Headlines

இந்தியாவிற்கு உரிய பதிலடி கொடுங்கள் – நவாஸ் ஷரீப்

ஐ.நா. சபையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் நேற்று(புதன்கிழமை) காஷ்மீர் பிரச்சினையை ஐ.நா.சபையில் பேசுவதற்கு முன்னதாக அந்நாட்டு ராணுவ தளபதி ரஹீல் செரீப்பிடம் பேசி உள்ளார். ஐ.நா.சபையில் பேச உள்ள விவகாரம் தொடர்பாக தொலைபேசியில் ரஹீல் செரீப்பிடம், நவாஸ் செரீப் பேசியதாக தெரிகிறது. இதற்கிடையே இந்தியாவின் நடவடிக்கைக்கு முழு திறம்பட பதிலடி கொடுக்குமாறு ரஹீல் செரீபை, நவாஸ் ஷரீப் கேட்டுக் கொண்டதாக தகவல்கள் தெரிவித்து உள்ளன.

Read More

இந்திய குடியரசு தினத்தையொட்டி பாகிஸ்தான் வாழ்த்து

இந்தியாவின் 67-வது குடியரசு தினத்தையொட்டி பாகிஸ்தான் அதிபர், பிரதமர் ஆகியோர் இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர். பாகிஸ்தான் அதிபர் மம்னூன் உசேன், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு தெரிவித்த வாழ்த்து செய்தியில், இந்தியா ஸ்திரத்தன்மையும், வளர்ச்சியும் மென்மேலும் பெற வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டுள்ளனர். இதேபோல பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப், பிரதமர் நரேந்திர மோடிக்கு குடியரசு தின வாழ்த்து தெரிவித்தார். குடியரசு தினத்தையொட்டி பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. இதில் தூதரக அதிகாரிகள் பலரும்…

Read More

நவாஸ் ​ஷரீப் கண்டிக்கு விஜயம்

நாட்டிற்கு வருகை தந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ​ஷெரீப் கண்டி ஸ்ரீதலதா மாளிகைக்கு செல்லவுள்ளார். அத்துடன் பாகிஸ்தான் நிதி உதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட கண்டி ஜின்னா மத்திய நிலையத்திற்கும் அவர் செல்லவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது . பாகிஸ்தான் பிரதமர் பேராதனை தாவரவியல் பூங்காவிற்கும் செல்லவுள்ளதுடன் அங்கு மரக்கன்று ஒன்றினையும் நடவுள்ளார். நேற்று (5) முன்தினம் நாட்டிற்கு வருகை தந்த பாகிஸ்தான் பிரதமரை உத்தியோகபூர்வமாக வரவேற்கும் நிகழ்வு நேற்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

நினைவு சின்னம் வழங்கி வைப்பு

– இர்ஷாத் றஹ்மத்துல்லா – இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு வருகைத்தந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப்பின் பாரியார் திருமதி கன்சுல் நவாஸ் ஷரீப் இன்று கைத்தொழில்.வணிகத் துறை அமைச்சின் கிழ் இயங்கும் லக்ஷல காட்சி அறைக்கு விஜயம் செய்தார். இதன் போது லக்ஷல நிறுவனத்தின் தலைவரும்,முன்னாள் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின உபவேந்தருமான எம்.எஸ்.இஸ்மாயில் பிரதமரின் பாரியாருக்க நினைவு சின்னம் ஒன்றினை வசழங்குவதை படத்தில் காணலாம்.

Read More