சீனாவுக்கு சுயகட்டுப்பாடு தேவை: ஒபாமா
வலிமையான நாடாக வளர்ந்துவரும் நாடான சீனாவுக்கு சுயகட்டுப்பாடு தேவை என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வலியுறுத்தியுள்ளார். சீனாவில் நடைபெறும் ஜி-20 நாடுகளின் உச்சிமாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, முன்னதாக அமெரிக்க தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி நேற்று ஒளிபரப்பானது. அந்த பேட்டியில் சீனாவைப் பற்றிய தனது கண்ணோட்டத்தை ஒபாமா பதிவு செய்துள்ளார். சர்வதேச சட்டங்களுக்கும் விதிமுறைகளுக்கும் நாம் கட்டுப்படுகிறோம் என்றால், அது நிர்பந்தத்தினால் அல்ல. ஆனால், சர்வதேச ஒழுங்குமுறையை நாம் ஏற்றுக் கொள்கிறோன்…
