Headlines

அசணாகொடுவ அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக் கிளை மற்றும் அறிமுகம்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அறிமுகம் மற்றும் கட்சிக் கிளை அமைக்கும் நிகழ்வும் குருநாகல் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களிலும் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. அந்த வகையில் பண்டுவஸ்நுவர தேர்தல் தொகுதி அசணாகொடுவ கிராம மக்கள் மற்றும் இளைஞர்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்ஸில் இணைத்துக் கொள்ளும் நிகழ்வு கடந்த (17-02-2019) அ.இ.ம.கா குருநாகல் மாவட்டத்தலைவரும் சதொச பிரதி தலைவரும் முன்னால் மாகாணசபை உறுப்பினருமான எம்.என்.நஸீர் (MA) தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. அகில இலங்கை மக்கள்…

Read More

குருநாகல் வைத்தியசாலையில் தீ விபத்து

குருநாகல் போதனா வைத்தியசாலையில் இன்று அதிகாலை தீவிபத்து சம்பவம் ஒன்றுஇடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். குறித்த வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவிலேயே இந்தத் தீப்பரவல் சம்பவம்இடம்பெற்றதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனையடுத்தது தீயணைப்பு படையினரின் உதவியுடன் தீயை கட்டுப்பாட்டுக்குள்கொண்டுவந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக ஒரு மில்லியனுக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்தத்தீயினால் பல வார்டுகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் வெளிநோயாளர் பிரிவு எரிந்துள்ளதால் நோயாளிகளுக்கு தேவையானசிகிச்சைகளை வழங்குவதற்கு வேறொரு இடத்தை தெரிவு செய்துள்ளதாகவும் குருநாகல்வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் சந்தன கந்தன்கம…

Read More

கிளிநொச்சி நகரின் பிரதான மின்விளக்குகளை சூரியமின்கல விளக்குகளாாக மாற்ற ஜனாதிபதி உத்தரவு

பாறுக் சிகான் கிளிநொச்சி நகரின் பிரதான வீதியில் சூரியமின்கல வீதி விளக்குகளை பொருத்துமாறு மின்வலு மற்றும் மின்சக்தி அமைச்சருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்றைய தினம் (13) இடம்பெற்ற மாவட்டங்களின் விசேட அபிவிருத்தி குழுக் கூட்டத்தின் போதே இந்தப் பணிப்புரையை விடுத்தார். இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிளிநொச்சி நகர்பகுதியிலுள்ள வீதி விளக்குகள் இரவு நேரங்களில் ஒளிராத காரணத்தினால் மக்கள் பல்வேறுபட்ட இடர்பாடுகளை எதிர்கொண்டு வருகின்றனர். இதுவிடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு உரிய நடவடிக்கை…

Read More

புத்தளம் ஆராச்சிக்கட்டுப் பகுதியில் தொழிற்சாலை வேண்டாம் – பிக்குகள் சத்தியாக்கிரகம்

ஆராச்சிக்கட்டுப் பகுதியில் தொழிற்சாலை நிர்மானிக்க வேண்டாம் என கோரி பௌத்த பிக்குகள் தொடர்ந்து ஒன்பதாவது நாளாக இன்றும் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புத்தளம் ஆராச்சிக்கட்டுப் பிரதேச சபைக்குட்பட்ட புத்தளம்-சிலாபம் பிரதான வீதியின் ஆனைவிழுந்தாவப் பகுதியில் நிர்மானிக்கப்படவுள்ள வீட்டுக் கூரைத் தகடு உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை தடுத்து நிறுத்துமாறுக் கோரி தொழிற்சாலைக்கு முன்பாக இன்று ஒன்பதாவது நாளாக சத்தியாகிரகப் போரட்டத்தில் பௌத்த பிக்குகள் உட்பட பொது மக்கள் ஈடுபட்டிருப்பட்டுள்ளனர். (vk)

Read More

மெகசீன் சிறைச்சாலையில் மஹிந்த!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸம்மில் ஆகியோர் பார்ப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச இன்று காலை மெகசீன் சிறைச்சாலைக்கு சென்றுள்ளார். போலி அட்டர்னி பத்திரம் ஒன்றை தயாரித்து அவுஸ்திரேலிய பிரஜை ஒருவருக்கு சொந்தமாக 11 கோடி ரூபா பெறுமதியான பங்குகளை மோசடி செய்த சம்பவம் தொடர்பில் உதய கம்மன்பில விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் மொஹமட் முஸம்மில்…

Read More

புதிய மாதிரி கிராமத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அபிவிருத்திக்குழு பிரதித் தலைவருமாகிய அப்துல்லாஹ் மஹ்றூபின் முயற்சியில், சேருவில பிரதேச சபை உறுப்பினர் அன்வரின் வேண்டுகோளுக்கிணங்க, வீடமைப்பு நிர்மானத்துறை அமைச்சர் சஜீத் பிரேமதாசவின் பணிப்புரைக்கமைவாக 50 வீட்டுத் திட்டத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று (13) செல்வநகரில் இடம்பெற்றது. இந்நிகழ்வில், அப்துல்லா மஹ்றூப் எம்.பி, மூதூர் பிரதேச சபை உறுப்பினர்களான றிபாஸ் மற்றும் ஹுசைன் ஜெஸீலா மற்றும் வீடமைப்பு அதிகார சபை மாவட்டப் பணிப்பாளர், கணிய மணல்…

Read More

பொதுபலசேனா தப்பியோட்டம்!

கண்டி குருநாகல் வீதியில் மல்லவப்பிட்டியப் பகுதியில் முஸ்லிம் நபருடைய வீட்டை பலவந்தமாக பிடித்துக் கொண்டிருந்த இடத்தில் குருநாகல் மாவட்ட பொது பல சேன அமைப்பின் அலுவலகம் எனப் பெயரிடப்பட்டிருந்த விளம்பரப் பலகை இன்றிலிருந்து அகற்றப்பட்டுள்ளது. இந்த வீடு கொழும்பு உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு பிஸ்கால் மூலம் வெளியேற்ற முயற்சிகள் மேற்கொண்ட போது பலவந்தமாக திடீரென அவ்விடத்தில் பொது பலசேன அமைப்பின் மாவட்டக் காரியலம் கடந்த ஒரு வருடத்திற்கு காலத்துக்கும் மேலாக செயற்பட்டது என்பது…

Read More

பனாமா ஆவணக்கசிவில் இலங்கையர் தொடர்பு குறித்து விசாரணை

பனாமா நாட்டை தளமாக கொண்ட மொஸாக் ஃபொன்செக என்ற சட்ட நிறுவனத்தின் கசிந்துள்ள ஆவணங்களில் இலங்கையர்கள் தொடர்புபட்டுள்ளார்களா என்பது குறித்து அரசாங்கம் வெளிப்படையாக விசாரணைகளை முன்னெடுக்குமென அரச தொழில் முயற்சிகள் பிரதி அமைச்சர் எரான் விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சீஷெல்ஸ் நாட்டுடன் மிக நெருக்கமான உறவுகளைக் கொண்டிருந்தமையால் இது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும், அரசாங்கம் என்ற வகையில் நாட்டின் சட்டங்கள், சர்வதேச சட்டங்கள், பணப்பரிமாற்றச் சட்டங்கள் என்பன மீறப்பட்டுள்ளனவா என்பது குறித்து…

Read More

எனக்கு விசுவாசமானவர்களை ஆளும்கட்சியில் இணைத்துக் கொள்ள முயற்சி!– மஹிந்த

எனக்கு விசுவாசமான தரப்பினர் மீது வழக்குகளைத் தொடர்ந்து அவர்களை அச்சுறுத்தி ஆளும் கட்சியில் இணைத்துக் கொள்ள முயற்சிக்கப்படுகின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். எனினும், இனி வரும் காலங்களில் எதிர்க்கட்சியில் இருக்கும் எவரும் ஆளும்கட்சியில் இணைந்து கொள்ள மாட்டார்கள். ஆளும் கட்சியுடன் இணைந்து கொள்ளும் தரப்பினர் ஏற்கனவே இணைந்து கொண்டுள்ளனர். அரசாங்கம் வெறுமனே அவர் இணைகின்றார். இவர் இணைகின்றார் என பிரசாரம் செய்கின்றது. இனி எதிர்க்கட்சியின் எவரும் ஆளும் கட்சிக்கு ஆதரவளிக்கப் போவதில்லை. எனக்கு…

Read More

தமிழ் நாட்டு தேர்தல்: வைகோ அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையவில்லை எனில், இனி தேர்தலில் போட்டியிட மாட்டோம் என வைகோ தெரிவித்துள்ளார் என இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், நடை பெறவுள்ள சட்ட மன்றத் தேர்தலில் தேமுதிக – மக்கள் நலக்கூட்டணி- தமாகா கூட்டணி சுமார் 150 இடங்களில் வெற்றி பெறும் என நம்புகிறோம். இது போன்ற நல்ல ஒரு கூட்டணி வாய்ப்பு மீண்டும்…

Read More

எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது குறித்து சபாநாயகரிடம் கேள்வி எழுப்பப்படும்!- அனுரகுமார

திர்க்கட்சித் தலைவர் யார் என்பது குறித்து இதுவரையில் அறிவிக்கப்படவில்லை. எனவே எதிர்வரும் வாரத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வுகளின் போது எதிர்க்கட்சித் தலைவர் குறித்து சபாநாயகரிடம் கேள்வி எழுப்பப்படும். எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியிருந்தன. இந்தக் கேள்விகளுக்கு இரண்டு மாதங்கள் கடந்தும் சபாநாயகர் பதிலளிக்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் குறித்து திடமான ஓர் தீர்மானத்தை எடுக்குமாறு சபாநாயகரிடம் கோரப்படவுள்ளது. 19ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதனை அரசியல் சாசன…

Read More

சிறைச்சாலைகளில் நடத்திய திடீர் சோதனைகளில் 73 கையடக்க தொலைபேசிகள்- 54 சிம்கள் கைப்பற்றப்பட்டன

இவ்வருடம் சிறைச்சாலைகளை திடீர் சோதனைகள் நடத்தியதில் இதுவரை 73 கையடக்க தொலைபேசிகளும் 54 சிம் அட்டைகளும் கைப்பற்றப்பட்டன என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பிரதான சிறைச்சாலைகளில் பயன்படுத்தப்படும் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் போதை பொருட்களை கைப்பற்றும் நோக்கில் இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டது. நீதிமன்ற அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரில் அனைத்து சிறைச்சாலைகளிலும் இத்திடீர் சுற்றிவளைப்பு நடத்தப்பட்டது. ஜனவரி மாதம் தொடக்கம் ஏப்ரல் மாதம் வரையில் நாட்டின் பிரதான சிறைச்சாலைகளில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் 73…

Read More