Headlines

வாழ்வுக்கும் –மரணத்துக்கும் இடையிலுள்ள ஒரு போராட்டமாக இந்த தேர்தலை நாம் பார்க்க வேண்டியுள்ளது-தேசிய தலைவர் றிஷாத் பதியுதீன்

 இர்ஷாத் றஹ்மத்துல்லாஹ் இந்த  தேர்தல் என்பது சிறுபான்மை சமூகத்தின் வாழ்வினை அல்லது அழிவினை தீர்மாணிக்கும் ஒன்றாகும் என்று தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர் றிசாத் பதியுதீன் கடந்த கால தேரதல்களை விட அனைத்து மக்களும் கடமையுணர்வுடன் வாக்களிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் சற்று முன்னர் புத்தளம் தில்லையடியில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பின் போது தேசிய தலைவர் மேற்கண்டவாறு கூறினார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்திற்கு முசலி பிரதேச…

Read More

மக்களின் வாக்குரிமையை கொள்ளையிட அரசாங்கம் முயற்சி!– கபீர் ஹாசீம்

தேர்தல் தினமன்று வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டு அதன் மூலம் தேர்தலை குழப்ப திட்டமிடப்பட்டுள்ளது. சுதந்திரமான முறையில் மக்கள் வாக்களிப்பதனை தடுக்கும் நோக்கில் வன்முறகைள் கட்டவிழ்த்துவிடப்பட உள்ளது. இந்த விடயம் அம்பலமானதைத் தொடர்ந்து கட்சிää தேர்தல் ஆணையாளருடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. அரசாங்கம் சூழ்ச்சித் திட்டங்களை முன்னெடுத்தால் அவற்றை அச்சமின்றி எதிர்நோக்க எதிர்க்கட்சிகள் தயார். அரச சொத்து பயன்பாடு, சட்டவிரோத தேர்தல் பிரச்சாரம் போன்றவற்றை நோக்கும் போது, எதிர்வரும் 8ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் சுயாதீனமானதும் நீதியானதுமாக…

Read More

காத்தான்குடியில் ஒன்றுபட்ட அரசியல் சக்திகள்..!

காத்தான்குடியில் அதிகரித்துள்ள தேர்தல் வன்முறைகள் தொடர்பில் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், வன்முறைகளுக்கு தமது கண்டனங்களை பதிவு செய்வதற்காகவும் பல்|வேறு அரசியல் சக்திகள் ஒன்றுபட்டுள்ளன. இதுதொடர்பிலான முக்கயி ஊடகவியலாளர் மாநாடு இன்று 3ஆம் திகதி நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். பட உதவி – பைரூஸ்

Read More

ஆயுள் முழுவதும் ஜனாதிபதியாக இருக்க, மஹிந்த ராஜபக்ஸ ஆசைபடுகிறார் – றிஷாத் பதியுதீன்

1983  ஆம் ஆண்டுக்கு பின்னர் இடம் பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான பாரிய சொத்தழிப்பு கலவரமாக அளுத்கம சம்பவம் பதியப்பட்டுள்ளதாக தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர் றிசாத் பதியுதீன் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களை கைது செய்யுங்கள் என்று ஆதாரங்களை ஜனாதிபதியிடம் கொடுத்த போது அதற்கு அவர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கொழும்பில் தெரிவித்தார். ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரி பால சிறிசேனவை ஆதரித்து கொழும்பு ஆட்டுப் பட்டித்தெருவில் நேற்று இரவு இடம் பெற்ற…

Read More

1000 மில்லியன் ரூபா, நட்டஈடு கேட்கிறார் மைத்திரி

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, அரச ஊடகங்களில் ஒன்றான சுயாதீன தொலைக்காட்சியிடம் ஆயிரம் மில்லியன் ரூபா நட்ட கோரியுள்ளார். தமது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செய்தியில் அவதூறு பிரச்சாரம் செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தியுள்ளார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் சட்டத்தரணியினால் இந்த நிபந்தனைக் கடிதம், சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சி நிறுவனம், பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், பிரதிப் பொது முகாமையாளர் சுதர்மன் ரத்தலியகொட ஆகியோருக்கு எதிராக வழக்குத் தொடரப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது….

Read More

அல்லாஹ்வின் இல்லம் மீது எவர் கைவைத்தாலும் அல்லாஹ் அவர்களுக்கான தண்டனையினை வழங்குவான்: றிஷாத் பதியுதீன்

அல்லாஹ்வின் இல்லம் மீது எவர் கைவைத்தாலும் அல்லாஹ் அவர்களுக்கான தண்டனையினை வழங்குவான் என தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான றிசாத் பதியுதீன், எமது சமூகத்தின் பாதுகாப்புக்காக எதனையும் இழக்க தயாராகவுள்ளேன் என்றும்  கூறினார். பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஏன் எமது கட்சி ஆதரித்தது என்பது தொடர்பில் அநுராதபுரம் சீ.டி.சீ மண்டபத்தில் நேற்று (03) இடம் பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர்…

Read More

ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கை தொடர்பில் இலங்கை ஆச்சரியம்

இலங்கையின் வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில். முழுமையாக உள்நாட்டு விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியம் தலையிட முனைவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 1931ஆம் ஆண்டு முதல் இலங்கை, ஜனநாயக வரம்புகளை பின்பற்றி வருகிறது. இதன் அடிப்படையிலேயே தேர்தல்களும் ஜனநாயக ரீதியில் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் உள்நாட்டு தேர்தல் ஒன்றில் வெளிநாட்டு பிரதிநிதிகளின் தலையீடு தேவையற்றது என்று வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. எனவே ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை கிளை வெளியிட்டுள்ள அறிக்கை தமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. ஐரோப்பிய…

Read More

“எதிரணி வேட்பாளர் மஹிந்த’ தடுமாறி உச்சரித்தார் டக்ளஸ்

“பொது எதிரணி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ­’ என்று தடுமாறி உச்சரித்து பின்னர் சுதாகரித்து சரியாக வாசித் தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்ன ணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று முற்பகல் 10 மணிக்கு யாழ்ப் பாணம் துரையப்பா விளையாட்ட ரங்கில் ஆரம்பமாகியது. இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மஹிந்தவை வாழ்த்தி, அவரை ஆதரிக்கக் கோரி வெற்றிலைச் சின்னத் துக்கு வாக்களிக்குமாறு உரையாற் றினார். அந்தச் சமயத்தில் உரையின் இடையே “பொது எதிரணி…

Read More

அலைபேசியூடாக தேர்தல் பிரசாரம் செய்வதை நிறுத்துக

சந்தாதாரர்களின் சம்மதமின்றி அலைபேசி வலையமைப்புகளூடாக தேர்தல் பிரசாரம் செய்வதைத் தவிர்க்கு மாறு சகல வேட்பாளர்களிடமும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கேட்டுக்கொண்டுள்ளார். வாக்களிப்புக்கு 48 மணிநேரத் துக்கு முன்னர் செய்யப்படும் இவ்வா றான பிரசாரங்கள் தேர்தல் சட்டங் களை மீறியதாகக் கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார். அரசியல் கட்சிகளையும் வேட்பா ளர்களையும் ஆதரிக்கும் குறுஞ்செய்திகளை அனுப்பும் திட்டமிட்ட செயற்பாடுகள் பற்றி முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்துள்ளார்.

Read More

சர்வதேச விவாத போட்டியில், கலந்து கொள்வதற்காக மலேசியா பயணமாகின்றார்…!

இர்ஸாத் ஜமால் (M.A) சிட்டாகோங் சர்வதேச இஸ்லாமிய பல்கலை கழகத்தில் கணனித்துறையில் (Bsc in computer Science)  தனது உயர் படிப்பினை தொடரும் இலங்கை மாணவன்  அப்துல் றஹூமான் சர்வதேச விவாத போட்டியில் கழந்து கொள்வதற்காக சர்வதேச விவாத போட்டியில் கலந்து கொள்வதற்காக மலேசியா பயணமாகின்றார்.பயணமாகின்றார். இஸ்லாமிய நாடுகளுக்கான அமைப்பினால் (IOC) வருடம் தோறும் சர்வதேச ரீதியில் நாடத்தப்படும் இப்போட்டயின் முதல் கட்டம் 15.12.2014 ம் திகதி சிட்டாகோங் சர்வதேச இஸ்லாமிய பல்கலை கழகத்தில் நடை பெற்றது….

Read More

பிள்ளையைக் கடத்தி மைத்திரிபாலவிற்கு எதிரான, பிரசாரத்திற்குப் பயன்படுத்தியதாக முறைப்பாடு

தமது பிள்ளையைக் கடத்திச் சென்று ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பிரசாரத்திற்குப் பயன்படுத்தியுள்ளதாக தாயொருவர், சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார். இந்த முறைப்பாடு தொடர்பில், சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பிரிவு இன்று நீதிமன்றத்திற்கு அறிக்கையொன்றை சமர்ப்பித்தது. பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணி சாலிய பீரிஸ், இது தொடர்பில் கருத்துத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது; கொழும்பு சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரியினால்,…

Read More

அநுராதபுர முஸ்லிம்களை சந்திக்கிறார் றிஷாத் பதியுதீன்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் அநுராதபுர மாவட்ட முஸ்லிம்களுடனான சந்திப்பொன்றினை மேற்கொள்ளவுள்ளார். இளம் சட்டத்தரணி றுஸ்தி ஹபீபின் ஏற்பாட்டிலான இந்த சந்திப்பு நாளை சனிக்கிழமை 10 மணிக்கு அனுராதபுரம் சீ.டி.சி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. அநுராதபுர மாவட்டத்தில் வாழும் முஸ்லிம்கள் அனைவரையும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பட்டாளரான சட்டத்தரணி றுஸ்தி ஹபீப் அழைப்புவிடுத்துள்ளார்.

Read More