Headlines

தெற்கில் 14 பாதாள உலகக் குழுக்கள்!

தெற்கில் 14 பாதாள உலகக்குழுக்கள் செயற்பட்டு வருவதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பாதாள உலகக் குழுச் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் நியமிக்கப்பட்ட விசேட குழு நடத்திய ஆய்வுகளின் மூலம் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. சுற்றுலா விடுதிகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் செல்வந்தர்களிடம் கப்பம் பெற்றுக் கொள்ளல் மற்றும் ஹெரோயின் போதைப் பொருள் வர்த்தகம் ஆகியனவே இந்த பாதாள உலகக் குழுக்களின் பிரதான வருமானமாக அமைந்துள்ளது. பாதாள உலகக்குழு உறுப்பினர்களுக்கு இடையிலான மோதல்களினால் மேற்கொள்ளப்படும் கொலைகள் மற்றும்…

Read More

பாதாள உலகக்கும்பலை ஒழிப்பது பொலிஸாரின் கடமை

பாதாள உலகக்கும்பல் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை ஒழிப்பது பொலிஸாரின் கடமை. இதற்கு ஜனாதிபதியின் உத்தரவுக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்தார். கொழும்பில் நேற்று (9) இடம்பெற்ற ‘அதிகாரத்தைப் பகிர்ந்து ஐக்கியப்படு’ அமைப்பின் வாராந்த ஊடகவியலாளர்  சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் நாட்டில்  பெரும் கொள்ளைகள்  இடம்பெற்றன. தற்போது, அதுபோன்றதொரு கொள்ளை இலங்கை…

Read More

பாதாள உலகக் குழு உறுப்பினர்கள்  20 பேருக்கு இன்டர்போல் வலை

பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் 20 பேருக்கு எதிராக சர்வதேச பொலிஸார் சிகப்பு பிடிவிராந்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த இருபது பாதாள உலகக்குழு உறுப்பினர்களை கைது செய்யும் நோக்கில் இவ்வாறு பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போதைப் பொருள் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்ககளுடன் தொடர்புடைய இவர்கள் பொலிஸாரினால் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. திருகோணமலை ஐஸ் மஞ்சு என்பவரும் இதில் அடங்குகின்றார். நாட்டிலிருந்து தப்பிச் சென்ற பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் இத்தாலி, சுவிட்சர்லாந்து,…

Read More