Headlines

பள்ளிவாசல் மீது குண்டு தாக்குதல் – ஜேர்மனியில் சம்பவம்

ஜேர்­ம­னியின் கிழக்கு நக­ரான ட்ரெஸ்­டனில் பள்­ளி­வாசல் ஒன்றின் மீதும்  சர்­வ­தேச மாநாட்டு மையம் ஒன்றின் மீதும் குண்டுத் தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது. நேற்று முன்தினம் (26) நடந்த இந்த குண்டு தாக்குதல் சம்­ப­வங்­களில் எவரும் காய­ம­டை­ய­வில்லை. இந்த தாக்­கு­தலை நடத்­தி­ய­தாக இது வரை யாரும் உரிமை கோர­வில்லை. எனினும் இன­வா­தமே இந்த தாக்­கு­தல்­களின் நோக்­க­மாக தெரி­கி­றது என்று அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர். இத் தாக்­கு­தலைத் தொடர்ந்து ஜேர்­மனியின் ட்ரெஸ்­டனில் உள்ள பள்­ளி­வா­சல்­களின் முன்னால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Read More

G7 மாநாடு: இலங்கை ஜனாதிபதிக்கு முதன்முறையாக அழைப்பு

G7 மாநாட்டில் பங்கேற்பதற்கு இலங்கை ஜனாதிபதி ஒருவருக்கு முதன்முறையாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜேர்மனியில் எதிர்வரும் ஜுன் மாதம் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்கவுள்ளதாக பிரதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (17) கொழும்பு அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே G7 மாநாட்டில் பங்கேற்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் சஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

Read More