor Dialogue) மாநாட்டில் பிரதம அதிதியாகப் பங்கேற்று அங்குரார்ப்பண உரை நிகழ்த்தினார். இந்த மாநாட்டில் இடம்பெற்ற “நிலைபேறான பொருளாதார முன்னேற்றம்” என்ற கருப்பொருளிலான  இரண்டாவது நிகழ்விலும் அமைச்சர் உரையாற்றினார்.

Read More

கொங்கு தமிழர் மாநாட்டில்: மலேசிய பிரதமர்

கோலாலம்பூரில் நடந்த கொங்கு தமிழர் மாநாட்டில் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் கலந்து கொண்டு பேசினார். கோலாலம்பூரில் நடந்த கொங்கு தமிழர் மாநாட்டில் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் கலந்து கொண்டு பேசினார். சுமார் 3 கோடி மக்கள் தொகையை கொண்ட மலேசியாவில் 8 சதவீதம் பேர் இந்தியர்கள் (தமிழர்கள்) ஆவர். இதில் தமிழகத்தின் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த 2 லட்சம் தமிழர்களும் அடங்குவர். இந்த பிரிவினர் சார்பில் மலேசிய கொங்கு தமிழர் அமைப்பு நிறுவப்பட்டு உள்ளது….

Read More

பத்து இலங்கையர்கள் மலேசியாவில் கைது

போலி கடவுச் சீட்டுடன் பத்து இலங்கையர்கள் மலேசியாவில் வைத்து அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் ஏனைய நாட்டைச் சேர்ந்த 9 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மலேசிய நாட்டு பொலிஸாரால் முன்னெடுக்கப்பட் திடீர் சோதனை நடவடிக்கையின் போதே மேற்படி நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் ஜெனிவாவிற்கு செல்ல இருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More

அமைச்சர் றிஷாத் – மலேசியா அமைச்சர்களுடன் சந்திப்பு

மலேசியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிஷாத் பதியுதீன் அன்னாட்டு சர்வதேச வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் முஸ்தபா முஹம்மத் மற்றும் மலேசியாவின் பிரதமர் முஹம்மத் னஜீப் பின் துன் ஹாஜி அப்துல் ரசாகினையும் சத்தித்து கலன்துரையாடுவதையும்,வெளினாட்டு வர்த்தக அமைச்சருக்கு ஞாபகார்த்த சின்னம் ஒன்றினை வழங்குவதையும்,அருகில் இலங்கை வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர்,கலானிதி ஜெமீல் இருப்பதையும் படங்களில்

Read More