குரங்குக்கு புகைப்படத்துக்கான பதிப்புரிமை கிடையாது – அமெரிக்க நீதிமன்றம்
குரங்குக்கு புகைப்படத்துக்கான பதிப்புரிமை வழங்க முடியாது என அமெரிகக் நீதிபதியொருவர் தீர்ப்பளித்துள்ளார். குரங்கு ஒன்றினால் பிடிக்கப்பட்ட செல்பீ புகைப்படங்களுக்கான பதிப்புரிமை அக்குரங்குக்கே உரியது எனவும் அதன் கையில் கெமரா கிடைப்பதற்கு வழிவகுத்த மனிதருக்கு உரியதல்ல எனவும் பிரகடனப்படுத்தக் கோரி, அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரிலுள்ள நீதிமன்றமொன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மிருகங்கள், பிராணிகளின் நலன்களுக்காக செயற்படும் PETA அமைப்பினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிரித்தானிய புகைப்படப்பிடிப்பாளர் டேவிட் ஸ்லேட்டர் 2011 ஆம் ஆண்டில் இந்தோனேஷியாவின் சுலாவெஸி தீவுக்குச்…
