கனடாவில் முதன்முறையாக நீதிபதியான திருநங்கை
கனடாவில் முதன்முறையாக திருநங்கை ஒருவர் நீதிபதியாக பதவியேற்றுள்ளார். கனடாவின் வரலாற்றில் முதன் முதலாக அந் நாட்டின் மனிடோபா மாகாணத்தை சேர்ந்த திருநங்கையான காயெல் மகென்ஷி மாகாண நீதிபதியாக அதிகாரபூர்வமாக பதவியேற்றுள்ளார். மனிடோபா பல்கலைக்கழகத்தில் சட்டக்கல்வியைப் பயின்ற இவர் கடந்த 2006ஆம் ஆண்டு வழக்கறிஞராக பட்டம் பெற்றார். சட்டத்துறையில் அவருக்கு இருந்த திறமையின் அடிப்படையில், அவரை மனிடோபா மாகாண நீதிபதியாக தெரிவு செய்துள்ளதாக சட்டத்துறை அமைச்சகம் கடந்த டிசம்பரில் அறிவித்திருந்தது. இந்த நிலையில், கடந்த வெள்ளியன்று வின்னிபெக் நகரில்…
