Headlines

இலங்கையின் கடன்சுமையை குறைப்பதற்கு மேற்கத்தேய நாடுகள் இணக்கம்

இலங்கையின் கடன்சுமையை குறைக்க உதவுவதற்கு அமெரிக்கா, ஜேர்மன், பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் உத்தியோகபூர்வமாக இணக்கம் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன் குறித்த நாடுகளின் தூதுவர்களும் உயர்ஸ்தானிகர்களும் நேற்று (27) நடத்திய பேச்சுவார்த்தையின் போது இந்த உறுதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இலங்கையின் கடன்சுமை தற்போதைய நிலையில் 8500 பில்லியன் ரூபாய்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 42 சதவீதமானவை வெளிநாட்டுக் கடன்களாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த கடன்களை குறைப்பதற்கு,…

Read More

அமெரிக்காவுக்கு பறந்த கோத்தபாய!

பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு முகங்கொடுத்துள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். எப்படியிருப்பினும், கோத்தபாயவின் மனைவியின் தாயாரின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளமையினால் அவர் அமெரிக்காவுக்கு சென்றுள்ளதாக ராஜபக்ச குடும்ப தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. எனினும் கோத்தபாய ராஜபக்ச மீண்டும் மே மாதம் முதல் வாரத்திலே இலங்கை வரவுள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.

Read More

உலக வங்கியின் மாநாட்டில் நிதியமைச்சர்!

– பா.ருத்ரகுமார் – சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் அரையாண்டு மாநாட்டில் பங்குபற்றுவதற்காக நிதியமைச்சர் ரவி கருனாநாயக்க நாளை ஐக்கிய அமெரிக்காவிற்கு செல்லவுள்ளதாக நிதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டள்ளது. ஐக்கிய அமரிக்காவின் வொஷிங்டன் நகரில் ஆரம்பமாகவுள்ள குறித்த மாநாடு இம்மாதம் 17 ஆம் திகதி வரை நடைபெறும். இம்மாநாட்டுக்கு உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற 187 நாடுகளின் நிதியமைச்சர்களும் நிதித்துறை தலைவர்களும் பங்குபற்றுகின்றனர்.

Read More

நீருக்கு அடியில் ஓவியக் கண்காட்சி

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் வித்தியாசமான ஓவியக் கண்காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளது. வரையப்பட்ட ஓவியங்கள் நீருக்கடியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நீருக்கடியில் இடம்பெற்ற இந்த ஓவியக் கண்காட்சியை பார்வையிடுவதற்கு பெருமளவிலான பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர். கடலுக்கடியில் அமையப் பெற்றுள்ள பாறைகளில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் காண்போரை கவரும் வகையில் அமையப் பெற்றிருந்தன. சுழியோடிகள் ஓவியங்களை கைகளில் சுமந்தவாறு ஓவியக் கண்காட்சியில் ஈடுபட்டுள்ளமை இங்கு காட்சிப்படுத்தப்பட்டது. சிலிக்கனால் சூழப்பட்ட வெளிப்புறங்களை கொண்டு அமைந்த ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டதாக நியூஸ் பியுரோவை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை…

Read More

முஸ்லிம் மாணவனை தீவிரவாதி என்று அழைத்த ஆசிரியை சஸ்பெண்டு

அமெரிக்காவில் டெக்டாஸ் மாகாணத்தில் உள்ள ஹீஸ்டன் முதல் காலனியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் 7–வது படிக்கும் முஸ்லிம் மாணவன் வாலீத் அபுஷாபான் (12). சம்பவத்தன்று வகுப்பறையில் ‘பென்ட் இட் லைக் பெக்காம்‘ என்ற சினிமா படம் காட்டப்பட்டது. அதை தொடர்ந்து பரீட்சை நடத்தப்பட்டது. அதன் பின்னர் படத்தில் வந்த காமெடி காட்சிகளை நினைவுபடுத்தி மாணவன் வாலீத் சத்தமாக சிரித்துக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த ஆங்கிலமொழி ஆசிரியை வாலீத்தை பார்த்து ‘நீ ஒரு தீவிரவாதி’ அதனால்தான் சிரிக்கிறாய் என்றார்….

Read More

இலங்கையின் வாக்காளர்களுக்கு அமெரிக்கா மதிப்பளிக்கிறது!

2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதியும் ஆகஸ்ட் 17ஆம் திகதியும் இலங்கை மக்கள் அளித்த வாக்குகளுக்கு அமெரிக்கா மதிப்பளிப்பதாக அமரிக்க தூதுவர் அடுல் கெசாப் தெரிவித்துள்ளார். இலங்கை மக்களின் நல்லிணக்கம், அமைதி, ஒற்றுமை, சிறப்பான எதிர்காலம், ஜனநாயகம் என்பன இந்து- பசுபிக் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு வந்துள்ள அமெரிக்கா கடற்படை கப்பலை வரவேற்கும் நிகழ்வின்போது கெசாப் இந்தக்கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இதேவேளை, அமெரிக்காவின் பல முக்கிய அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்வது இலங்கை…

Read More

மக்கள் டிரம்ப்பை அதிபராக தேர்ந்தெடுக்க மாட்டார்கள்: ஒபாமா

அமெரிக்காவில் ஜனாதிபதி ஒபாமாவின் பதவிக்காலம் நிறைவு அடைய உள்ள நிலையில், அங்கு நவம்பர் மாதம் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடக்க உள்ளது. குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட டோனால்ட் டிரம்ப் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் அமெரிக்காவின் அடுத்த அதிபராகும் வாய்ப்பு டோனால்டு டிரம்ப்புக்கு இல்லை என்று அதிபர் ஒபாமா கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில் “டோனால்டு டிரம்ப் அடுத்த அமெரிக்க அதிபராக வாய்ப்பில்லை என்று தொடர்ந்து நான் நம்புகிறேன்….

Read More

31 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு ஒதுக்கும் அமெரிக்கா

இலங்கை அர­சாங்­கத்தின் நல்­லி­ணக்க மற் றும் ஊழல் ஒழிப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்காக 31 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களை ஒது க்கும் யோச­னையை அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபா­மாவின் நிர்­வாகம் முன்­வைத்­துள்­ளது. அமெ­ரிக்க இரா­ஜாங்க செய­லா­ளர் ஜோன் கெரி அந்த நாட்டின் காங்­கி­ரஸுக்கு அனுப்­பி­வைத்­துள்ள வர­வு­ – செ­லவுத்­திட்ட யோச­னை­யி­லேயே இது குறித்து தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. ஜனா­தி­ப­தித் ­தேர்தல் மற்றும் பொதுத்­தேர்­த­லின் பின்னர் இடம்­பெற்ற வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த மாற்­றங்­க­ளுக்கு பின்னர் இலங்­கைக்­கான அமெ­ரிக்க உதவி புதிய யுகத்தில் நுழைந்­துள்­ள­தாக அந்த…

Read More

அமெரிக்காவை தாக்குவோம்: வடகொரிய அதிபர் அதிரடி

வடகொரியாவின் அணு ஆயுத பலத்தை மேலும் விரிவுப்படுத்துவோம் என அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச அணு ஆயுத பரவல் தடை சட்டத்தை மீறிய வகையில் கடந்தவாரம் சக்திவாய்ந்த ஹைட்ரஜன் குண்டை வெடித்து வடகொரியா பரிசோதனை நடத்தியது. அந்நாட்டின் இந்த அத்துமீறலானது அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட உலகநாடுகள் கடும் எதிர்ப்பையும், ஐ.நா.சபை புதிய பொருளாதார தடையை அந்நாட்டின்மீது விதிக்க வேண்டும் என்ற வலியுறுத்தலையும் சம்பாதித்துள்ள நிலையில் வடகொரியா…

Read More

பறக்கும் தட்டு குறித்து, உண்மையை உலகுக்கு வெளிப்படுத்துவேன் – ஹிலாரி

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளருக்கு போட்டியிட்டுள்ள ஹிலாரி கிளிண்டன், பறக்கும் தட்டு குறித்த மர்மத்தின் உண்மையை உலகுக்கு வெளிப்படுத்துவேன் என்று உறுதியளித்துள்ளார். அமெரிக்காவில் வரவிருக்கின்ற ஜனபாதிபதி தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பாக ஹிலாரி கிளிண்டன் வேட்பாளராக போட்டியிடுகிறார். தேர்தல் குறித்த பிரசாரங்களில் ஈடுபட்டு வரும் இவர், பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறார். இதில் ஒரு வாக்குறுதியாக, நான் அமெரிக்காவின் ஜனாதிபதியானால், பறக்கும் தட்டும் குறித்த உண்மையை வெளிப்படுத்துவேன் என்று கூறியுள்ளார். அமெரிக்காவில் 77 சதவீதம் மக்கள், வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு…

Read More

அமெரிக்கா: மஸ்ஜிதில் பன்றி இறைச்சியை வைத்துச் சென்ற நபர் கைது

இஸ்லாத்தில் பன்றி இறைச்சியை உண்பதும் விலக்கப்பட பாவச்செயலாகும் (ஹராம்) . இந்நிலையில், அமெரிக்காவில் சமீபகாலமாக மதவெறுப்புணர்வின் உச்சகட்டமாக இஸ்லாமியர்களால் விலக்கப்பட்ட பன்றி இறைச்சியை சிலர் மசூதிகளுக்குள் வீசிவிட்டு செல்வது அரங்கேறி வருகின்றது. இதில் ஒருகட்டமாக அமெரிக்காவின் வடகிழக்கு மாநிலமான புளோரிடாவின் டிட்டுஸ்வில்லி பகுதியில் உள்ள மஸ்ஜித் அல் முனின் என்ற மசூதியில் கடந்த வெள்ளிக்கிழமை இதே சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த மசூதியின் பின்வாசல் வழியாக ஒற்றை ஆடையால் உடலை மறைத்தபடி, மொட்டைத் தலையுடன் நுழைந்த ஒரு மர்ம…

Read More

அமெரிக்காவின் அடுத்த கருப்பின ஜனாதிபதி வில் சுமித்?

மென் இன் பிளாக், இண்டிபெண்டன்ஸ் டே போன்ற படங்களில் நடித்து உலக புகழ் பெற்ற நடிகர் வில் சுமித், நான் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட கூடும் என தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில் நடிப்பு, இசை போன்ற துறைகளை தவிர்த்து, வேறு செயல்பாடுகள் மூலமாக தன்னால் உலகிற்கு மிகப் பெரிய பங்களிப்புகளை செய்யமுடியும் என்று தெரிவித்துள்ளார். மேலும் உலகின் பிரபலமான திரை நட்சத்திரமாக இருப்பது என்பது மிகச் சிறிய சாதனைதான் என்று கூறியுள்ள அவர்,…

Read More