Headlines

பா.உ. நவவியினால் மேற்கொள்ளப்படவுள்ள திகழி கிராமத்தில் வடிகான்களை அமைக்கும் செயற்திட்டம்

திகழி மைதானம் உட்பட, திகழி கிராமத்தில் மழைகாலங்களில் தேங்கி நிற்கும் வெள்ள நீரை வடிந்தோட செய்வதற்கான வடிகான்களை அமைக்கும் முயற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்களினால் இச்செயற்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதன் முதற்கட்ட பணியாக கல்பிட்டி பிரதேச செயலாளருக்கு வடிகான்களை அமைப்பதற்கான செலவீனத்தைக் (Estimate) கோரி அண்மையில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

Read More

அந்தத் தகவல் தவறு! மறுக்கும் இலங்கை கடற்படை

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டதாக வௌியான தகவல் தவறு என, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்ர விஜேகுணரத்ன தெரிவித்துள்ளார். இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்களை இலக்கு வைத்து எந்தவொரு தாக்குதலும் மேற்கொள்ளப்படவில்லை என, அவர் கூறியுள்ளார். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டன. இதன்படி எல்லை தாண்டியதாக கூறப்படும் 12 மீனவர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. மேலும் இவர்கள் பயணித்த படகுகளும் கடற்படையினரால் சேதப்படுத்தப்பட்டதாக இந்திய ஊடகங்கள்…

Read More

நாச்சியாதீவு அல்-ஹிகம் அரபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா!

பிரதம அதிதியாக தாரிக் ஹாஜியார் பங்கேற்பு! அனுராதபுரம், நாச்சியாதீவு அல் – ஹிகம் அரபுக் கல்லூரியின் 02வது (அல் ஹாபிழ், அல் ஆலிம்) பட்டமளிப்பு விழா, ஞாயிற்றுக்கிழமை (22) கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில், பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதிப் பொருளாளரும் அனுராதபுர மாவட்ட அமைப்பாளருமான A.R.M.தாரிக் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தார்.

Read More

நம்பத்தகுந்த பொறிமுறை அவசியம்- செய்ட் அல் ஹுசைன்

இலங்கையில் சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்போது நம்பத்தகுந்த பொறிமுறை ஒன்று அவசியம் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். ஆணையாளர் செய்ட் அல் ஹுசைன், 29வது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆரம்ப நிகழ்வில் நேற்று பங்கேற்று இந்த கோரிக்கையை விடுத்தார். இலங்கை அதிகாரிகள் இந்த விடயத்தில் தெளிவான கலந்துரையாடல்களை மேற்கொள்ளவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இலங்கை அரசாங்கம் நிறைவேற்றிய அரசியல்அமைப்பு திருத்தம், நாட்டில் புதிய ஜனநாயக ஆட்சி தொடர்பில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது…

Read More

மீற்றர் முறை அறிமுகம்

அடுத்த வருடத்தின் நடுப்பகுதி அளவில் இலங்கையின் சகல முச்சக்கர வண்டிகளையும் வாடகை வண்டிகளையும் உள்ளடக்கும் விதத்தில் மீற்றர் கட்டண அறவீட்டு முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன் கீழ் தூரத்திற்கு அமைய திட்டவட்டமான கட்டணங்களை அறவிட நடவடிக்கை எடுக்கப்படுமென வணிக கைத்தொழில் அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் தெரிவித்துள்ளார். இதற்குரிய ஏற்பாடுகளை அமைச்சின் பொறுப்பில் இயங்கும் நிறுத்தல், அளத்தல் தரச்சேவைகள் திணைக்களம் நிறைவேற்றவுள்ளது. வாடகை வாகன கட்டண அறிவீட்டு முறை தொடர்பான சர்வதேச நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு அமைய இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

Read More

அவிசாவளை பகுதியில் 7 பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை மூடல்

அவிசாவளை பகுதியில் 7 பாடசாலைகளைத் தவிர ஏனைய அனைத்தையும் இன்று திறக்க  அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். சலாவ இராணுவ முகாமில் நேற்று முன் தினம் ஏற்பட்ட தீ விபத்தையடுத்து சீதாவக்க கல்வி வலயத்திலுள்ள 7 பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் மூடப்படும் என மேல் மாகாண கல்வி அமைச்சர் ரஞ்சித் சோமவன்ச தெரிவித்துள்ளார்.

Read More

மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிரினால் கீலியன் குடியிருப்பு கிராமத்தின் உள்ளக வீதிக்கான நிதியொதுக்கீடு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மன்னார் பிரதேச சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் அவர்களினால், நடப்பாண்டுக்கான நிதியிலிருந்து மன்னார் பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசமான கீலியன் குடியிருப்பு கிராமத்தின், உள்ளக வீதிக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, 750 மீற்றர் தூரத்திற்கு தார் வீதி போடுவதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது முடிவுறும் நிலையில், தவிசாளர் முஜாஹிர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் நிஹால் ஆகியோர் பாதையை பார்வையிட்டனர். (ன)  

Read More

தோல்வியை ஏற்றுக் கொண்ட மஹிந்த; அலரிமாரிகையிலிருந்து வெளியேறினார்

தோல்வியை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ , எதிர்க்கட்சித் தலைவருடனான சந்திப்பையடுத்து அலரிமாரிகையிலிருந்து வெளியேறியுள்ளார்.இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளின் படி (செய்தி எழுதப்படும் வரை) மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் கோறளைப் பற்று மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குள்  முடிக்கப்பட்ட வீதிகள் மற்றும் வடிகால்களை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் அமீர் அலி

கடந்த வருடம் கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் கோறளைப் பற்று மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குள்  முடிக்கப்பட்ட வீதிகள் மற்றும் வடிகால்களை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று16.07.2019 இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக விவசாய ,நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டு மக்களின் பாவனைக்காக கையளித்தார். இந்நிகழ்வில்  பிரதேச சபை தவிசாளர் அஸ்மி, பிரதேச சபை உறுப்பினர்களான அமீர் , ஜெளபர், நெளபர், ஜெஸ்மின், பாயிஸா மற்றும் வட்டாரக் குழு தலைவர்களும்…

Read More

3.6 இலட்ச கணக்குகளை முடக்கியது டுவிட்டர்

கடந்த 2015 ஆம் ஆண்டின் மத்தியிலிருந்து விதிமுறைகளை மீறி செயல்பட்ட3.6 இலட்ச கணக்குகளை முடக்கியுள்ளதாக டுவிட்டர் நிறுவனம்தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது சர்வதேச அளவில்பயங்கரவாதத்துக்கு ஆதரவை திரட்டும் வகையில் விதி முறைகளை மீறிசெயல்படுவதாக எழுந்த முறைப்பாட்டினையடுத்து கடந்த ஆண்டு முதல் 3.60இலட்ச டுவிட்டர் கணக்குகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது. விதி முறைகளை மீறி செயல்பட்டு வந்தமை உறுதிப்பட்டதையடுத்து சென்றபெப்ரவரியில் 1.25 இலட்ச கணக்குகள் முடக்கப்பட்டது. இந்த நிலையில்மேலும், 2.35 இலட்சம் டுவிட்டர் கணக்குகள் தற்போதுமுடக்கப்பட்டுள்ளன.மொத்தமாக…

Read More

அமீர் அலி தலைமையில் குழாய் கிணறு மற்றும் பாடசாலை சுற்றுமதில் அமைக்க அடிக்கல் நாட்டும் நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமமான கெவிளியாமடு மற்றும் மங்களகம பகுதிக்கு கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் மூலம் குழாய் கிணறு மற்றும் பாடசாலை சுற்றுமதில் அமைக்க அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது. கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கெவிளியாமடு பகுதியில் அமைக்கப்பட்ட குழாய் கிணறை மக்கள் பாவனைக்கு கையளிப்பட்டதுடன், மங்களகம மகா வித்தியாலயத்திற்கான சுற்றுமதில் அமைப்பதற்கான வேலைகளும் ஆரம்பித்து வைத்தார். கிராமிய பொருளாதார…

Read More

‘நாட்டில் மீண்டும் இனவாதத்தை கட்டவிழ்த்துவிட, எதிர்பார்க்கும் பைத்தியம் பிடித்த தரப்பினர்’

சிறுபான்மை இனங்களை அடையாளப்படுத்தும் பகுதிகள் நீக்கப்பட்ட தேசியக் கொடியை பயன்படுத்தி அண்மையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நாட்டில் மீண்டும் இனவாதத்தை கட்டவிழ்த்துவிட எதிர்பார்க்கும் பைத்தியம் பிடித்த தரப்பினராகவே இருக்கலாம்  என வீடமைப்பு மற்றும் சமூர்த்தி இராஜங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். முப்பது வருடக்கால யுத்தத்தின் பின்னர் எமது நாட்டில் மூவின மக்களும் சுதந்திரமாக வாழ்ந்திடும் இத்தருணத்தில் மீண்டும் சில இனவாத சக்திகளை பயன்படுத்தி மீண்டும் இனவாத செயற்பாடுகளை மேற்கொள்ள…

Read More