Headlines

ஈரான் – இலங்கை பேச்சுவார்த்தை வெற்றி

ஈரானுடன் மீண்டும் வர்த்தகத் தொடர்பை ஆரம்பிக்க இணக்கம் காணப்பட்டுள்ளதாக, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இதன்படி, விரைவில் மிகவும் குறைந்த செலவில் ஈரானிடம் இருந்து மசகு எண்ணெயை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் ஈரானின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் நேற்று மாலை ரவி கருணாநாயக்கவுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார். இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்ட போதே நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க இவ்வாறு கூறியுள்ளார்.

Read More

வாக்குறுதிகளை அமுல்படுத்துங்கள் – மன்னிப்புச் சபை

இலங்கை அளித்த வாக்குறுதிகளை அமுல்படுத்த வேண்டுமென அனைத்துலக மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது. பொறுப்பு கூறுதல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் செயற்படுத்தப்பட வேண்டியத அவசியமானது என தெரிவித்துள்ளது. உலக நாடுகளின் மனித உரிமை நிலைமைகள் குறித்த அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம், பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் நம்பிக்கை ஒளிக்கீற்றை உருவாக்கியுள்ளது. எனினும், பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையை கட்டியெழுப்ப இதுவரையில் சொற்பளவிலான நடவடிக்கைகளே இலங்கையில் எடுக்கப்பட்டுள்ளன….

Read More

மேலும் இரு சுங்க அதிகாரிகள் கைது

இலங்கையில் பதிவான மிகப் பெரிய இலஞ்ச தொகையாக கருதப்படும்  12.5 கோடி ரூபாவை இலஞ்சமாக பெற்ற சுங்க அதிகாரிகள் விவகாரத்துடன் தொடர்புபட்ட மேலும் இரு சுங்கத் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக் குழு இவர்களை இன்று (25) கைது செய்தது. சுங்க அத்தியட்சர்களான வசந்த விமலவீர மற்றும் உபாலி செனரத் விக்ரமசிங்க ஆகியோரே இவ்வாறு கைதுச் செய்யப்பட்டதக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்…

Read More

ஜேர்மன் அதிபர் விரைவில் இலங்கைக்கு விஜயம்

ஜேர்மன் அதிபர் ஏஞ்ஜலா மெர்கல் இலங்கைக்கான விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதற்கான உத்தியோகபூர்வை அழைப்பினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜேர்மன் அதிபருடனான சந்திப்பின்போது விடுத்துள்ளார். அதேவேளை, இலங்கைக்கான ஜி.எஸ்.பி வரிச்சலுகை மற்றும் ஐரோப்பா சந்தைக்கான இலங்கைக்கான மீன் ஏற்றுமதி தடையை நீக்குவது தொடர்பிலான விவகாரங்கள் குறித்து கவனம் செலுத்துவதாக ஜேர்மன் அதிபர் கூறியுள்ளார்.

Read More

ஜேர்மனிலுள்ள இலங்கையர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

யுத்த காலத்தில் ஜேர்மனில் தஞ்சமடைந்த இலங்கையர்களை மீண்டும் தாயகத்திற்கு திரும்புமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார். இலங்கையில் அனைத்து மக்களும் சந்தோஷமாக வாழக் கூடிய ஜனநாயக நாடாக மாற்றப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜேர்மன் சான்சலர் அஞ்சலா மெர்கலுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களை சந்தித்த போதே, அவர் இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார். மேலும், ஜேர்மனால் இலங்கைக்கு வழங்கப்படும் அவிவிருத்திக்கான உதவிகள் தொடர்பில் தனது நன்றிகளையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்த ஊடகவியலாளர் சந்திப்பில்…

Read More

இலங்கை வரவுள்ள நியூஸிலாந்துப் பிரதமர்

நியூஸிலாந்துப் பிரதமர் ஜோன் கீ  இரு நாடுகளுக்கும் இடையில் வளர்ந்து வரும் வர்த்தக மற்றும் அரசியல் உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்குடன் அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இலங்கை வரும் ஜோன் கீ, ஜனாதிபதி, பிரதமரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதோடு, உள்ளூரிலுள்ள வர்த்தகர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இவர் கடந்த 2013ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ள இலங்கை வந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

மரக்கறி விலை அதிகரிக்கும் அறிகுறி

எதிர்வரும் நாட்களில் மரக்கறி விலை மேலும் உயரலாம் என அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனம் அறிவித்துள்ளது. மரக்கறி விவசாயிகளுக்கு உரமானியம் வழங்கப்படாமை காரணமாக கூடிய விலை கொடுத்து உரங்களை கொள்வனவு செய்ய வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளதாக சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

இலங்கை தேசியக் கொடியை மாற்ற கோரிக்கை

இலங்கையின் தேசியக் கொடி மாற்றப்பட வேண்டும் என மகளிர் அமைப்பு ஒன்று கோரியுள்ளது. அக்கொடியில் சிங்கத்தின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது வன்முறையின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது எனும் கருத்து, மன்னாரில் நடைபெற்ற புதிய அரசியல் சாசனம் தொடர்பான கலந்தாய்வு கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. இலங்கையில் புதிய அரசியல் சாசனத்தை ஏற்படுத்துவது தொடர்பான மக்கள் கருத்தறியும் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அவ்வகையில் மன்னாரில் நடைபெற்ற கூட்டமொன்றில் பெண்கள் நலன்கள் மற்றும் மேம்பாட்டுக்கென சுயாதீனமாகவும் சுதந்திரமாகவும் செயல்படக் கூடிய ஆணைக்குழுவொன்றை ஏற்படுத்த புதிய அரசியல்…

Read More

மங்கள உடனடியாக பதவி விலக வேண்டும்: வாசுதேவ

– லியோ நிரோஷ தர்ஷன் – நாட்டின் இறையாண்மையை காட்டிக்கொடுத்து, மேற்குலகின் அடிமையாக இலங்கையை உட்படுத்திய குற்றச்சாட்டுக்காக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உடனடியாக பதவிவிலக வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Read More

செயிட் அல் ஹுசைன் நாடு திரும்பினார்

செயிட் அல் ஹுசைன்  டுபாய் நோக்கி பயணமானார். நான்கு நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு  இலங்கைக்கு வருகை தந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர்  இன்று அதிகாலை 3 மணியளவில் இலங்கையில் இருந்து புறப்பட்டு சென்றார்.

Read More

இலங்கையில் லைலா, சுருக்கு வலைகளுக்கு 21முதல் தடை

இந்திய மீனவர்களின் இழுவைப் படகு மீன்பிடியை இலங்கை ஏற்றுக் கொள்ளாது என்று மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் இந்தக் கருத்தை அவர் வெளியிட்டுள்ளார். “லைலா மற்றும் சுருக்கு” மீன்பிடிகளை காட்டிலும் இழுவைப் படகுகள் மூலமான மீன்பிடி பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. எனவே இதனை இலங்கையால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் இலங்கைக்கு வந்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சரிடம் இந்த விடயத்தை வலியுறுத்தவுள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தம்மிடம்…

Read More

ஆசிரிய இடமாற்றத்தின்போது தேசிய கொள்கை பின்பற்றப்படுவதில்லை

– க.கிஷாந்தன் – இலங்கையில் தேசிய இடமாற்றக்கொள்கை இருந்தும் நுவரெலியா – வலப்பனை கல்வி வலயத்தில் 2012ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்த கொள்கை பின்பற்றப்படுவதில்லை என அகில இலங்கை ஆசிரியர் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட செயலாளர் ஆசிரியர் வே.இந்திரசெல்வன் தெரிவிக்கின்றார். பின்தங்கிய இடங்களில் கடமையாற்றுகின்ற ஆசிரியர்கள் 10 வருடங்களுக்கு மேல் ஒரே பாடசாலையில் சேவையாற்றி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஒரு சிலர் 20 வருடங்களுக்கும் மேலாக வசதியான பாடசாலைகளிலே கடமையாற்றுவதால், பல ஆசிரியர்கள் உள ரீதியாக பாதிப்புக்குள்ளாவதோடு,…

Read More