நடுவானில் பறந்த விமானத்தில் சண்டையிட்ட விமானப் பணிப்பெண்கள்
அமெரிக்க லொஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருந்து மின்னேபொலிஸ் பிராந்தியத்துக்கு பயணத்தை மேற்கொண்ட டெல்ற்றா எயார்லைன்ஸ் விமானமொன்றில் இரு விமானப் பணிப்பெண்கள் ஒருவருடன் ஒருவர் சண்டையில் ஈடுபட்டதால் அந்த விமானம் திசைமாற்றப்பட்டு அவசரகால நிலைமையின் கீழ் சால்ட் லேக் நகரில் தரையிறக்கப்பட்டுள்ளது. மேற்படி விமானம் 37,000 அடி உயரத்தில் நடுவானில் பறந்த வேளை அந்த விமானத்திலிருந்த இரு பணிப்பெண்களிடையே கடும் வாய்த் தர்க்கம் ஏற்பட்டது. இந்நிலையில் அந்த இரு பணிப்பெண்களும் ஒருவருக்கொருவர் கைமுஷ்டியால் குத்தி கட்டிப் பிடித்து சண்டையிட ஆரம்பித்துள்ளனர்….
