எம்.எச்.முஹம்மதின் மறைவு: அமைச்சர் றிஷாத் அனுதாபம்
– ஊடகப் பிரிவு – மூத்த அரசியல்வாதியும், சமூக சேவையாளருமான முன்னாள் சபாநாயகர் எம்.எச்.முஹம்மதின் மறைவு நாட்டு மக்களுக்கு பாரிய இழப்பாகும் என்று அமைச்சர் றிசாத் தெரிவித்தார். எம்.எச்.முஹம்மதின் மறைவையொட்டி அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது,, முன்னாள் சபாநாயகர் எம்.எச்.முஹம்மத், ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த உறுப்பினர். கட்சியில் நெருக்கடி ஏற்பட்டபோதெல்லாம் அவர் கை கொடுத்து உதவியவர். அக்கட்சியின் முன்னாள் தலைவர்களுடன் மிக நெருக்கமாக செயற்பட்டு, அக்கட்சியை வழி நடத்தியவர். பல்வேறு அமைச்சுப் பொறுப்புக்களில்…
