Headlines

இணையக்குற்ற முறைப்பாடுகள்; நடவடிக்கை ஆரம்பம்

இந்த வருடத்தின் முதல் காலாண்டு பகுதியில் 750 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை கணனி அவசர பதிலளிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இவற்றில் பெரும்பாலானவை பேஸ்புக் சமூக வலைத்தளம் குறித்தே கிடைக்கப்பெற்றுள்ளதாக, இலங்கை கணனி அவசர நடவடிக்கை அணியின், பாதுகாப்பு பொறியியலாளர் ரோஷான் சந்திரகுப்த குறிப்பிட்டுள்ளார். போலி பேஸ்புக் கணக்குகள் மற்றும் தேவையற்ற முறையில் பேஸ்புக் கணக்குகளுக்குள் ஊடுருவுதல் குறித்தே பெரும்பாலும் முறையிடப்பட்டுள்ளன. இதேவேளை, போலி மின்னஞ்சல் தொடர்பிலும் சில முறைப்பாடுகள் குறித்த காலப் பகுதியில் கிடைக்கப் பெற்றுள்ளதாக, ரோஷான்…

Read More

பேஸ்புக்கில் ஜனாதிபதியை அச்சுறுத்தியவர் கைது

பேஸ்புக் சமூக வலைத்தளத்தினூடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அச்சுறுத்திய சந்தேக நபர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் வீசா இல்லாமல்  மலேசியாவிற்குச் சென்று அங்கிருந்து நாடுகடத்தப்பட்ட நிலையில் நேற்று இலங்கை வந்த போது  கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த சந்தேக நபர் யக்கலை பிரதேசத்தைச் சேர்ந்தவராவர். சந்தேக நபர் இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

மனுஷ நாணயக்காரவுக்கு பேஸ்புக்கில் கடும் கண்டனம்!

வெளிநாட்டு தொழில்வாய்ப்பு பிரதியமைச்சராக பதவியேற்றுக் கொண்டுள்ள மனுஷ நாணயக்காரவுக்கு எதிராக பேஸ்புக்கில் கடுமையான கண்டனங்கள் குவிந்து கொண்டிருக்கின்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான மனுஷ நாணயக்கார, மிகவும் தீவிரமான மஹிந்த ஆதரவாளராக தன்னை வெளிக்காட்டிக் கொண்டிருந்தார். இதன் ஒரு கட்டமாக ஜனாதிபதி மைத்திரியை கடுமையான வார்த்தைகளால் விமர்சிக்கவும் செய்திருந்தார். இந்நிலையில் தற்போது அவர் அணி மாறி மைத்திரியின் அரசாங்கத்தில் பிரதியமைச்சர் பதவியொன்றைப் பெற்றுக் கொண்டுள்ளார். இதுகுறித்து நடுநிலையாளர்கள் மற்றும் மஹிந்த ஆதரவாளர்கள்…

Read More

மன்னிப்புக் கோரிய பேஸ்புக் நிறுவனம்

சமூக வளைத்தளமான பேஸ்ப்புக் நிறுவனம் சர்வதேச ரீதியில் மன்னிப்புக் கோரியுள்ளது. பேஸ்ப்புக் நிறுவனம் அறிமுகப்படுத்திய safety Check நேற்று (27) சிலமணி நேரம் இயங்காமல் போனமைக்காகவவே குறித்த நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது. குறிப்பாக திடீர் அசம்பாவிதங்கள் ஏற்படும் சந்தர்ப்பபத்தில் அப்பகுதியின் பேஸ்ப்புக் பாவனையாளர்களுக்கு  safety Check Notifications அது தொடர்பான அறிவித்தல் விடுக்கும். இந்நிலையில், நேற்று பாகிஸ்தான் -தாகூர் வெடிப்பு சம்பவ நேரத்தில் அப்பகுதியின் பேஸ்ப்புக் பாவனையாளர்களுக்கு safety Check இயங்காமல் போயிருந்துள்ளது. இதனால் பேஸ்புக் பாவனையாளர்களின்…

Read More

பேஸ்புக் நிறுவனத்தின் துணைத் தலைவர் கைது

முதன்மை சமூக வலைத்தளமான பேஸ்புக் நிறுவனத்தின் இலத்தீன் அமெரிக்க பிரிவின் துணைத் தலைவர் டியாகோ சோடன் (Diego Dzodan) பிரேஸில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பேஸ்புக் நிறுவனத்தின் வட்ஸ் எப் மெசெஞ்சர் ஊடாக போதை பொருள் விற்பனை தொடர்பாக பரிமாற்றப்பட்ட தகவல்களை பொலிஸாருக்கு வழங்க மறுத்த குற்றசாட்டிலேயே இவர், கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், கொள்கையின் அடிப்படையில் தனக்கு அந்த தகவல்களை வழங்க முடியாது என டியாகோ சோடன் கைது செய்யப்பட்ட பின்னர் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார். அதேவேளை இக்கைது…

Read More