Headlines

இலங்கை அணி மீது தாக்குதல் : 4 பேர் சுட்டுக்கொலை

பாகிஸ்தானில் வைத்து இலங்கை கிரிக்கெட் அணி மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய 4 தீவிரவாதிகள் இன்று அந்நாட்டு பொலிஸாரால் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்கள் ரஹ்மான், அப்துல் வகாப், அர்ஷாட் மற்றும் சுபைர் அலைஸ் நைக் முகமட் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 2009ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி மீது இடம்பெற்ற தாக்குதலில் 9 பேர் காயமடைந்திருந்தனர். லாகூர் நகரில் உள்ள கடாபி விளையாட்டு மைதானத்தில் இலங்கை கிரிக்கெட் அணி பங்கேற்ற போட்டியின் போது இந்த தாக்குதல்…

Read More

பத்திரிக்கை சுதந்திரம்: இலங்கைக்கு 141 ஆவது இடம்!

2016 ஆம் ஆண்டிற்கான சர்வதேச பத்திரிக்கை சுதந்திர தரவரிசைப் பட்டியலில் இலங்கை 141 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. குறித்த நாடுகளில் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தையும், ஊடக ஒடுக்கு முறைகளையும் அடிப்படையாகக் கொண்டு ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் போர்டர்ஸ் (Reporters Without Borders – RSF) இந்தப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. கடந்த வருடத்தில் இப்பட்டியலில் 165 ஆவது இடத்தினை வகித்த எமது நாடு இவ்வாண்டில்141 ஆவது இடத்தினை தக்கவைத்துள்ளமை விசேட அம்சமாகும்.  மேலும் கடந்த ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட நல்லாட்சி…

Read More

பொருளாதார வளர்ச்சியில் பாரிய மாற்றங்கள்!

எதிர்­வரும் ஒன்­றரை வரு­டங்­களில் இலங்கையின் பொரு­ளா­தார வளர்ச்­சியில் பாரி­ய­மாற்­றங்கள் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளன இதற்­கான ஆரம்­ப­கட்ட நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றது .உள்­நாட்டு பொரு­ளா­தா­ரத்தை வளப்­ப­டுத்த உற்­பத்தி ஏற்­று­ம­தியை அதி­க­ரிக்க வேண்டும் அத்­துடன் வெ ளிநாட்டு முத­லீட்டை அதி­க­ரிப்­ப­தற்­காககுறு­கிய கால மற்றும் நீண்ட கால திட்­டங்கள் வகுக்­கப்­ப­டு­வ­தாக நிதி­ய­மைச்சர் ரவிகரு­ணா­நா­யக்க தெரி­வித்தார். சபு­­கஸ்­கந்த பாது­காப்பு கல்­லூ­ரியில் இடம்பெற்ற ‘இலங்­கையில் தற்­போ­தைய பொரு­ளாதார நிலைமை’ தொடர்பான செய­ல­மர்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே அவர் இதனை தெரி­வித்தார் அங்கு அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது கடந்த…

Read More

ஐந்து இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

ஐந்து இலங்கையர்களை சேர்பியாவுக்கு ரொமானியாவிலிருந்து கடந்த வாரம் நாடு கடத்தப்பட்டுள்ளதாக ரொமானிய குடிவரவுத்துறை அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர். ரொமானியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கையின் பிரகாரம், சேர்பியாவுக்கு நாடுகடத்தப்பட்டு வருகின்றமையால் குறித்த ஐந்து இலங்கையர்களும் நாடுகடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அவர்கள் 20 முதல் 24 வயதுகளை உடையவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read More

நேபாளம்- இலங்கை நேரடி விமானச்சேவை ஆரம்பம்

நேபாளத்தின் ஹிமாலயய விமான சேவை இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பித்துள்ளது. இந்த விமான பயணத்தின் ஆரம்பமாக நேபாளத்தின் காத்மண்டு நகரில் இருந்து கடந்த 12ம் திகதி முதலாவது விமானம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. இரு நாடுகளுக்கு இடையிலான சுற்றுலாத்துறையை விருத்தி செய்யும் நோக்கில் இந்த விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹிமாலயய விமான சேவை நிறுவனமானது சாதாரண வகுப்பு விமான டிக்கட்டுக்கு 35,000 இல் இருந்து 55,000 வரை கட்டணம் அறவிடப்படுவதாக தெரிவித்துள்ளது.

Read More

மலேரியாவை பரப்ப இந்தியா சதி : மருத்துவ அதிகாரிகள் குற்றச்சாட்டு

இலங்கையில் சுமார் 40 வருடங்களாக மலேரியா நோய் காணப்படவில்லை. ஆனால் தற்போது நுவரெலியாவில் இந்தியர் ஒருவர் மலேரியா நோயுடன் இனம்காணப்பட்டுள்ளார். மலேரியா நோய் இல்லாத நாடாக காணப்பட்ட இலங்கையில் மலேரியாவை பரப்புவதற்கு இந்தியா சதித் திட்டம் செய்துள்ளது என இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

Read More

பனாமா ஆவணக்கசிவில் இலங்கையர் தொடர்பு குறித்து விசாரணை

பனாமா நாட்டை தளமாக கொண்ட மொஸாக் ஃபொன்செக என்ற சட்ட நிறுவனத்தின் கசிந்துள்ள ஆவணங்களில் இலங்கையர்கள் தொடர்புபட்டுள்ளார்களா என்பது குறித்து அரசாங்கம் வெளிப்படையாக விசாரணைகளை முன்னெடுக்குமென அரச தொழில் முயற்சிகள் பிரதி அமைச்சர் எரான் விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சீஷெல்ஸ் நாட்டுடன் மிக நெருக்கமான உறவுகளைக் கொண்டிருந்தமையால் இது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும், அரசாங்கம் என்ற வகையில் நாட்டின் சட்டங்கள், சர்வதேச சட்டங்கள், பணப்பரிமாற்றச் சட்டங்கள் என்பன மீறப்பட்டுள்ளனவா என்பது குறித்து…

Read More

இலங்கையில் முதலீடு செய்யும் விராட் கோஹ்லி

இந்திய கிரிக்கட் வீரர் விராட் கோஹ்லி பங்குதாரராக இருக்கும் இந்திய உடல் வலுவூட்டல் (ஜிம்) நிறுவனம் இலங்கையிலும் ஐக்கிய அரபு ராச்சியத்திலும் தமது வர்த்தகத்தை விஸ்தரிக்கவுள்ளது. ச்சிசெல் பிட்னெஸ் ஜிம் செய்ன் என்ற இந்த நிறுவனம், தற்போது பெங்களுர் மற்றும் ஆந்திர பிரதேசங்களில் தமது வியாபாரத்தை மேற்கொண்டு வருகிறது இந்தநிலையில் நிறுவனம், புதுடில்லி, மும்பாய், குஹாஹெட்டி, ஹைதராபாத், சென்னை ஆகிய இடங்களிலும் கிளைகளை நிறுவவுள்ளது இதன்படி இந்தியாவில் மாத்திரம் 100 கிளைகளை நிறுவ அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அத்துடன்…

Read More

இலங்கையின் வாக்காளர்களுக்கு அமெரிக்கா மதிப்பளிக்கிறது!

2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதியும் ஆகஸ்ட் 17ஆம் திகதியும் இலங்கை மக்கள் அளித்த வாக்குகளுக்கு அமெரிக்கா மதிப்பளிப்பதாக அமரிக்க தூதுவர் அடுல் கெசாப் தெரிவித்துள்ளார். இலங்கை மக்களின் நல்லிணக்கம், அமைதி, ஒற்றுமை, சிறப்பான எதிர்காலம், ஜனநாயகம் என்பன இந்து- பசுபிக் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு வந்துள்ள அமெரிக்கா கடற்படை கப்பலை வரவேற்கும் நிகழ்வின்போது கெசாப் இந்தக்கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இதேவேளை, அமெரிக்காவின் பல முக்கிய அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்வது இலங்கை…

Read More

கழுகை தொடர்ந்து மயில் வேட்டை : பொலிஸார் வலைவீச்சு

மயில்களை வேட்டையாடி அவற்றை இறைச்சியாக்கும் சந்தேக நபர் தொடர்பில் தகவல்கள் தெரிந்தவர்கள் தம்மை தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். குறித்த சந்தேக நபர் நீர்கொழும்பை வசிப்பிடமாகக் கொண்டவர் என்றும் அவர் தற்போது இத்தாலியில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர் தொடர்பாக தகவல் தெரியுமாயின் 070 3303022 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

72 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

இலங்கையிலிருந்து மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு வீட்டு பணிப் பெண்களாக  சென்ற 72  பேர் மீண்டும் நாட்டுக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மத்தியக் கிழக்கு நாடுகளில் பல துன்பங்களை அனுபவித்து வந்ததை தொடர்ந்தே அவர்கள் அந்நாடுகளில் உள்ள இலங்கை தூதரகத்தால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இரண்டு இலங்கை விமானச் சேவைக்கு சொந்தமான விமானங்களில்  சவூதியில் இருந்து 12 பேரும் குவைத்திலிருந்து 48  பேரும் கட்டாரிலிருந்து 12 பேரும் வந்தடைந்துள்ளனர். இவ்வாறு வந்தவர்களில்…

Read More

இலங்கையின் முதலாவது சபாரி பூங்கா

இலங்கையின் முதலாவது சபாரி பூங்கா இன்று அம்பாந்தோட்டை, ரிதிகம பிரதேசத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த சபாரி விலங்கியல் பூங்காவை நிர்மாணிப்பதற்காக 2008 ஆம் ஆண்டு அடிக்கல் நடப்பட்டதுடன் 2 ஆயிரத்து 600 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டு, பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. 500 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்டுள்ள இச்சபாரி பூங்காவில்  சிங்கவலயம், உலக விலங்கு வலயம் மற்றும் ஆசிய யானைகள் வலயம் என மூன்று வலயங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இப்பூங்காவில் 22 வகையான 200 இற்கும் மேற்பட்ட விலங்குகளை காணக்கூடியதாக…

Read More