டென்மார்க்கின் அகதிகள் சட்டத்துக்கு ஐ.நா. கண்டனம்
டென்மார்க்கிற்குச் செல்லும் அகதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில், அந்நாட்டு நாடாளுமன்றம் சர்ச்சைக்குரிய சட்டம் ஒன்றை ஏற்றுக்கொள்ள எடுத்த முடிவுக்கு, ஐ.நா. கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அகதிகளின் சில உடைமைகளைக் கைப்பற்ற அதிகாரிகளுக்கு அந்தச் சட்டத்தின் கீழ் அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. அகதிகளின் 1,500 டொலர்களுக்கு மேற்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்ய வழி செய்யும் இந்தச் சட்டம், அகதிகளின் உறவினர்கள் டென்மார்க் வருவதையும் கடினமாக்கவுள்ளது. அகதிகளால் நாட்டிற்கு ஏற்படும் செலவை ஈடுகட்ட, அந்த நடவடிக்கை உதவும் என்று டென்மார்க் கூறுகிறது. இதனிடையே ஐ.நா….
